Lakshmi Tamil Learning Center

Lakshmi Tamil Learning Center

Share

Lakshmi Tamil Learning Center has been serving since 1987 to teach TAMIL(தமிழ்) to the Tamil community in Atlanta area Lessons based on Singapore syllabus
3.

Tamil is a language predominantly spoken in southern India. Being a classical language that is more than 2,500 years old, it features many works of literature and has footholds enshrined in strong cultural traditions. It is no wonder that the Tamil immigrants want their offsprings to know the language. Lakshmi Tamil Learning Center has been serving this cause since 1987 to the Tamil community in A

Lakshmi Tamil School Annual Day 2025 04/06/2025

https://tinyurl.com/LTSAnnualDay2025

*நன்றி!*

நம் அழைப்பை ஏற்று, "நான் ஏன் தமிழ் கற்கிறேன்?" என்ற தலைப்பில் மாணவர்களுக்கான எளிய மொழியில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர் திருமிகு. கிரேஸிற்கு நன்றி.

நிகழ்ச்சியை அழகுறத் தொகுத்து வழங்கிய திருமிகு. ஹேமா ராமச்சந்திரன், வரவேற்புரை வழங்கிய திருமிகு, சிந்து, நன்றியுரை வழங்கிய திருமிகு. திவ்யா மற்றும் தொழில்நுட்பப் பொறுப்பைத் திறம்படச் செய்த திருமிகு. அகிலா/சுரேஷுக்கு நன்றி.

நிகழ்ச்சி ஏற்பாடுகளில் மிகுந்த பங்காற்றிய முதல்வர் திருமிகு. லக்ஷ்மி மற்றும் பின்னணியில் உழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.

அனைத்துக்கும் மேலாக நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்கள், பின்னூட்டம் வழங்கியோர் அனைவருக்கும் சிறப்பு நன்றி.

சான்றிதழ் பெறவிருக்கும் மாணவர்களுக்குப் பாராட்டுகள்!

அன்பும் ஆதரவும் அளித்துவரும் பெற்றோர்களே!
முதல்வர் உரையில் திருமிகு. லக்ஷ்மி விடுத்த வேண்டுகோளின்படி உங்களில் பலரைத் தன்னார்வ ஆசிரியப் பணியாற்ற அழைக்கிறோம்.

நன்றி!

Lakshmi Tamil School Annual Day 2025 லட்சுமி தமிழ் பயிலும் மையம், அட்லாண்டா, வட அமெரிக்காஆண்டு விழா – சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2025, கிழக்கு நேரம்: காலை 10:00 மணி...

04/05/2025

அட்லாண்டா லட்சுமி தமிழ்ப் பள்ளியின் 38ஆவது ஆண்டு விழா இணைய வழியில் நடைபெறவுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

நாள்: சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2025
நேரம்: 10 - 12:30 மணி (கிழக்கு நேரம்)

இந்த ஆண்டு விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவிருக்கும் திருமிகு. வி. கிரேஸ் பிரதிபாவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றி!

முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள்

மனத்தை ஆண்ட லட்சுமி தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா (மார்ச் 2024)! : பனிப்பூக்கள் 04/15/2024

பனிப்பூக்களில் லட்சுமி தமிழ்ப் பள்ளியின் ஆண்டுவிழாச் செய்தி।

தனித்துவமான உரையாடல் நடையில் செய்திக் குறிப்பு எழுதிய ஆசிரியர் திரு. ஹரி பாலகிருஷ்ணனுக்குப் பாராட்டுகளும் நன்றியும்!

விழாவிற்குத் தலைமையேற்று, “குழந்தைகளைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் அருமையாக உரையாற்றிய அன்பிற்கினிய கவிஞர் அனுமாவிற்குச் சிறப்பு நன்றி!

மனத்தை ஆண்ட லட்சுமி தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா (மார்ச் 2024)! : பனிப்பூக்கள் இரு நண்பர்கள் வலைச்செயலி மூலம் வெகு நாட்களுக்குப் பின்னர் உரையாடுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றாகப் படித்து, வே.....

