Tamil Primary Worksheets

Tamil Primary Worksheets Free Tamil worksheets for Primary and Secondary Students.

23/07/2026

தமிழ்மொழி கற்றலில் ஆர்வமும் ஈடுபாடும்: தாய்மொழிகளின் கருத்தரங்கு 2026-இல் புதியவற்றைக் கண்டறிய ஓர் அரிய வாய்ப்பு!

07/07/2026

🎓 வெற்றித் தமிழ்

PSLE தமிழ் மொழிக்கான விரைவு பயிற்சி வகுப்புகள்

📚

🌟 6 வார இறுதி பயிற்சி வகுப்புகள்

🗓️ July: 11, 18, 26
🗓️ August: 1, 8, 29

🕓 நேரம்: மாலை 4.00 மணி – 6.00 மணி

📖 பாடப்பகுதிகள்

✅ வேற்றுமை உருபுகள்
✅ அடைமொழி / எச்சம்
✅ ஒலி வேறுபாடு
✅ செய்யுள் / பழமொழி
✅ கருத்து விளக்கப் படம்
✅ கருத்தறிதல்
✅ கலந்துரையாடல்
✅ வாய்மொழித் தேர்வு / உரையாடல் பகுதி
✅ கட்டுரை

🚀 சிறப்பு அம்சங்கள்

⭐ சொற்களஞ்சியம் & வாக்கிய அமைப்பு (Vocabulary Enhancement & Sentence Structure)

⭐ படைப்பாற்றல் எழுத்துத் திறன் மேம்பாடு (Creative Writing)

⭐ தனிப்பட்ட எழுத்துப் பயிற்சி மற்றும் ஆசிரியரின் கருத்து

⭐ தேர்வு நேர மேலாண்மை மற்றும் உத்திகள் (Time Management & Strategies)

⭐ தவிர்க்க வேண்டிய பொதுவான பிழைகள் (Common Mistakes to Avoid)

🎯 எங்கள் நோக்கம்

PSLE தமிழ் மொழித் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற, மாணவர்களின் மொழித்திறன், எழுத்துத்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்திட கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

📍 இடம்

Thoughts Box Tuition Centre
Blk 325 Woodlands Street 32
#01-141 Singapore

PSLE-யில் சிறந்த மதிப்பெண்கள் பெற உடனே பதிவு செய்யுங்கள்!

04/07/2026

தொடக்கநிலை இணைமொழிகள்
தமிழில் பிழையின்றி எழுதுவோம்.
தமிழில் பேசுவோம். தமிழில் வாசிப்போம்.

இணைமொழிகள்

கண்ணும் கருத்துமாக - கவனமாக

ரகு தேர்வுக்கு கண்ணும் கருத்துமாக படித்து, முதலாம் இடத்தை பிடித்தான்.

அரக்க பறக்க - அவசரமாக
ராணி பள்ளிக்கு தாமதமாக கிளம்பியதால் , அரக்க பறக்க பள்ளியை நோக்கி
ஓடினாள் .

மூலை முடுக்கு - எல்லா இடங்களிலும்

கவிதா கைக் கடிகாரத்தை வீட்டில் எங்கேயோ வைத்து விட்டாள்.
பின்பு அதை மூலை முடுக்கில் எல்லாம் தேடி கடைசியில் கண்டுபிடித்தாள்.


கல்வி கேள்வி - படிப்பு

ரகு ஆறாம் வகுப்பு படிக்கிறான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான்.

PSLE Tamil worksheets தொடக்கநிலை 6
27/06/2026

PSLE Tamil worksheets தொடக்கநிலை 6

13/06/2026

13/06/2026

தொடக்க நிலை P5 / PSLE


பழமொழி

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

மனதில் அன்பு இருந்தால், செய்ய முடியாத செயல்களையும் செய்து முடிக்கலாம்.

கெடுவான் கேடு நினைப்பான்.

தீங்கு செய்ய நினைப்பவனுக்கு தீமையே உண்டாகும்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

வாய்ப்புகள் கிடைக்கும் போதே, அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவர் பொறை இருவர் நட்பு.

இருவரில் ஒருவர் பொறுமையாக நடந்து கொண்டால் நட்பு நீடிக்கும்.

எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.

திறமைசாலிகளாக இருந்தாலும் அவர்களையும் அடிக்கடி ஊக்குவிக்க வேண்டும்.

