D80 Division T Tamil Toastmasters

D80 Division T Tamil Toastmasters Division T - The first Tamil Division under District 80

02/09/2026

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வழங்கும் பாரதியார் விழா 2026!

போட்டி நடைபெறும் நாள்
🎤 **செப்டம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை**
காலை **7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை!**

🌺 **செப்டம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை**
பிரம்மாண்டமான **பாரதியார் விழா!**

மதியம் **2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை!**

📍 நிகழ்விடம்:
**உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்,
எண் 2, பீட்டி சாலை, சிங்கப்பூர் 209954**

மேலும் விவரங்களுக்கு
உங்கள் குழந்தையின் பள்ளித் தமிழ் ஆசிரியரைத் தொடர்புகொள்ளுங்கள்.


30/08/2026

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் சிறப்பு நிகழ்ச்சி "சுழலும் கவியரங்கம்". DivT பேச்சாளர் மன்ற உறுப்பினர்களின் புது முயற்சி.

🌺 பாரதியார் விழா 2026 – போட்டிகள் 🇸🇬தமிழ்க் கலை, இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தை மாணவர்களிடையே வளர்க்கும் இனிய நோக்கில்,...
27/08/2026

🌺 பாரதியார் விழா 2026 – போட்டிகள் 🇸🇬

தமிழ்க் கலை, இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தை மாணவர்களிடையே வளர்க்கும் இனிய நோக்கில், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் (TLCS) சார்பில் பாரதியார் விழா 2026 நடைபெற உள்ளது.

🌟 அன்பான மாணவர்களே,
உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், தமிழின் இனிமையை அனுபவிக்கவும், இப்போட்டிகளில் உற்சாகமாகப் பங்கேற்க வாருங்கள்! பாடல், பேச்சு, கவிதை, கலை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, உங்கள் படைப்பாற்றலையும் திறமையையும் வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

👨‍👩‍👧 அன்பார்ந்த பெற்றோர்களே,
உங்கள் குழந்தைகளை ஊக்குவித்து, அவர்களின் ஆர்வத்திற்கும் திறமைக்கும் சிறகுகள் கொடுங்கள். போட்டி மற்றும் பதிவு தொடர்பான விவரங்களை அறிய, உங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளியின் தமிழ் ஆசிரியரைத் தொடர்புகொண்டு, அவர்களின் மூலம் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

📢 தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் (TLCS) சார்பில் போட்டி தொடர்பான விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

🌟 தமிழை நேசிப்போம்!
🌱 தமிழ் இளைய தலைமுறையின் திறமைகளை வளர்ப்போம்!

🇸🇬 பாரதியார் விழா 2026
வாருங்கள்! கலந்து கொள்ளுங்கள்!
உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்!
வெற்றி பெறுங்கள்! 🌺

ஔவையார் விழாதமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் நிகழ்வாக, அரங்கேறவிருக்கும் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் ஏற்று நடத்தும் ஔவை...
21/08/2026

ஔவையார் விழா

தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் நிகழ்வாக, அரங்கேறவிருக்கும் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் ஏற்று நடத்தும் ஔவையார் விழா வரும் ஞாயிறு மாலை 4 மணி முதல் 7 மணி வரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற இருக்கிறது.

அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள். விழாவை மேலும் சிறப்பியுங்கள்.

அனைவரும் வருக! தமிழ் அமுதம் பருக!

நன்றி !🙏




அனைவருக்கும் வணக்கம்! 🙏🏻🙏🏻இயூ டீ பேச்சாளர் மன்றம் & தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழக மேம்பட்டப் பேச்சாளர் மன்றம் இணைந்து வழங்...
19/08/2026

அனைவருக்கும் வணக்கம்! 🙏🏻🙏🏻

இயூ டீ பேச்சாளர் மன்றம் & தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழக மேம்பட்டப் பேச்சாளர் மன்றம் இணைந்து வழங்கும்

✨ ஆகஸ்ட் மாத மன்றக் கூட்டம் ✨

கருப்பொருள்: *முகிழ்*

இந்த ஆகஸ்ட் மாதக் கூட்டம், நமது முன்னாள் மாவட்ட இயக்குனர் பேச்சாளர் *கேத்திரபாலன் மூக்காண்டி* அவர்கள் தலைமையில் நடைபெறும் *சிறப்பு கவியரங்கம்* இடம்பெறுவதால் மேலும் சிறப்புப் பெறுகிறது.

கவிஞர்களுக்கிடையே நடைபெறும் இந்தக் கவியரங்கத்தை கண்டு ரசிக்கவும், அவர்களின் படைப்பாற்றலால் உந்துதல் பெற்று, உங்கள் கற்பனைத் திறனுக்கு ஒரு வாய்ப்பளித்து நீங்களும் கவிதைகள் எழுதத் தொடங்கவும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!

