ANBAN Educational Service

  • Home
  • ANBAN Educational Service

ANBAN Educational Service Educational solution for Pre KG to PhD Educational Consultations, Study Planning, College admission Counselling, organized new course

01/01/2026

Welcome @ 2026
Happy New Year

₹1000 பெற விண்ணப்ப படிவம்...கிராமப்புற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை பெறுவதற...
15/11/2024

₹1000 பெற விண்ணப்ப படிவம்...

கிராமப்புற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கு ஊரகத் திறனாய்வு தேர்வு டிசம்பர் 14 நடைபெறுகிறது...

ஜேஇஇ (JEE main) தேர்விற்கு விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகிறது..ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளந...
08/11/2024

ஜேஇஇ (JEE main) தேர்விற்கு விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகிறது..

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக ஜேஇஇ (JEE)தேர்வு நடத்தப்படுகிறது. 2025-26 கல்வி ஆண்டிற்கான ஜேஇஇ தேர்விற்கு விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகிறது.

வரும் நவம்பர் 22-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்படும். இத்தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி, தேவையான ஆவணங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

JEE Mains 2025 Registration Online : ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வாக ஜேஇஇ (JEE)தேர்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ தேர்வு முதன்மை மற்றும் பிரதான தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படும். இந்நிலையில், ஜேஇஇ முதன்மை தேர்விற்கு தேசிய தேர்வு முகமை-வின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஜேஇஇ தேர்வு என்றால் என்ன?
இந்தியாவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஐஐடி(IIT), என்ஐடி (NIA), ஐஐஐடி(IIIT)ஆகியவை முதன்மையாக உள்ளது. இந்த மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவு தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. அதேவே ஜேஇஇ தேர்வு ஆகும். ஜேஇஇ முதன்மை (JEE Mains) மற்றும் ஜேஇஇ பிரதான தேர்வு (JEE Advanced)ஆகும்.

ஜேஇஇ முதன்மை தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் நடத்தப்படுகிறது. ஜேஇஇ பிரதான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஐஐடி மூலம் நடத்தப்படுகிறது.

ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிரதான தேர்வு எழுத தகுதியானவர்கள். நாடு முழுவதும் இருக்க 23 ஐஐடி-களில் சேர்க்கைக்காக பிரதான தேர்வு நடத்தப்படுகிறது.

JEE Mains 2025 தேர்வு முறை :
ஜேஇஇ முதன்மை தேர்வில் இந்த ஆண்டு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, Section - A 20 வினாக்கள் கொண்டு இருக்கும். இவை கொள்குறி வகை கேள்விகள் (Multiple Choice Questions) ஆகும். Section - B பகுதியில் ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் 5 Numerical Value வகை கேள்விகள் கேட்கப்படும். 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும்.

JEE Mains 2025 தகுதிகள் என்ன?
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இந்தாண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுபவர்களும் ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத தகுதியானவர்கள். மேலும், 3 ஆண்டுகள் டிப்ளமோ முடித்தவர்களும் இத்தேர்வை எழுதலாம்.

JEE Mains 2025 தேர்வு தேதிகள் :
ஜேஇஇ முதன்மை தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்வு (JEE Mains 2025 Session 1) விண்ணப்பங்கள் அக்டோபர் 28-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 22-ம் தேதி வரை பெறப்படும். இதற்கான தேர்வு ஜனவரி 22-ம் தேதி முதல் தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறும். இதற்கான முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகும்.

இரண்டாம் கட்ட தேர்வு (JEE Mains 2025 Session 2) விண்ணப்பங்கள் ஜனவரி 31-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 24-ம் தேதி வரை பெறப்படும். இதற்கான தேர்வு ஏப்ரல் 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெறும். முடிவுகள் ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும்.

JEE Mains 2025 விண்ணப்பிப்பது எப்படி?
ஜேஇஇ முதன்மை தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் jeemain.nta.nic.in என்ற என்டிஏ-வின் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.1,000, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஒபிசி பிரிவினருக்கு ரூ.900, பெண்களுக்கு ரூ.800 மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?
படி 1 : jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : முகப்பு பக்கத்தில் உள்ள JEE (Main) – 2025 Session-1 என்று இருப்பதை கிளிக் செய்யவும்.
படி 3 : அதில் “New Registration" என்பதை கிளிக் செய்யவும்.
படி 4 : உள்ளே சென்றதும் தேவையான ஆவணங்களை உள்ளிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
படி 5 : விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
விண்ணப்பதாரரின் புகைப்படம்
விண்ணப்பதாரரின் கையொப்பம் போடப்பட்ட புகைப்படம்
விண்ணப்பதாரரின் 10,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
வகுப்பு பிரிவு சான்றிதழ்
அடையாள அட்டை
ஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க விரும்புகிறவர்கள் ஜேஇஇ நுழைவு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 1 வருடம் தொழில் பழகுநர் பயிற்சி!  |   |   Educational Service
15/06/2024

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 1 வருடம் தொழில் பழகுநர் பயிற்சி!

| | Educational Service

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் PhD படிக்கும் வாய்ப்புகல்வி , வேலைவாய்ப்பு தகவல்களுக்கு ANBAN Educational Service  ம...
11/06/2024

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் PhD படிக்கும் வாய்ப்பு

கல்வி , வேலைவாய்ப்பு தகவல்களுக்கு ANBAN Educational Service முகநூல் பக்கத்தை follow செய்யவும்

பணியாளர் தேர்வாணையம் மற்றும் வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி நான் முதல்வன் திட்டம் தமிழ்நாடு மாநிலத்தில் முதலமைச்சர் மு.க. ...
11/06/2024

பணியாளர் தேர்வாணையம் மற்றும் வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி நான் முதல்வன் திட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பெரும் ஈடுபாட்டால் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு பணி எளியோரும் பெற இத்திட்டம்
மாணவர்கள் நன்கு பயன் படுத்தி கொள்ளவும்

கல்வி , வேலைவாய்ப்பு தகவல்களுக்கு ANBAN Educational Service முகநூல் பக்கத்தை follow செய்யவும்

கட்டண அறிவிப்பு
07/03/2024

கட்டண அறிவிப்பு

என்ஜினீயர் பணி வாய்ப்புகள்
15/02/2024

என்ஜினீயர் பணி வாய்ப்புகள்

31/12/2023

Happy NEW Year

சென்னை நிவாரண மையம்மிக் ஜாம் புயல்
05/12/2023

சென்னை நிவாரண மையம்
மிக் ஜாம் புயல்

12ஆம் வகுப்பு (+2) பொது தேர்வு அட்டவணை 2024
02/12/2023

12ஆம் வகுப்பு (+2) பொது தேர்வு அட்டவணை 2024

Address

By-Pass Road, Vandigate,

608602

Opening Hours

Monday 11:30 - 18:30
Tuesday 11:30 - 18:30
Wednesday 11:30 - 18:30
Thursday 11:30 - 18:30
Friday 11:30 - 18:30
Saturday 04:30 - 18:00
Sunday 11:30 - 13:00

Telephone

+919843512286

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANBAN Educational Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share