TLLPC - Social Media Competition 2026TLLPC - Social Media Competition 20263 mins estimated time to completeInstructionsப...
25/05/2026

TLLPC - Social Media Competition 2026

TLLPC - Social Media Competition 2026
3 mins estimated time to complete

Instructions
போட்டிக்குரிய குறிப்பு: பதிவுகள் யாவும் அன்பு என்னும் கருப்பொருளை மையப்படுத்தி அமைந்திருக்க வேண்டும்.

படைப்புத் தெளிவாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருக்கவேண்டும்.

பிள்ளைகள்/மாணவர்கள் புத்தாக்கத்துடன் படைப்பைப் படைத்தல் சிறப்பு.


பாலர் பள்ளிப் பிள்ளைகளுக்குரிய குழந்தைப் பாடல் பாடும் போட்டி
போட்டியின் தலைப்பு - பாட்டுப் பாட வா!
•பங்கேற்பாளர்கள் - 4முதல் 6 வயது நிரம்பிய பிள்ளைகள்
•பிள்ளைகள் பாடலை ஓர் ஒளிக்காட்சியாகப் பதிவு செய்யவேண்டும்.
•பிள்ளைகள் ஒளிக்காட்சியின் தொடக்கத்தில் தங்கள் பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.
•ஒளிக்காட்சி 2 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குரிய கதை சொல்லும் போட்டி
போட்டியின் தலைப்பு - ஒரு கதை சொல்லட்டுமா?
•பங்கேற்பாளர்கள் – தொடக்கப்பள்ளி 1முதல் 6வரையிலான மாணவர்கள்
•மாணவர்கள் கதையை ஓர் ஒளிக்காட்சியாகப் பதிவு செய்யவேண்டும்.
•மாணவர்கள் ஒளிக்காட்சியின் தொடக்கத்தில் தங்கள் பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.
•ஒளிக்காட்சி 5-6 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

உயர்நிலைப்பள்ளி & பல்கலைக்கழகப் பகுமுகநிலை மாணவர்களுக்குரிய கவிதை எழுதும் போட்டி

போட்டியின் தலைப்பு – கவிதைப் பூங்கா

•பங்கேற்பாளர்கள் – உயர்நிலைப்பள்ளி 1முதல் 4வரையிலான மாணவர்கள் & பல்கலைக்கழப் புகுமுகநிலை மாணவர்கள்
•கவிதை 10 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
• மாணவர்கள் தாங்கள் எழுதிய கவிதையை வாசித்து ஒளிக்காட்சியாகப் பதிவு செய்யவேண்டும். தட்டச்சு செய்யப்பட்ட கவிதையையும் இணைத்துப் பதிவேற்றம் செய்யவேண்டும்.
• ஒளிக்காட்சி இரண்டு நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்

வெல்லுவோம்! பரிசுகளை அள்ளுவோம்! மீண்டும் வந்துவிட்டது!

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு,

தமிழ் வளர்ச்சிக்குழு, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக ‘ஒரு கதை சொல்லட்டுமா?’ என்னும் தலைப்பில் மெய்ந்நிகர்வழிக் கதை சொல்லும் போட்டிக்கு ஏற்பாடு செய்யவுள்ளது. அதில் உங்கள் பிள்ளைகள் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

இப்போட்டி குறித்த விவரங்கள் பின்வருமாறு:

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குரிய
கதை சொல்லும் போட்டி

போட்டியின் தலைப்பு - ஒரு கதை சொல்லட்டுமா?

படைப்புத் தெளிவாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருக்கவேண்டும்.
பிள்ளைகள் புத்தாக்கத்துடன் படைப்பைப் படைத்தல் சிறப்பு.
பங்கேற்பாளர்கள் – தொடக்கநிலை 1முதல் 6வரை பயிலும் மாணவர்கள்
மாணவர்கள் கதையை ஓர் ஒளிக்காட்சியாகப் பதிவு செய்யவேண்டும்.
மாணவர்கள் ஒளிக்காட்சியின் தொடக்கத்தில் தங்கள் பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.
ஒளிக்காட்சி 5-6 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.
போட்டியில் பங்குபெறுவோர் அதற்குரிய ஒளிக்காட்சிப் பதிவைக் கீழ்க்காணும் இணைய முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
https://go.gov.sg/tpc-sm-competition2026

* பதிவுகள் யாவும் அன்பு என்னும் கருப்பொருள் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.

பதிவை அனுப்பிவைக்க வேண்டிய இறுதி நாள்
17 ஜூலை 2026!


#நாவில்தமிழ்நாளும்தமிழ்


#வெல்லுவோம்பரிசுகளைஅள்ளுவோம்

Address

Woodlands
Singapore

Telephone

+6581808716

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Primary Worksheets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category