04/08/2025
தீபத்தை தீபத்தைக் கையளித்தல் - நூறு நாளில் $𝟭,𝟲𝟭𝟳,𝟬𝟬𝟬 கொடுத்த நன்கொடையாளர்களை சந்தித்து அவர்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட தமிழ்ச் சமூக மையம் நோக்கிய பயணம்
டொராண்டோ, March 30, 2025 – "தீபத்தைக் கையளித்தல் " என்ற இந்தத் திட்டம், கனடா தமிழ் சமூகத்தைச் சேர்ந்த 100 பேரின் குரல்களை, கதைகளையும் அனுபவங்களையும் ஒன்றிணைத்த ஒரு முக்கியமான முயற்சியாக அமைக்கப்பட்டது.
தமிழ்ச் சமூக மையத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, இன்று 100 உறுதியான நபர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு மக்கள் சக்தியாக மாறியுள்ளது.
இவர்கள் அனைவரும், நம் சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்த உறுதியளித்துள்ளனர். 2025 மார்ச் 30 அன்று ஸ்கார்பரோ மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வு, மன உறுதி, சமூக நலனுக்கான தலைமைத்துவம் மற்றும் தமிழ் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக புதிய தலைமுறைக்கு வித்திடும் நிகழ்வாக அமைந்தது.
புதிய வரலாற்றை எழுதும் வகையில், இந்த நிகழ்வில் பங்கேற்ற 99 கொடையாளர்களும், தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்காக மொத்தமாக $𝟭,𝟭𝟭𝟳,𝟬𝟬𝟬 வழங்குவதாக உறுதியளித்தனர்.
இதற்குத் மேலும் துணையாக, சமூகத்தின் நல்வாழ்வுக்காக முன்வந்த ஒரு நன்மைநோக்கிய நாயகர் கோனேஸ்வரன் குடுமப்த்தினர் தனது பங்களிப்பாக அரைமில்லியன் டொலரை ($𝟱𝟬𝟬,𝟬𝟬𝟬) வழங்கினார்கள் . அவருக்கு மேடையிலேயே சிறப்பு மரியாதையும் நன்றியும் தெரிவித்தோம் .
எமது 100 நாள் வாழ்வுப் பயணத்துக்கும், என்னுடைய வகுப்பு தோழன் நண்பர் இலங்கோவன் பரமநாதன் அவர்களுக்கும் இடையிலான நினைவுப் பிணைப்புடன் ,நினைவுகூரும் விதமாக, எமது குடும்பம் சார்பாக $𝟭𝟬,𝟬𝟬𝟬 நன்கொடை அளிக்கப்பட்டது.இது, நினைவின் ஆழத்தையும், பகிர்ந்த நற்பண்புகளையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு செயல் என அமைந்தது.
இதனையடுத்து, இந்த முயற்சியின் மொத்த நிதி உறுதிமொழி $𝟭,𝟲𝟭𝟳,𝟬𝟬𝟬 ஆக உயர்ந்தது – இது தமிழ் சமூகத்திற்கு ஒரு புதிய எதிர்காலத்திற்கான ஒளிக்கதிராக இருக்கிறது.
மேலும் பலர் நிகழ்வில் நன்கொடையாளர்களாக இணைந்து கொண்டனர் . தமிழ்ச் சமூக மையம் அமைய தொடர்ந்தும் பயணிப்போம்
அன்புடன்
நவஜீவன் அனந்தராஜ்