Organization of Tamil Cultural Activities and Charity Centre

Organization of Tamil Cultural Activities and Charity Centre Organization of Tamil Cultural Activities and Charity Centre, Roermond, The Netherlands
Stichting Tamil Cultureel Activiteits en Hulp Centrum
13-12-2001

11/09/2026

- செல்வன் ஜாதவன் கோடீஸ்வரநாதன் - பிறந்த நாள் - 23-08-2026 -

08/09/2026

- செல்வன் ஸ்ரீராஜா அருணன் - பிறந்த நாள் - 06-09-2026 -

கல்வி ஊக்குவிப்பு. யேர்மனி, (Hamm) கம் நகரைச்  சேர்ந்த, செல்வன் ஸ்ரீராஜா அருணன் அவர்கள் இன்று (06-09-2026) தனது பிறந்த ந...
06/09/2026

கல்வி ஊக்குவிப்பு.

யேர்மனி, (Hamm) கம் நகரைச் சேர்ந்த, செல்வன் ஸ்ரீராஜா அருணன் அவர்கள் இன்று (06-09-2026) தனது பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பு, திகிலிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு நிதி அன்பளித்து இருந்தார். செல்வன். செல்வன் ஸ்ரீராஜா அருணன் அவர்கள் நோய் நொடியின்றி நிறை செல்வத்தோடு, நீடுழீ வாழ வாழ்த்துவதோடு, அனுசரணை வழங்கிய நெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தினருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாறாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
-என்றான் பாரதி.

01/09/2026

- அமரர் கதிர்காமத்தம்பி கலாதர் -
- பிறந்தநாள் - 01-09-2026 -

அமரர். கதிர்காமத்தம்பி கலாதர் - பிறந்த நாள் நினைவு - 01-09-2026 -  இன்று (01-09-2026) யாழ். குரும்பசிட்டியைச் சேர்ந்த அம...
01/09/2026

அமரர். கதிர்காமத்தம்பி கலாதர் - பிறந்த நாள் நினைவு - 01-09-2026 -
இன்று (01-09-2026) யாழ். குரும்பசிட்டியைச் சேர்ந்த அமரர். கதிர்காமத்தம்பி கலாதர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நெதர்லாந்து, றோர்மொண்டில் வசிக்கும் அவரது தந்தையார் கதிர்காமத்தம்பி குடும்பத்தினரால், எமது தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்திற்கு வழங்கப்பட்ட நிதியின் மூலமாக மட்டக்களப்பு, திருப்பழுகாமம் விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது. மேலும், திரு. கதிர்காமத்தம்பி குடும்பத்தினருக்குத் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் அமரர். கதிர்காமத்தம்பி கலாதர் அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு இதனை ஒழுங்கமைத்துக் கொடுத்த நெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்திற்கும், திருப்பழுகாமம் விபுலானந்தா சிறுவர் இல்லச் சிறுவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தங்களது நன்றியை தெரிவித்தும் இருந்தார்கள். எமது மன்றமும் திரு. கதிர்காமத்தம்பி குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அமரர் கதிர்காமத்தம்பி கலாதர் அவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !

31/08/2026

செல்வி. கிருஷ்ணிகா ஜஜீதரன் - 5 ஆவது பிறந்தநாள் - 31-08-2026

செல்வி கிருஷ்ணிகா ஜஜீதரன் அவர்களின் 5 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு (31-08-2026) இன்று எமது மலையக சிறுவர்  இல்லச் சிறார்களு...
31/08/2026

செல்வி கிருஷ்ணிகா ஜஜீதரன் அவர்களின் 5 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு (31-08-2026) இன்று எமது மலையக சிறுவர் இல்லச் சிறார்களுக்கு அன்புடனும், அக்கறையுடனும் விசேட தின உணவு வழங்கியமைக்கு எமது சிறுவர் இல்லத்தின் நிர்வாகம், சிறார்கள் மற்றும் பணியாளர்கள் சார்பாக தங்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தங்களின் அன்பான இந்த
நன்கொடை, கிருஷ்ணிகா ஜஜீதரனின் பிறந்தநாளை எமது இல்லச் சிறார்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு சிறப்பான நாளாக மாற்றியுள்ளது. தங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணத்தை எமது இல்லச் சிறார்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த உயரிய மனிதநேயச் செயல் என்றும் எமது நினைவில் நிலைத்திருக்கும்.
"பிறந்தநாள் மகிழ்வை பிறருடன் பகிர்ந்து கொள்வதே உண்மையான மகிழ்ச்சி.”
இந்நன்னாளில் செல்வி கிருஷ்ணிகா ஜஜீதரன் அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடம், கல்வியில் சிறந்து, வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

மேலும், தங்களின் குடும்பத்திற்கு இறைவனின் அருளும், ஆசீர்வாதமும் என்றும் நிறைந்திருக்க வாழ்த்துவதோடு மீண்டும் ஒருமுறை எமது உளமார்ந்த நன்றிகள்

இங்கனம்

கிருஷ்ணசாமி காண்டீபன்,
இல்ல பொறுப்பாளர்
மலையக சிறுவர் இல்லம்
பதுளை,
இலங்கை.

“இறந்தவர் குழந்தைகளை இருப்பவர் நாம் காப்போம்”

2026 புரட்டாதி மாத வெற்றிமணி 360 ஆவது இதழ் வெளிவந்து விட்டது. இலவச பிரதி கீழ்க்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் :- தமி...
28/08/2026

2026 புரட்டாதி மாத வெற்றிமணி 360 ஆவது இதழ் வெளிவந்து விட்டது. இலவச பிரதி கீழ்க்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் :-
தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றம்,
Karel Doormanstraat - 03,
6045 EA Roermond.

Adres

Karel Doormanstraat 3
Roermond
6045EA

Website

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer Organization of Tamil Cultural Activities and Charity Centre nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Contact De Scholen

Stuur een bericht naar Organization of Tamil Cultural Activities and Charity Centre:

Snelkoppelingen

Delen