23/05/2026
உயர்நிலை 1 உயர்தமிழ் முகாம் 2026
மாணவர்களின் தமிழ்ப்பற்று, ஒற்றுமையுணர்வு, பாரம்பரிய விழிப்புணர்வு ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இம்முகாம், அனைவருக்கும் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. பாரம்பரிய உணவுகள் தயாரித்தல், கபடி, சிக்காட்டம் போன்ற நம் பண்பாட்டு நடவடிக்கைகள் மூலம் மாணவர்கள் தமிழர் மரபின் செழுமையையும் குழு ஒருங்கிணைப்பின் மகத்துவத்தையும் மகிழ்ச்சியுடன் கற்றுணர்ந்தனர். கற்றலும் பண்பாடும் கலந்த இந்நிகழ்வு, மாணவர்களின் திறமையையும் உற்சாகத்தையையும் வெளிப்படுத்திய இனிய நினைவாக அமைந்தது. மாணவர்களை ஊக்கப்படுத்தி முகாமில் கலந்துகொள்ள அனுப்பிய ஆசிரியர்களுக்கு நன்றி.
19/05/2026
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இந்திய நிகழ்த்துகலையின் 'மேடையேறும் மொட்டுகள்' 🎭 என்னும் நிகழ்ச்சி, சனிக்கிழமையன்று நடைபெற்றது. தம் வகுப்புகளில் கற்றுக்கொண்ட கலைவித்தைகளை மொத்தமாக அரங்கில் இறக்கிப் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது 🌟 இந்திய நிகழ்த்துகலை மாணவர்குழு 👩🎓👨🎓.
கல்வியாளர்கள் 👩🏫👨🏫 மற்றும் பெற்றோர்கள்முன் 👨👩👧👦 மேடையில் தன்னம்பிக்கையோடு 💪 மொட்டுகள் படைத்த கலைப்படைப்புகள் 🎨 அரங்கத்தினர் பாராட்டுகளையும் 👏 கைதட்டல்களையும் 🥳 வாரிக்குவித்தன.
முத்தாய்ப்பாக 🎯, 'சிலம்பும் தமிழும்' ⚔️ என்னும் மேடை நாடக நிகழ்வில் தமிழர் வீரத்தின் 🛡️ அடையாளமாக, என்றும் மனதில் நிற்கும் ராணி வேலுநாச்சியாரையும் 👑 குயிலியையும் 🕊️ அவர்கள் போற்றிப் பாதுகாத்த தற்காப்புக்கலையான போர்த்திறமிக்க சிலம்பாட்டக் கலையையும் 🌀 மேடையில் உயிர்ப்பித்தது 🔥 பார்வையாளர்களை மெய்சிலிர்க்கவைத்தது ✨.
10/05/2026
இந்திய நிகழ்த்து கலைகளின் சங்கமமாக எதிர்வரும் மே மாதம் 16 ஆம் தேதி ஒளிரவிருக்கும் 'மேடையேறும் மொட்டுகள்' நிகழ்ச்சிக்கான விறுவிறுப்பான ஒத்திகையில் ஈடுபடும் நிகழ்த்துகலை வகுப்பு மாணவர்கள்!
08/05/2026
மொழிக்குப் பாலமாக இருங்கள்! ஒவ்வொரு மாணவருக்கும் வழிகாட்டியாகத் திகழுங்கள்! இப்போதே விண்ணப்பியுங்கள்!
08/05/2026
நற்றமிழ் உரைக்களம் 2026
நற்றமிழ் உரைக்களம் 2024-ஆம் ஆண்டு முதலில் தொடங்கியபொழுது 10 பள்ளிகள் கலந்துகொண்டனர், 2025-இல் இரண்டாமாண்டு நடைபெற்றபொழுது 20 பள்ளிகள் கலந்துகொண்டனர். மூன்றாமாண்டாக இந்த ஆண்டு 2026-இல், 30 பள்ளிகள் கலந்துகொண்டனர். உரைக்களப் போட்டிக்கு தயாரித்தல் தொடர்பாகக் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி மாணவர்களுக்கான பயிலரங்கு நடைபெற்றது. பயிலரங்கில் கலந்துகொண்ட 30 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மார்ச்சு மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரசண்ட் பெண்கள் பள்ளி, ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி, ஜூரோங் மேற்கு உயர்நிலைப்பள்ளி, தேசியத் தொடக்கக் கல்லூரி (உயர்நிலை), யீசூன் டவுன் உயர்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகள் இன்று இறுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டார்கள். மேலும் 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தகுதிச்சுற்றுக்கான சிறப்புப் பேச்சாளர் விருதினைப் பெற்றனர்.
இறுதிச்சுற்றுப் போட்டியில், ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வெற்றிக்கோப்பையை வென்றனர். தேசியத் தொடக்கக் கல்லூரி (உயர்நிலை) மாணவி இறுதிச்சுற்றுக்கான சிறந்த பேச்சாளர் விருதினை வென்றார்.
18/04/2026
களரி நிறுவனத்துடன் இணைந்து 'சிலம்பும் தமிழும்' என்னும் மேடை நாடகப் படைப்பிற்கான பயிற்சிப்பட்டறையில் தங்களது கதாபாத்திரங்களை வாரந்தோறும் மெருகேற்றும் இந்திய நிகழ்த்துகலை மற்றும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய மாணவர்கள்.
18/04/2026
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் "கபடி வழியாக நம் பண்பாட்டை அறிதல்" (CTK, culture through kabaddi competition) என்னும் கபடிப்போட்டிக்கான முதல்வாரப் பயிற்சியில் உற்சாகத்துடன் களம்கண்ட மாணவ அணிகள்.
15/04/2026
நிழல்கள் பேசின, கதைகள் ஒளிர்ந்தன ✨
இன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய மாணவர்கள் நிழற்பாவைக் கூத்துப் பயிலரங்கில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர் — மரபு,பண்பாடு, படைப்பாற்றல் ஒன்றிணைந்த மறக்கமுடியாத அனுபவம் பெற்றனர் 🎭✨