05/09/2026
#சூரா அல்கஃபும் படிப்பினையும்..
#அல்லாஹ் வழங்கிய அருளுக்கு
நன்றி செலுத்தாமல்
தனது செல்வத்தால் பெருமை கொண்டு நிராகரித்த தனது நண்பனுக்கு
நல்ல நண்பன் நினைவுகூறிய விடயம்..
🌿 قَالَ لَهٗ صَاحِبُهٗ وَهُوَ يُحَاوِرُهٗۤ
"அதற்கு அவனுடைய நண்பன், அவனுடன் உரையாடிக் கொண்டே கூறினான்.."
اَكَفَرْتَ بِالَّذِىْ خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ سَوّٰٮكَ رَجُلًا
(18:37)
“உன்னை #மண்ணிலிருந்து படைத்து, பின்னர் #விந்துத் துளியிலிருந்து உருவாக்கி,
அதன் பின்னர்
#உன்னை முழுமையான மனிதனாக ஆக்கியவனை நீ நிராகரிக்கிறாயா?”
மனிதன் முதலில் இல்லாதவனாக இருந்தான்
பின்னர் அல்லாஹ்வால் படைக்கப்பட்டான்.
ஒருவன் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டவன் அல்ல.
அவனுடைய இருப்பு வேறு எந்தப் படைப்பினாலும் சுயமாக உருவாக்கப்பட்டதுமல்ல.
எனவே, தன்னை இல்லாமையிலிருந்து உருவாக்கிய படைப்பாளியை அறிந்து, அவனுக்கு அடிபணிய வேண்டும்.
அகந்தையும் பெருமையும் அல்லாஹ்வை நிராகரிக்கும் பண்பாகும்...
மனிதன் தனது செல்வம், அழகு, அறிவு, அதிகாரம் இது போன்ற வாழ்க்கையில் கிடைத்த அனைத்து விதமான அருட்கொடைகளையும் கண்டு வியக்கும்போது, தன்னுடைய ஆரம்ப நிலையை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
தன்னிலை மறந்து படைத்தவனை நிராகரிக்கும் வகையிலான
வார்த்தைகளை பேசுவதையும் செயட்பாடுகளையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
நமது உருவாக்கத்தின் ஆரம்ப நிலையை பற்றி சிந்தித்து அல்லாஹ்விற்கு நன்றியுடன் செயற்பட வேண்டும்..
அல்லாஹ்வின் அருட்கொடைகளை அனுபவித்துக் கொண்டே,
அவற்றை வழங்கியவனை மறந்து அவனுக்கு நன்றி செலுத்த மறுக்கும் போது
அவ்வருளே மனிதனுக்கு எதிராய் திரும்பி சோதனையாகி விடும்.!
எனவே,
பெருமை , அகந்தை போன்ற இழி குணங்களை தவிர்த்து..
எல்லாவற்றிற்கும்
நான் நான் என்று பெருமை பேசுவதை தவிர்த்து
அல்லாஹ் வழங்கிய அனைத்து விதமான அருளுக்கும் நன்றி செலுத்த வேண்டும்.
நண்றியுணர்வுடன் செயற்பட வேண்டும்.
நன்றி செலுத்துவது ஒரு இபாதாவாகும்.!