21/02/2024
✨வளர்தமிழ மன்றம்✨
•
*உலகத் தாய்மொழி நாள் | Happy International Mother Language Day*
*
அனைவருக்கும் அன்பான வணக்கம்
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி 🔥
உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி!🔥
ஒவ்வோர் ஆண்டும் உலகமுழுவதும் பிப்ரவரி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மொழி என்பது மனிதர்களின் கல்விக்கும் மேம்பாட்டுக்கும் உதவும் தகவல் தொடர்புக் கருவி மட்டுமல்லாமல் நம் பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறது. தாய்மொழியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துகிறது வளர்தமிழ் மன்றம்.
❤️நன்றி❤️
•
•
#மொழி_இனத்தின்_விழி
16/02/2024
✨நல்லார்க்கினியன் மரபு கவிதை களம் 6✨
"மரபு கவிதையே தமிழிலக்கியத்தின் வேர்"
வளர்தமிழ் மன்றத்தின் தொடர்முயற்சியாகத் தேசிய அளவிலான மரபு கவிதைப் போட்டி, இவ்வாண்டு ஆறாம் முறையாக நடத்தப்படவுள்ளது. அவ்வகையில் இப்போட்டியின் படைப்புகளை அனுப்ப வேண்டிய காலவரையறை *01/03/2024* வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் *13 நாள்களே* உள்ளன!
🤩அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
இப்போட்டியில் கவிதைகள் வந்துசேர வேண்டிய இறுதி நாள் *01/03/2024.*
*போட்டி விதிமுறைகள்:*
https://drive.google.com/drive/folders/1-3nY6H7YSuEbTe1kHcx8EhZEEIHdIqkc
*பதிவு பாரம்:*
https://forms.gle/U6enhcYHR7PJG1j46
தொடர்புக்கு :
அஷ்வினி சுகுமாறன் - 01126239231
கிதர்சன் சுந்தரேசன் - 0168970704
#மொழி_இனத்தின்_விழி
14/02/2024
வளர்தமிழ் மன்றம்
அன்பர்கள் தின வாழ்த்துகள் | Happy Valentines Day♥️
அனைவருக்கும் வணக்கம். ❤️🙏
பிறர் மீது அன்பு வைத்தல் என்பது மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும்.
அனைவரிடத்திலும் அன்பாய் இருப்பது ஓர் உன்னதமான இலட்சியம்.
அனைவரிடத்திலும் அன்பாய் இருப்பது எளிதானது அல்ல. அன்பை விட வலிமையான எந்தச் சக்தியும் இல்லை. அன்பே உலகை மாற்றும். அன்பாய் இருப்பதற்கு எந்த ஒரு மத நம்பிக்கையோ, எந்த ஒரு சமூக அந்தஸ்த்தோ,
பணமோ தேவையில்லை.
அனைவரிடத்திலும் அன்பாய் இருப்போம். இந்த அன்பர் தினம் நம் வாழ்வில் மகிழ்ச்சி, அன்பு மற்றும் நெருக்கத்தை நிறைக்கட்டும். நம் அன்புக்குரியவர்களுடன் இனிமையான தருணங்களை செலவிட்டு உலகை அழகான இடமாக மாற்றுவோம். அனைவருக்கும் இனிய அன்பர்கள் தின வாழ்த்து உரித்தாகுக.🫂❤️✨
நன்றி❤️
#மொழி_இனத்தின்_விழி
13/02/2024
வளர்தமிழ் மன்றம்
(உலக வானொலி நாள்| World Radio Day)📻
அனைவருக்கும் வணக்கம்.
உலக வானொலி தினம் 2011-இல் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படும் யுனெஸ்கோவின் சர்வதேச தினமாகும்.
உலக வானொலி தினம் என்பது வானொலியை ஓர் ஊடகமாகக் கொண்டாட ஒரு வாய்ப்பாகும். வானொலி ஒலிபரப்பாளர்களிடையே சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் வானொலி நிலையங்களை ஊக்குவிப்பதற்கும், தகவல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கான அணுகலையை வளர்ப்பதற்கும் இது ஒரு வாய்ப்பாகும்.
