சுடாக்கோம் தமிழ்ச் சங்கம்

  • Hem
  • Sverige
  • Stockholm
  • சுடாக்கோம் தமிழ்ச் சங்கம்

சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் (Stockholm Tamil Sangam – STS), சுவீடனில் வாழும் தமிழர்களுக்கென்று ஒரு ஒருங்கிணைந்த சமூக மேடையாக உருவானது.

🙏🙏🎉🎉
09/09/2026

🙏🙏🎉🎉

🧠📱 *குழந்தைகளும் டிஜிட்டல் உலகமும்!*கார்ட்டூனிலிருந்து TikTok வரை… குழந்தைகளின் டிஜிட்டல் பயணம் பற்றிய ஒரு விழிப்புணர்வு...
09/09/2026

🧠📱 *குழந்தைகளும் டிஜிட்டல் உலகமும்!*

கார்ட்டூனிலிருந்து TikTok வரை… குழந்தைகளின் டிஜிட்டல் பயணம் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்வு.

🎙️ *Dr. Samson Nivins*
Clinical Neuroscientist
Karolinska Institutet

📅 செப்டம்பர் 27, 2026
⏰ 16:30 – 17:30
💻 இணையவழி நிகழ்வு

🎟️ STS உறுப்பினர்களுக்கு இலவசம்

“*திரைகள் தான் பிரச்சனையா? அல்லது இது ஒரு பெரிய பிரச்சனையின் ஒரு பகுதியா?*”

அனைத்து STS உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்! 🌱

பதிவு செய்ய,
https://forms.cloud.microsoft/e/98HPC8AwsA

நன்றி,
செயற்குழு,
சுடாக்கோம் தமிழ்ச் சங்கம்

🚀 *Startup Science – தவறவிடாதீர்கள்!*💡 உங்கள் *Startup கனவை* நனவாக்க நினைக்கிறீர்களா?உங்கள் எண்ணத்தை தொழிலாக மாற்றுவதற்க...
02/09/2026

🚀 *Startup Science – தவறவிடாதீர்கள்!*

💡 உங்கள் *Startup கனவை* நனவாக்க நினைக்கிறீர்களா?
உங்கள் எண்ணத்தை தொழிலாக மாற்றுவதற்கான உத்வேகமும் அனுபவமும் பெறுங்கள்!

*Kissflow Founder & CEO திரு. Suresh Sambandam* அவர்களின் தொழில்முனைவோர் பயணத்தை நேரில் கேட்டு, கற்றுக்கொண்டு, புதிய தொடர்புகளை உருவாக்குங்கள். 🌟

📅 *செப்டம்பர் 19
காலை 10:00–மதியம் 1:00*
📍 *Årsta Folkets Hus*

பதிவு செய்ய,
https://forms.cloud.microsoft/e/y64nLmi8Hw

நன்றி,
செயற்குழு,
சுடாக்கோம் தமிழ்ச் சங்கம்

வணக்கம்,சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் நடத்தவிருக்கும் கோடை விழாவிற்கான பதிவுகள் தொடங்கப்படுகிறது. https://forms.cloud.micros...
06/08/2026

வணக்கம்,

சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் நடத்தவிருக்கும் கோடை விழாவிற்கான பதிவுகள் தொடங்கப்படுகிறது.
https://forms.cloud.microsoft/e/1iNnupK48s

உங்கள் உடல் வலிமையையும் மன உறுதியையும் மேம்படுத்த ஒரு அரிய வாய்ப்பு.

உங்கள் வருகையை விரைவாக பதிவு செய்து போட்டிகளுக்கான பயிற்சியை தொடங்குங்கள்.

நன்றி,
சுடாக்கோம் தமிழ்ச் சங்கம்🎊
செயற்குழு
ஒற்றைமையே பலம் 🎉

☘️☘️☘️சித்திரைத் திருவிழா 2026 🌸🌸🌸அன்புத் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்!🙏🙂நமது சுடாக்கோம் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத்...
29/04/2026

☘️☘️☘️சித்திரைத் திருவிழா 2026 🌸🌸🌸

அன்புத் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்!🙏🙂

நமது சுடாக்கோம் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழா 2026 உங்கள் அனைவரின் பேராதரவோடும், உற்சாகத்தோடும் மிகச் சிறப்பாகவும் இனிமையாகவும் நிறைவு பெற்றது.

