04/05/2026
Walters Road Public School (WRPS) வளாகத்தில் நடைபெற்ற Western Sydney Tamil Study Centre சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வின் இனிய தருணங்களைப் பதிவு செய்த காணொளியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
இந்த ஒன்றுகூடல், எங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றிணைந்து, WRPS வளாகத்தில் எங்கள் கல்விப் பயணத்தின் தொடக்கத்தை சிறப்பாகக் கொண்டாடிய ஒரு அருமையான நிகழ்வாக அமைந்தது.
எங்கள் அழைப்பை அன்புடன் ஏற்று, இச்சிறப்பு ஒன்றுகூடலில் கலந்து கொண்டு, எங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகளைச் சந்தித்த Walters Road Public School பள்ளி முதல்வர் திருமதி சமந்தா கில்லார்ட் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்களின் நேரம், ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்.
இந்த நிகழ்வை அர்த்தமுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமைத்த அனைத்து பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேற்கு சிட்னியின் இதயப்பகுதியில் தமிழ் மொழி, பண்பாடு, விழுமியங்கள் மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்கும் எங்கள் பணியில், அனைவரும் இணைந்து தொடர்ந்து பயணிப்போம்.
காணொளியைப் பார்த்து, விருப்பமிட்டு, பகிர்ந்து, WSTSC-ஐ ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
----
We are delighted to share a special video capturing the memorable Special Assembly of Western Sydney Tamil Study Centre at Walters Road Public School (WRPS).
This assembly was a wonderful opportunity for our students, teachers, parents, committee members, volunteers, and community well-wishers to come together and celebrate the beginning of our journey at WRPS.
Our heartfelt thanks and sincere appreciation go to Ms. Samantha, Principal of Walters Road Public School, for kindly accepting our invitation and participating in the assembly. We are truly grateful for her time, support, and encouragement, and for taking the opportunity to meet our teachers, students, parents, and community well-wishers.
We also extend our sincere thanks to all parents, students, teachers, committee members, volunteers, and supporters who made this event meaningful and successful.
Together, we continue our commitment to promoting Tamil language, culture, values, and community connection in the heart of Western Sydney.
Watch, like, share, and support WSTSC.
4 likes. "Special Assembly at WRPS | Western Sydney Tamil Study Centre"