Association of Intellectual Tamil Students (ASSIST) [Malay Translation: Pertubuhan Pelajar Intelektual Tamil Malaysia] officially registered non-governmental organization under the registrar of Society Malaysia on 18th of March 2016. The organization initiated by a lineup of graduates and university students from various social and educational backgrounds. Numerous dedicated and responsible youths unite their knowledge and experience for the development of the socio-economic growth of the Indian community.
*நோக்கம்*
1) மலேசிய இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் கல்வி, சமூகம், பொருளியல் மேம்பாட்டுக்குப் பங்காற்றுதல்.
2) மலேசியாவில் தமிழ்வழிக் கல்வியின் வளர்ச்சிக்குப் பங்காற்றுதல்.
3) மனிதநேய நோக்கோடு, வேற்றுமைகள் களைந்து பிற இன, மொழி, நாட்டு மக்களுக்கு உதவி பணிகளை மேற்கொள்ளுதல்.
*விழுமியங்கள்*
1) மனிதநேயம்
2) பகுத்தறிவு
3) இனம், மொழி, நாட்டுப்பற்று
4) சமுதாயக் கடமை
5) முன்னேற்றத்திற்கான மாற்றம்
*தங்க விதிகள்*
1. அனைத்து உறுப்பினர்களும் குறைந்த பட்சம் தமிழ்ப் பேசக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அனைத்து செயலவை உறுப்பினர்களும் கட்டாயமாக உயர்க்கல்விக் கூட மாணவராகவோ அல்லது பட்டத்தாரியாகவோ இருத்தல் வேண்டும். இயக்கத்தின் தலைவர் ஆறு ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் பயின்ற பட்டத்தாரியாக இருத்தல் அவசியம்.
2. நமது இயக்கம் தமிழ்மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் தேவநேயப் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் போன்ற தமிழறிஞர்கள் ஏற்றுக் கொண்ட தை முதல் நாளையே, மலேசிய அறிவகம் தமிழ்ப்புத்தாண்டாக ஏற்கிறது.
3. தமிழர் இனம் சார்ந்த பெருநாட்கள், மலேசியாவின் வரலாறு சார்ந்த பெருநாள்கள், தமிழ்மொழி & இன வளர்ச்சிக்குப் பங்களித்த அறிஞர்களின் பிறந்தநாள்- நினைவுநாள், பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பெருநாட்கள் (எகா. அன்னையர் நாள், அறிவியல் நாள்) இவற்றின் பெயரில் திட்டங்கள், நிகழ்ச்சிகள் அல்லது விழா ஏற்பாடு செய்யலாம்.
4. பிற நாடு, இனம் அல்லது மதம் சார்ந்த எந்த பெருநாட்களின் பெயரிலும் நிகழ்ச்சிகள் அல்லது திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படக்கூடாது! ஆனால், இயக்க வழியாக அந்நாட்களில் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம்.
5. நமது சமூக வளர்ச்சிக்கு வித்திடும் வண்ணம், நிகழ்ச்சிகள், முகாம்கள், பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
6. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் பாடதிட்டங்கள், தேர்வுகள், ஆசிரியர்கள், கல்வி, நிதி என தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த விடயங்களின் மேம்பாட்டுக்குப் பங்காற்ற வேண்டும்.
7. தமிழ்வழிக்கல்வியின் வளர்ச்சி நமது முகான்மை நோக்கம் என்பதால், பள்ளிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி அல்லது போட்டிகளை முன்னெடுக்கும் பொழுது, தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.
8. நாம் மொழி, இனம் சார்ந்த இயக்கம் என ஆன போதிலும், நமது மனிதநேயம் எனும் விழுமியத்தை மனதில் ஏந்தி நாடு, இனம், மொழி, மதம், பாலினம் என அனைத்து வேற்றுமையையும் கடந்து மக்கள் பணியை மேற்கொள்ளலாம். அப்படி முன்னெடுக்கும் பட்சத்தில் அவை, நமது பிற நோக்கங்களுக்கு எதிரானதாக இல்லாதிருத்தலை அப்போதைய தலைவரும், உறுப்பினர்களும் உறுதி செய்ய வேண்டும்.
9. கூடுதல் நோக்கம், விழுமியங்கள், தங்க விதிகள் இயற்றப்படுமாயின், அப்போதைய அனைத்து (100%) செயலவை உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இணைக்க முடியும்.