இந்த விழாவினை மாபெரும் வெற்றியாக்கிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விழாவில் அரங்கேறிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் அமைந்திருந்தன. மேடையில் தங்களின் வியக்கத்தக்கத் திறமையை வெளிப்படுத்திய சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துக் கலைஞர்களுக்கும் எங்களது பாராட்டுக்கள். உங்கள் நிகழ்ச்சிகள் விழாவிற்கு உயிர்க் கொடுத்தன.

✨தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழாவினை மங்களகரமாகத் தொடங்கி வைத்த மகளிர்க் குழுவிற்கு மிக்க நன்றி.

✨அறிவார்ந்த கருத்துக்களால் அரங்கையே அதிரச் செய்த பட்டிமன்ற பேச்சாளர்களுக்குப் பாராட்டுகள்.

✨கண்கவர் நடனங்களால் எங்களை வசீகரித்த ஸ்கை கேர்ள்ஸ், ரிதம் சகிகள், ரிதம் குயின்ஸ், தமிழ் மலர்கள், ஃபோக் ஸ்டார்ஸ், தமிழ் கேர்ள்ஸ், சுடாக்கோம் சிஸ்டர்ஸ் டீம் மற்றும் சென்னை பசங்க ஆகிய குழுவினருக்குப் பாராட்டுகள்.

✨அழகிய சிறுகதைகள் மற்றும் நெறிக் கதைகள் மூலம் நற்பண்புகளைப் போதித்த யஷ்ரிதா சுரேஷ், சாஷ்வி ஸ்ரீதர் ஆகியோருக்கு எங்களது அன்புகள்.

✨நம் மண்ணின் கலையைப் பறைசாற்றிய பொம்மலாட்டம் மற்றும் அதிரடி ஆதி இசையால் உற்சாகப்படுத்திய சுவீடன் பறைக் கலைஞர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

✨இசை மழையில் நனைய வைத்த தி பாய்ஸ் பேண்ட் குழுவிற்கும் பாராட்டுகள்.
இறுதியாக, பொதுக்குழு கூட்டம் மற்றும் விழா நிறைவு வரை எம்மோடு இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.

✨மேடை அலங்காரம் முதல் விழா இறுதி வரை, விழாவின் ஒவ்வொரு கட்டத்திலும் அயராது உழைத்த எமது சங்கத்தின் தோழர்களுக்கு (விழாக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள்) தனிப்பட்ட நன்றிகள்.

✨விழாக்களுக்கு நிதி உதவி அளிக்கும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எமது பணிவான வணக்கங்கள்.

விற்பனை நிலையம் அமைத்த அனைவருக்கும்,
சுவையான உணவு வழங்கிய Lika Foods-கும் மிக்க நன்றி.

விழாவின் பொன்னான தருணங்களை மிக அழகாகப் படம் பிடித்த Memories by Yogesh-க்கு மனமார்ந்த நன்றிகள்.

வசந்த காலத்தின் இந்தத் தொடக்கம் போலவே, நம்மிடையே இருக்கும் இந்த ஒற்றுமையும் அன்பும் என்றும் தொடரட்டும்.

அடுத்தடுத்த நிகழ்வுகளில் உங்களை மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

நன்றி 🙏🙂
செயற்குழு
சுடாக்கோம் தமிழ்ச் சங்கம்
"ஒற்றுமையே வலிமை!"

11/04/2026

🌼 *சித்திரைத் திருவிழா 2026 – காணொளி அழைப்பு #2* 🌼

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாருங்கள்!!

🔏 *திருவிழாவிற்குப் பதிய:*
[https://forms.cloud.microsoft/e/C7XJMtDABs]

🎭*கலை நிகழ்வுகளில் பங்கேற்க:*
[https://forms.cloud.microsoft/e/ufg4UXfEZR]

🗓️ கலை நிகழ்ச்சிகளுக்குப் பதிய கடைசி தேதி : *ஏப்ரல் 12*

நன்றி 🙏
*சுடாக்கோம் தமிழ்ச் சங்கம்!*

Adress

Stockholm

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Kontakta Skolan/högskolan

Skicka ett meddelande till சுடாக்கோம் தமிழ்ச் சங்கம்:

Genvägar

Dela