ரமழான் எதிர்ப்பார்க்கும் இறையச்சம்
By: Ash - Ashkan Rifdhi
Al Madinah Online Academy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Madinah Online Academy, School, Medina.
ரமழானைப் பயன்படுத்துவோம்
By: Ash- Muksith Salafi BA (R) - IUM
22/03/2023
20/03/2023
உடலில் வலி ஏற்படும்போது
أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ.
அஊது பில்லாஹி வகுத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு.
பொருள் : அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் ஆற்றலை கொண்டு நான் உணர்கின்ற அஞ்சுகின்ற (இந்த வலியின்) தீமையை விட்டு பாதுகாவல் தேடுகிறேன். தனது கையை உடலில் வலியுள்ள பகுதியின் மீது வைத்து ‘பிஸ்மில்லாஹி’ என்று மூன்று தடவை சொல்ல வேண்டும். பிறகு ஏழு தடவை மேற்கூறப்பட்டதை ஓதவேண்டும்.
ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்.
19/03/2023
ஒரு ஈத்தம் பழத் துண்டை தர்மம் கொடுத்தாவது நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்.
(புஹாரி)
16/03/2023
قال رسول اللهﷺ
العين حق،
ولو كان شيء سابق القدر سبقته العين،
وإذا استغسلتم فاغسلوا.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணூர் உண்மையானது. கலாக்–கத்ரை முந்தக் கூடிய ஏதாவது ஒன்றிருக்குமென்றிருந்தால் அது கண்ணூராகத் தான் இருக்கும். மேலும், குளிக்க வேண்டி ஏற்பட்டால் குளித்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி).
நூல்: முஸ்லிம் – 1719.
குறிப்பு: கண்ணூர் யார் மூலம் ஏற்பட்டது எனத்தெரிய வந்தால், அவரிடம் வுழூச் செய்யும்படிக் கூறி, அவர் வுழூச் செய்து விட்டு எஞ்சிய நீரை கண்ணூர் ஏற்பட்டவர் குளிக்க வேண்டும். (மேற்கூறப்பட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்).
யாவற்றையும் நன்கறிந்தவன் மாபெரும் கிருபையாளன் அல்லாஹ் ஒருவனே!
14/03/2023
பெண்களைப் போலவே நடக்கும் ஆண்களையும் ஆண்கள் போல நடக்கும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்’ எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 5885 )
13/03/2023
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه وسلم فِي مَجْلِسٍ يُحَدِّثُ الْقَوْمَ جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ مَتَى السَّاعَةُ فَمَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحَدِّثُ، فَقَالَ بَعْضُ الْقَوْمِ سَمِعَ مَا قَالَ، فَكَرِهَ مَا قَالَ، وَقَالَ بَعْضُهُمْ بَلْ لَمْ يَسْمَعْ، حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَالَ "" أَيْنَ ـ أُرَاهُ ـ السَّائِلُ عَنِ السَّاعَةِ "". قَالَ هَا أَنَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَإِذَا ضُيِّعَتِ الأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ "". قَالَ كَيْفَ إِضَاعَتُهَا قَالَ "" إِذَا وُسِّدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ "".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, “மறுமை நாள் எப்போது?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்குப் பதில ளிக்காமல்) தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர், “நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; ஆயினும், அவர் கேட்ட கேள்வியை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை” என்று கூறினர். வேறுசிலர், “நபியவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுறவில்லை” என்றனர்.
நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துவிட்டு, “மறுமை நாளைப் பற்றி கேட்டவர் எங்கே?” என்று வினவினார்கள். உடனே அவர் “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான்தான்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நம்பகத் தன்மை பாழ்படுத்தப் பட்டால் மறுமை நாளை நீர் எதிர்பார்க்கலாம்” என்று சொன்னார்கள். அவர், “அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தகுதியற்றவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும்போது, நீர் மறுமை நாளை எதிர்பாரும்” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி
09/03/2023
Peace be upon him.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Medina