06/08/2021
DsporA to DiasporA
English: https://dspora.no/2021/08/06/dspora-to-diaspora-eng/
தமிழ்: https://dspora.no/2021/08/06/dspora-to-diaspora-tamil/
DsporA Tamil Archive அதன் பெயரை “DiasporA Tamil Archives” (DTA) என பெயர் மாற்றம் செய்கின்றது. “Diaspora” எனும் இயல்நிகழ்ச்சியே (phenomenon) “DsporA” என்ற பெயரைத் தேர்ந்தெடுப்பதற்கான மூல காரணம் ஆகும். ஆனால் அதற்குரிய இணையத்தள முகவரி (domain) கிடைக்காததால், www.dspora.no எனும் இணையத்தள முகவரியில் 22. யூலை 2020 அன்று வெளியிடப்பட்டது. அதன் மூலம் இந்த தளத்தின் பெயரும் “DsporA” ஆனது.
DsporA Tamil Archive வழமைக்கு மாறாக எழுதப்பட்ட “diaspora” எனும் சொல்லால் ஏற்படக்கூடிய சவாலை ஏப்ரல் மாதம் 2021ம் ஆண்டு அடையாளம் கண்டது. இதனால், பயனர்கள் இணைய தேடுபொறிகளில் இந்த வலைத்தளத்தைக் கண்டறிவதில் கடினம் உண்டாகலாம் என்பதை இனம் கண்டது. இந்த சவாலை தீர்க்கும் செயல்முறையாக, www.diasporatamil.no என்ற புதிய இணையத்தள முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது.
இருப்பினும், உருவான இந்த சவால் ஆவணப்படுத்தல் (documentation) தொடர்பான ஆங்கிலம், தமிழ் மற்றும் நோர்வேயிய மொழிச் சொற்கள் பற்றிய செறிவான மற்றும் அறிவூட்டும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது. “DiasporA Tamil Archives” என்பதற்கான தமிழ் பெயரைக் கண்டறிய வழிவகுத்ததுடன் புலம்பெயர் எனும் இயல்நிகழ்ச்சி (phenomenon of diaspora), பண்டைய தமிழ் கடல் வணிகம் மற்றும் நாணயவியல் பற்றிய ஒரு புரிதலையும் உருவாக்கியது. இந்தப் பயணத்தில் நாம் அறிந்து கொண்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றோம்.
“DiasporA Tamil Archives” என்பது தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தல், பேணிப் பாதுகாத்தல், கடத்துதல் மற்றும் பரப்புதல் உள்ளடங்கிய ஒரு காப்பக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தளமாகும். இது தமிழ் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தல் (documentation) மற்றும் பேணிப் பாதுகாத்தல் (preservation) துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஈடுபாடுள்ளவர்களுக்கும் ஒரு வள மையமாகவும், ஒரு «சமூக மற்றும் பங்கேற்பு” காப்பகமாகவும் (community and participatory archives)[1] இருக்கும்.
இந்தத் தளம் சமூக அடிப்படையிலான பேணிப் பாதுகாத்தல் முன்முயற்சியில் (community-based preservation movements) ஈடுபட்டிருக்கும் தமிழ் தனிநபர்கள், குழுக்கள், அமைப்புகள், மற்றும் ”சமூக மற்றும் பங்கேற்பு” களஞ்சியங்களாகிய (community and participatory repositories) தமிழ் ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களிற்கு இடையில் ஒத்துழைப்புகளை (collaborations) ஊக்குவிக்கிறது. இந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தளங்களிற்கு இடையிலான பல வகையான ஒத்துழைப்புகள் (collaborations) புலம்பெயர் தமிழ் பாரம்பரியம் உட்பட தமிழ் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்கவும் கொண்டாடவும் ஒரு வள வலையமைப்பை உருவாக்கும்.
இந்தக் கட்டுரை தொடர் கட்டுரையாக வெளியிடப்படும். இது தமிழ் ஆவணப்படுத்தல் பண்பாட்டின் வரலாறு மற்றும் இலக்கிய பின்னணி மூலம் ”DsporA முதல் DiasporA வரை” எனும் பரிணாமத்தை விளக்கும்.
அடுத்த பாகம்: ”Diaspora”எனும் இயல்நிகழ்ச்சி (phenomenon)