📅 30.08.2026 | ஞாயற்றுக்கிழமை
⏰ 4.00 PM – 7.00 PM
📍 இயூ டீ சமூக மன்றம் ( #02-03)

கவிதை மழையில் நனைய வாருங்கள்…

📞 தொடர்புக்கு:
கார்த்திக் சிதம்பரம் – 9241 0109
இசக்கி ராஜா – 8834 6453

அன்புடன்,
இயூ டீ மற்றும் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழக மேம்பட்டப் பேச்சாளர் மன்ற செயற்குழு

அனைவருக்கும் வணக்கம்🙏. தெம்பனீஸ் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் ஆகஸ்ட் மாத மன்ற கூட்டத்திற்கு  அனைத்து பேச்சாளர் மன்ற உறுப...
19/08/2026

அனைவருக்கும் வணக்கம்🙏. தெம்பனீஸ் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் ஆகஸ்ட் மாத மன்ற கூட்டத்திற்கு அனைத்து பேச்சாளர் மன்ற உறுப்பினர்களும் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

*கருப்பொருள் : களிகூரல்*

தேதி: 21-08-2026
நாள் : வெள்ளிக்கிழமை
நேரம்:7:00 PM -9:30 PM
இடம்: Tampines Hub, Level 3,Function Hall( Lift Lobby F )
Singapore -528523

நன்றி 🙏.

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்!பைந்தமிழ் பேச்சாளர் மன்றத்தின் ஆகஸ்ட் மாதக் கூட்டத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.இன...
14/08/2026

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்!

பைந்தமிழ் பேச்சாளர் மன்றத்தின் ஆகஸ்ட் மாதக் கூட்டத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இன்றைய “விழுதுகள்” கருப்பொருள், நம் வேர்களையும் பாரம்பரியத்தையும் போற்றும் ஒரு சிறப்பான நினைவூட்டல்.

உறுப்பினர்கள், விருந்தினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நல்வரவு.

வேர்களைப் போற்றுவோம்; விழுதுகளாய் வளர்வோம்!
தமிழில் பேசுவோம்! ஒன்றுபட்டு உயர்வோம்!

நன்றி. வணக்கம்.

"நம் பால்ய நினைவுகளை...பள்ளித் தோழமைகளை...நமக்காய் துடித்த ஓர் நெஞ்சை....நம்மைத் துடிக்க வைத்த ஓர் அன்பை...-நாம் என்றென்...
14/08/2026

"நம் பால்ய நினைவுகளை...
பள்ளித் தோழமைகளை...
நமக்காய் துடித்த ஓர் நெஞ்சை....
நம்மைத் துடிக்க வைத்த ஓர் அன்பை...-
நாம் என்றென்றும் போற்றிடும்
பகைக் காணா நட்பை....
திசைக்காட்டும் ஒரு அம்பாக....
ஆகஸ்டில்.... நட்போடு வருகிறோம்....!"

அன்பான, பேச்சாளர் மன்ற நண்பர்களே....! உலகின் பல நாடுகள் தத்தமது இறையாண்மையைக் கொண்டாடும் இந்த மாதத்தில்... அந்த இறையாண்மைக்கு இன்றியமையாத ஒன்றாக இருப்பது.... நட்பே... என்பதால்... நாங்களும் கருப்பொருளாய் மேன்மையான *"கேண்மை"* யை வைத்திருக்கிறோம்....!

வழக்கம் போல் உங்களின் அன்பான ஆதரவோடு... நட்பினைக் கொண்டாட நாம் அனைவரும் ஒன்றிணைவோம்....!

*நாள்: 22 ஆகஸ்டு 2026, மாலை 3.30 முதல் 6.30 குள்*
*இடம்: சிரங்கூன் சமூக மன்றம்,*
*தளம் #5, அறை 3,*
*10 வடக்கு அவென்யூ2,*
*சிங்கப்பூர் - 555877*

Hello everyone!!We are delighted to inform you that the *TLCS Bilingual Chapter Meeting for August* will be held on *Sun...
14/08/2026

Hello everyone!!

We are delighted to inform you that the *TLCS Bilingual Chapter Meeting for August* will be held on *Sunday, 16 August 2026, from 9:30 AM to 12:30 PM* at *SINDA, 1 Beatty Road, Singapore 209943*.

This month’s meeting will also feature a special *Debate Master Segment* on the topic:

*“AI: A Threat or a Boon for Society?”*

It will be an engaging and thought-provoking segment in which our speakers will share diverse perspectives on Artificial Intelligence and its impact on society.

Everyone is warmly invited to join us by *9:30 AM on Sunday* for an inspiring meeting filled with learning, confidence, and fellowship.

*All guests are welcome!** For guest visits, kindly inform our *VPE Thiruganam-** in advance.

Address

100 Victoria Street, #01-02 National Library Building
Singapore
188064

Website

Alerts

Be the first to know and let us send you an email when D80 Division T Tamil Toastmasters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category