07/09/2026
Dear TAGDV Family,
A heartfelt THANK YOU to all the members, performers, volunteers, and generous donors for your incredible participation and involvement in the FeTNA convention in Edison, NJ! We would also like to extend our sincere gratitude to NJTaP for entrusting us with the opportunity to be a part of this wonderful event.
The EC team truly recognizes and appreciates all your help and hard work. Because of your dedication, the TAGDV brand stands exceptionally tall and proud in front of all the Tamil sangams today.
As proud Co-founders of FeTNA 39 years ago, our TAGDV family has once again impressed all member sangams by setting high standards and delivering top-quality performances.
We requested FeTNA for the opportunity to host the convention next year. While the FeTNA board has decided to award next year's convention to GATS, the incredible talents, unity, and strengths we showcased today have paved a strong path. We are highly optimistic that this will lead us to host the convention the following year!
We also want to take this opportunity to extend our warmest congratulations to GATS and wish them immense success for next year's event. Please know that TAGDV eagerly looks forward to being a part of your convention and stands ready to offer our full help and support!
Thank you once again for your unwavering support and for making us all so proud.
With immense gratitude,
TAGDV EC Team
அன்பான TAGDV குடும்பத்தினருக்கு, வணக்கம்!
எடிசன், நியூ ஜெர்சியில் நடைபெற்ற FeTNA விழாவில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்கள், கலைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்! இந்தச் சிறப்பான நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பை எங்களுக்கு அளித்தமைக்காக NJTaP-க்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் ஈடுபாட்டையும், கடின உழைப்பையும் ECகுழு மனதாரப் பாராட்டுகிறது. உங்கள் அனைவரின் பேராதரவாலும் உழைப்பாலும், இன்று அனைத்து தமிழ்ச் சங்கங்கள் மத்தியிலும் நமது TAGDV-யின் புகழ் மிகவும் கம்பீரமாக ஓங்கி ஒலிக்கிறது.
39 ஆண்டுகளுக்கு முன் FeTNA-வை இணைந்து நிறுவிய பெருமைக்குரிய அமைப்பான நமது TAGDV, இந்த விழாவில் நமது செயல்பாடுகளாலும் கலைநிகழ்ச்சிகளாலும் மற்ற அனைத்து தமிழ் சங்கங்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த ஆண்டு விழாவை நாம் நடத்த வேண்டும் என்று FeTNA-விடம் கோரிக்கை வைத்திருந்தோம். எனினும், அடுத்த ஆண்டு விழாவை நடத்தும் வாய்ப்பை GATS-க்கு வழங்க FeTNA நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
இந்தத் தருணத்தில், அடுத்த ஆண்டு விழாவினை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ள GATS-க்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, விழா மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறோம். உங்களது விழாவில் TAGDV நிச்சயம் பங்கேற்கும் என்பதையும், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்!
இருப்பினும், இன்று நாம் வெளிப்படுத்திய நமது திறமைகளும் ஒற்றுமையும் பலமும், அதற்கடுத்த ஆண்டு விழாவை நாம் நடத்துவதற்கான சிறப்பான வாய்ப்பை நிச்சயம் உருவாக்கித் தரும் என்று உறுதியாக நம்புகிறோம்.
உங்கள் அனைவரின் ஈடு இணையற்ற அன்பிற்கும், ஆதரவிற்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
TAGDV EC Team