SJK (T) Ladang Rinching

SJK (T) Ladang Rinching ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி 1938-ல் ஆங்கிலேய?

உலு லாங்காட் மாவட்டத்தில் அமைத்திருக்கும் ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி 1938-ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இப்பள்ளி 3/4 ஏக்கர் நிலப்பரப்பில், செமினி பட்டணத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டது.
இப்பள்ளி நிறுவப்பட்டபோது இருபத்து ஐந்து மாணவர்களே பயின்று வந்தனர். அச்சமையத்தில் திரு கந்தசாமியின் நிர்வாகத்தின் கீழ் ஐந்து ஆசிரியர்கள் பணி செய்து வந்தனர். நாடு சுதந்திரம் பெற்ற பின், தோட்டத் தொ

ழிலாளர்களின் நலன் கருதி தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது. இச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற துன்.வீ.தி சம்பந்தன் அவர்களின் முயற்சியில் ரிஞ்சிங் தோட்டம் வாங்கப்பட்டது. அதன் பிறகு இப்பள்ளியின் நிர்வாகம் தேசிய நில நிதி க்கூட்டுறவுச் சங்கத்தைச் சார்ந்திருந்தது.
இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வந்தது. 1968-ல் இப்பள்ளியில் 172 மாணவர்களுடன் 15 பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் திரு எஸ். இராஜு தலைமையில் இருந்தனர். திரு எஸ்.இராஜு இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பெரும் பங்காற்றி வந்தார். அவரின் பெரும் முயற்சியினால் 1975-ல் ஒரு புதிய கட்டடம் உருவானது. 1976-ல் தலைமைப் பொறுப்பை திரு. முகமட் இஸ்மாயில் ஏற்றார். பள்ளி படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது. புறப்பாட நடவடிக்கைகளிலும் துரித முன்னேற்றம் கண்டது.
1982-ல் திரு நடராஜன் அவர்கள் இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பதவி ஏற்றார். இவரின் தலைமையின் கீழ் மேலும் ஒரு புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. இக்கட்டடம் 6 வகுப்பறைகள், 1அலுவலகம், 1 கருவூல மையம் கொண்டது.இவரது பதவிக் காலத்தில்,கல்வித்தரம் சிறந்த வளர்ச்சியைக் கொண்டிருந்தது. 1999-ல் திருமதி அங்கம்மா அவர்கள் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். 2002-ல் முதல் 2003 வரை தலைமையாசிரியர் பதவி காலியாக இருந்து வந்தது. 1.3.2003-ல் திருமதி ஜெயலெட்சுமி அவர்கள் இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பதவி ஏற்றார். இவரின் தலைமையின் கீழ் மேலும் ஒரு புதிய கட்டடம் உருவாகியது. திருமதி ஜெயலெட்சுமி 24-8-2008-ல் பதவி ஓய்வு பெற்றார். அப்பொது மாணவர் எண்ணிக்கை 480 ஆகும்.
1.11.2008-ல் திரு. அப்துல் நாசிர் இஸ்மாயில் பள்ளியின் தலைமையசிரியர் பொறுப்பை ஏற்றார். அன்று முதல் பள்ளியின் எல்லா துறைகளிலும் வளர்ச்சியடையத் தொடங்கியது. யூ.பி.எஸ்.ஆர் தேர்ச்சி விகிதம் படிப்படியாக உயர்ந்து 2011-ல் 49.7% ஐ அடைந்தது. 2010-ல் பள்ளிக்குப் புதிதாக அரசாங்க முழு உதவி பெற்ற பாலர் பள்ளிக் கட்டடம் கிடைக்கப்பெற்றது. 1.8.2011-ல் மாநில அரசாங்கத்தின் ஆதரவில் தித்தியான் டிஜிட்டல் கணினித் திட்டதின் கீழ் தகவல் தொடர்பு தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டது.அதோடு, 2012-ல் மாநில அரசாங்கம் நூலகம் ஒன்றை அமைத்தது.. இப்பொது பள்ளியில் 603 மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள்.
கடந்த 16.07.2012 ம் நாள், திரு.சீ.தனசீலன் அவர்கள்,தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஒருவரிடம் நண்பனை, வழிகாட்டியை, பெற்றோரை, இறைவனை ஒன்றாக பார்க்க முடியும் என்றால், அது ஆசிரியர் மட்டுமே!ஆசிரியர் தின வாழ்த...
16/05/2022

ஒருவரிடம் நண்பனை, வழிகாட்டியை, பெற்றோரை, இறைவனை ஒன்றாக பார்க்க முடியும் என்றால்,
அது ஆசிரியர் மட்டுமே!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
Happy Teacher's Day

Address

23rd Mile, Jalan Seremban
Semenyih
43500

Telephone

+60387231143

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJK (T) Ladang Rinching posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SJK (T) Ladang Rinching:

Shortcuts

Share