03/27/2024

லட்சுமி தமிழ் பயிலும் மையம் - 37ஆம் ஆண்டு விழா!

"லட்சுமி தமிழ் பயிலும் மையம்" திருமதி. லஷ்மி ஷங்கர் அவர்களால் அட்லாண்டாவில் 1987ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அவரது தலைமையில் இப்பள்ளி இன்று 23 தன்னார்வல ஆசிரியர்கள், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, டென்மார்க், லக்சம்பர்க், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆதரவளிக்கும் பெற்றோர்கள் எனத் தழைத்தோங்கி நிற்கிறது.

37ஆம் ஆண்டு விழாவில்:
பன்னாட்டு மாணவமணிகளின் பல்சுவை நிகழ்ச்சி

நிகழ்ச்சித் தொகுப்பு: திருமதி. ஜெயலட்சுமி வெங்கடேசன்

விழாத் தலைமை: நல்லாசிரியர் அனுசுயாதேவி (கவிஞர் அனுமா)
- பன்முகத் திறமையாளர்
- தமிழ்நாடு 3, 4, 5ஆம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல் ஆசிரியர் குழு உறுப்பினர்
- பல விருதுகள் பெற்றவர்
- வளவனூர் சாலையம்பாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்
- மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி அளிப்பது, வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது, நல்வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பது, கலைகளைப் பயிற்றுவிப்பது போன்ற சிறப்பான பணி
- 30 ஆண்டுகளாகச் சமூகப்பணி

சிறப்புரை: "குழந்தைகளைக் கொண்டாடுவோம்"

"உயிரனைய குழந்தைகளும் உள்ளம் நெகிழும் புத்தகங்களும்" என்பதைத் தம் விருப்பமாகக் கொண்டுள்ள நல்லாசிரியர் எங்கள் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழாவிற்குத் தலைமை ஏற்பதில் நாங்கள் மிகவும் பெருமையும் உவகையும் கொள்கிறோம்.

நாள்: சனிக்கிழமை, மார்ச் 30, 2024
அமெரிக்கா: காலை 10 - பிற்பகல் 12:30 மணி (கிழக்கு நேரம்)
இந்தியா: இரவு 7:30 - 10 மணி

விழாவைக் காண:
https://tinyurl.com/Youtube-LTS-AnnualDayProg2024

- ஆசிரியர்களும் மாணவர்களும்
லட்சுமி தமிழ் பயிலும் மையம்

02/10/2024

**இன்றைய நாளை இனிமையாக்கிய மாணவி**

கடந்த ஆண்டு ஆறு வயது கூட நிரம்பாத ஒரு சிறுமி, கனடாவிலிருந்து லட்சுமி தமிழ்ப்பள்ளியில் என் மழலையர் வகுப்பில் சேர்ந்தாள். மிகவும் அமைதியான பெண். அவளது இந்தச் சிறு வயதில் எழுத்துப் பயிற்சிகளை அவளால் சரியாகச் செய்ய முடியுமா என்று முதலில் யோசித்தேன்.

ஆனால், இம்மாணவி ஒவ்வொரு வாரமும் எழுத்துப் பயிற்சி மற்றும் "சீசா" மென்பொருள் செயற்பாடுகளைக் கெடு முடிவதற்குள் ஒப்படைத்து வருகிறாள். அழகான கையெழுத்து, தெளிவான குரல் பதிவு. இணைய வகுப்பில் முழுக் கவனம் செலுத்துவாள். எந்தச் சிதறலும் இருக்காது, அவளை நான் ஒரு முறை கூட, "கணினித் திரையைப் பார். நேரே உட்கார். ஆடக் கூடாது." என்று சொன்னதில்லை.

அவள், குடும்பத்துடன் நேற்று விடுமுறைக்கென இந்தியா சென்றடைந்திருக்கிறாள். அவளது தாயார், "இணையத் தொடர்பைச் சரி செய்ய வேண்டும், அடுத்த வாரம் முதல் என் மகள் வகுப்புக்கு வருவாள்" என்று செய்தி அனுப்பி இருந்தார். இந்தியாவிலிருந்து வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. தாயார் வீட்டில் கற்றுக் கொடுத்தாலே போதும்.