தொழில்நுட்பம் எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும், வானொலி ஈடுசெய்ய முடியாத ஊடகம் என்றால் அது மிகையாகாது. வானொலி காலங்காலமாக அதன் பயன்பாட்டை நிலைநிறுத்திய ஓர் ஊடகம். அனைவருக்கும் உலக வானொலி நாள் வாழ்த்து உரித்தாகுக.
நன்றி❤️
#மொழி_இனத்தின்_விழி
12/02/2024
[நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி களம் 6]
"மரபு கவிதையே தமிழிலக்கியத்தின் வேர்"
வளர்தமிழ் மன்றத்தின் தொடர்முயற்சியாகத் தேசிய அளவிலான மரபு கவிதைப் போட்டி, இவ்வாண்டு ஆறாம் முறையாக நடைபெறுகிறது. அவ்வகையில் இப்போட்டியின் படைப்புகளை அனுப்ப வேண்டிய காலவரையறை வருகின்ற *15/02/2024* ஒரு முடிவைக் காண்கிறது. அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!🔥
தொடர்புக்கு :
அஷ்வினி சுகுமாறன் -01126239231
கிதர்சன் சுந்தரேசன் - 0168970704
PBT_14
2023_2024
மொழிஇனத்தின்விழி
12/02/2024
வளர்தமிழ் மன்றம்
தேர்வுக்கான வாழ்த்து | Best wishes for exam ✨📚
அனைவருக்கும் வணக்கம். இன்று முதல் தொடங்கவிருக்கும் தேர்வினைச் சிறப்பாக எழுத அனைத்து மாணவர்களுக்கும் வளர்தமிழ் மன்றத்தின் வாழ்த்து உரித்தாகுக. ✨👍🏻
உங்கள் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால்
உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து
அதே சிந்தனையுடன் செயல்படவேண்டும்.
-அப்துல் கலாம்
நன்றி✨🙏🏻
#மொழி_இனத்தின்_விழி
12/02/2024
வளர்தமிழ் மன்றம்
( சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்| Happy Chinese New Year )✨🧨
ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கை அடிப்படையாகக் கொண்டு சீனப் புத்தாண்டு கொண்டாடப்படும். அவ்வகையில் இவ்வாண்டு, *கடல் நாகம் (Dragon)* ஆண்டாக அமைந்துள்ளது. இப்புத்தாண்டு இனி வரும் காலங்களில் நாம் அனைவரும் சிறப்பாக வாழ்ந்திட அனைத்து வளங்களையும் கொடுத்திடும் ஆண்டாகத் திகழட்டும். சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும், குறிப்பாகச் சீன நண்பர்களுக்கும் வளர்தமிழ் மன்றத்தின் இனிய சீனப் புத்தாண்டு வாழ்த்து உரித்தாகட்டும்✨🧨.
நன்றி
#மொழி_இனத்தின்_விழி
12/02/2024
வளர்தமிழ் மன்றம்
வாழ்த்துப் பதிவு|Post Of Appreciation🌸
அனைவருக்கும் வணக்கம்.
நம் வளர்தமிழ் மன்றத்தின் மதியுரைஞர் , முனைவர் இளங்குமரன் சிவநாதன் அவர்களுக்குப் பிரதமர் அலுவலகத்தில் சார்பு அதிகாரியாகப் பணிபுரிய வாய்ப்புக் கிட்டியுள்ளது. முனைவர் அவர்களுக்கு வளர்தமிழ் மன்றத்தின் வாழ்த்து உரித்தாகுக❤️👏🏻
நன்றி❤️
#மொழி_இனத்தின்_விழி
12/02/2024
வளர்தமிழ் மன்றம்❤🔥
உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day)
அனைவருக்கும் வணக்கம்.
உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதும் இந்நாள் அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கங்களாகும். ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் இந்நோயைக் கட்டுப்படுத்துவது எளிதாகும். பாதிப்பை பொறுத்தே சிகிச்சைக்கான கால அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
இவ்வருடத்தின் கருபொருளானது *CLOSE THE CARE GAP: Uniting our voices and taking action.*
ஆக, புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுவோம் என ஒவ்வொருவரும் வாக்குறுதி எடுப்போம். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவோம்.
நன்றி🌸
#மொழி_இனத்தின்_விழி