இன்றைய சூம் வகுப்பில் இம்மாணவி இணைவதைக் கண்டதும் எனக்கு வியப்பு. அவளது தாயார், "களைப்பாக இருக்கிறது, ஜெட்லேக் இருக்கிறது, ஆனால் வகுப்புக்குப் போகாமல் இருக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள். தொலைபேசியில் இணைய இணைப்பை ஓரளவு ஏற்படுத்தி, அவளை உட்கார்த்தி இருக்கிறேன்" என்றார்.

நான் மாணவியிடம், "பரவாயில்லை, ஓய்வெடுத்துக் கொள். அடுத்த வாரம் பார்ப்போம்." என்றேன்.

"இல்லை" என்று தலையாட்டிய அவள், செருகிய கண்களுடன் வகுப்பைக் கவனித்தாள். வகுப்பின் இறுதியில் நாங்கள் இயல்பாகப் பேசிக் கொள்ளும் பகுதியில், அங்கிருந்த "தலையாட்டி" பொம்மை ஒன்றை ஆட்டிக் காட்டிச் சன்னமான குரலில் பேசியது அழகாக இருந்தது.

ஒரு குழந்தை வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதைக் காட்டிலும் ஓர் ஆசிரியரை மகிழ்விக்கக் கூடியது வேறு என்ன இருக்க முடியும்?

- இராஜி ராமச்சந்திரன்
லட்சுமி தமிழ்ப்பள்ளி, அட்லாண்டா

10/18/2023

*அட்லாண்டா லட்சுமி தமிழ்ப் பள்ளி மாணவன் செல்வன். ஹரிசரணின் ஆத்திசூடிக் காணொளி*

இவ்வாண்டு எங்கள் அட்லாண்டா லட்சுமி தமிழ்ப்பள்ளி ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கிய கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி, வாசிப்பின் தேவையை மாணவர்களுக்கு எளிய முறையில் எடுத்துரைத்தார். அத்தோடு மாணவர்களுக்கென, தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்கம் [ Tamilal Inaivom - UTP] நிறுவனர்/இயக்குனர் கவின் கலைவேந்தர் சத்யநாராயண ராஜ் பாலகுரு அவர்களின் ஆத்திசூடி நூல் படிகளை (130) அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். இந்நூல் எழுத்தாக்கத்தில் ஆனந்தி உதவியுள்ளார். இந்நூலில் ஆத்திசூடிக்கான உரையும் விளக்கமும் குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளன.

இந்நூலைப் பயன்படுத்தி, எங்கள் பள்ளியின் தன்னார்வ ஆசிரியர் திருமதி. ஜெயலட்சுமி, தம் மகன் செல்வன். ஹரிசரணுக்கு ஆத்திசூடி கற்பித்துள்ளார். செல்வன். ஹரிசரண் ஆத்திசூடியை மனனம் செய்து ஒப்பிக்கும் காணொளியில் லட்சுமி தமிழ்ப்பள்ளி பெருமை கொள்கிறது! மகனுக்கும் தாயாருக்கும் மனமகிழ் வாழ்த்துகள்!

ஆத்திசூடி நூலைப் பரிசளித்த சகோதரி ஆனந்திக்கும், நூலாசிரியர் கலைவேந்தர் சத்யநாராயண ராஜ் பாலகுரு அவர்களுக்கும் மீண்டும் எங்கள் நன்றி!

அமெரிக்காவில் 36 ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழ்ப் பள்ளி! இணையத்தால் உலகம் முழுவதும் விரிவாக்கம 05/18/2023

https://a1tamilnews.com/World/a-tamil-school-that-has-been-operating-in-america-for-36/cid10939276.htm

அமெரிக்காவில் 36 ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழ்ப் பள்ளி! இணையத்தால் உலகம் முழுவதும் விரிவாக்கம அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டாவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி தமிழ் பயிலும் மைய...

Photos from Lakshmi Tamil Learning Center's post 05/05/2023
Want your school to be the top-listed School/college in Norcross?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


4798 Buford Highway
Norcross, GA
30071

Opening Hours

11am - 2pm