செலாமா தமிழ்ப்பள்ளி, பேராக், SJKT Selama, Perak

  • Home
  • Malaysia
  • Selama
  • செலாமா தமிழ்ப்பள்ளி, பேராக், SJKT Selama, Perak

செலாமா தமிழ்ப்பள்ளி, பேராக், SJKT Selama, Perak Primary School in Selama, Perak

🏆 SETINGGI-TINGGI TAHNIAH! 🏆📌 30 Julai 2026🥁 Pertandingan Video Kreatif Nilai Moral Sekolah Rendah Anjuran Panitia Pendi...
14/08/2026

🏆 SETINGGI-TINGGI TAHNIAH! 🏆

📌 30 Julai 2026
🥁 Pertandingan Video Kreatif Nilai Moral Sekolah Rendah Anjuran Panitia Pendidikan Moral Daerah Larut Matang dan Selama Tahun 2026

🎉 Syabas dan tahniah diucapkan kepada murid-murid serta guru-guru pembimbing SJKT Selama atas kejayaan yang amat membanggakan dalam pertandingan ini.

🥈 NAIB JOHAN
🏅 TEMPAT KE-4 KESELURUHAN
📍 Peringkat Daerah Larut Matang dan Selama

Kejayaan ini merupakan hasil komitmen, kreativiti, kerja berpasukan, kesungguhan dan usaha gigih yang ditunjukkan oleh murid-murid serta bimbingan penuh dedikasi daripada guru-guru pembimbing.

🌟 Tahniah kepada semua murid yang terlibat!
🌟 Syabas kepada guru-guru pembimbing atas tunjuk ajar dan komitmen yang diberikan!

Semoga kejayaan ini menjadi sumber inspirasi dan motivasi untuk terus mencipta kecemerlangan dalam bidang akademik, kokurikulum dan sahsiah pada masa akan datang.

“Kreativiti Disemai, Nilai Murni Dihayati, Kecemerlangan Dicapai.”

👏 Tahniah dan syabas daripada seluruh warga SJKT Selama!
Anda semua memang hebat! 🏆🎉

🏆 உளமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 🏆

📌 30.06.2026
🥁 2026ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அறநெறி விழுமியங்கள் குறித்த படைப்பாக்கக் காணொளிப் போட்டி
லாருட் மாத்தாங் மற்றும் செலாமா மாவட்ட நன்னெறிக்கல்விப் பணித்தியக் குழுவினால் நடத்தப்பட்டது.

🎉 இப்போட்டியில் சிறப்பாகப் பங்கேற்று, பெருமைமிகு வெற்றியைப் பெற்ற நம் செலாமா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

🥈 இரண்டாம் இடம்
🏅 ஒட்டுமொத்தப் போட்டியில் நான்காம் இடம்
📍 லாருட் மாத்தாங் மற்றும் செலாமா மாவட்ட அளவில்

இந்தச் சிறப்பான சாதனை, மாணவர்களின் முயற்சி, படைப்பாற்றல், குழு ஒருங்கிணைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டிய ஆசிரியர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த வழிகாட்டுதலின் பயனாகும்.

🌟 பங்கேற்று சிறப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகள்!
🌟 மாணவர்களை அர்ப்பணிப்புடன் வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும்!

இச்சாதனை, எதிர்காலத்தில் கல்வி, இணைப்பாடச் செயல்பாடுகள், படைப்பாற்றல் மற்றும் நற்பண்புகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க மாணவர்களுக்கு உந்துசக்தியாக அமையட்டும்.

“படைப்பாற்றலை வளர்ப்போம்; நற்பண்புகளைப் பேணுவோம்; சிறப்புகளைப் படைப்போம்!”

👏 செலாமா தமிழ்ப்பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! 🏆🎉

🌺🙏 48ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா  🙏🌺மலேசிய இந்து சங்கம், தைப்பிங் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 48ஆம் ஆண்டு ...
14/08/2026

🌺🙏 48ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா 🙏🌺

மலேசிய இந்து சங்கம், தைப்பிங் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 48ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழாவில், நம் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடனும் பக்தியுடனும் பங்கேற்று பல சிறப்பான சாதனைகளைப் பெற்றுள்ளனர்.

📅 திகதி: 5 ஜூலை 2026
📍 இடம்: தைப்பிங்

🌟 பிரிவு 1 – தனிநபர்

🏆 மூன்றாம் பரிசு
• பிரதீபன் இராஜகுமார்
• யோகதன்சிகா தினேஷ் ராஜ்

🏅 ஐந்தாம் பரிசு
• ஜீவிகா முருகன்

🏆 பிரிவு 1 – குழு

🥇 முதல் இடம்
• கோகிலவாணன் மோகன்
• கர்னிசிகா ஈஸ்வரன்
• புவிசெல்வன் அரிமாசெல்வன்
• யோகதன்சிகா தினேஷ் ராஜ்

🥈 இரண்டாம் இடம்
• பிரதீபன் இராஜகுமார்
• பிருந்தா வைஷ்ணவி அன்பரசன்
• யேகநாயகி யோகநாதன்
• புகன் கோவிந்தன்

🥉 மூன்றாம் இடம்
• லூபேஷ் முனியான்டி
• சிவாக்‌ஷன் நாகரத்தினம்
• நிஷாந்தி சந்திரன்
• ஹேமவர்தன் ராஜேந்திரன்

📜 பிரிவு 2

தனிநபர் மற்றும் குழு – பங்கேற்புச் சான்றிதழ்

📜 பிரிவு 3

தனிநபர் மற்றும் குழு – பங்கேற்புச் சான்றிதழ்

திருமுறையின் சிறப்பையும் ஆன்மிகப் பாரம்பரியத்தையும் மாணவர்களிடையே வளர்க்கும் இந்நிகழ்வில் பங்கேற்று, பல்வேறு வெற்றிகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 🌟👏

மாணவர்களை சிறப்பாகத் தயார்படுத்தி வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்த பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏

“திருமுறையை ஓதுவோம்; தமிழையும் சைவப் பாரம்பரியத்தையும் போற்றிப் பாதுகாப்போம்!” 🌺📖

#48ஆம்ஆண்டுதிருமுறைஓதும்விழா
#திருமுறை
#மாணவர்சாதனை
#சைவப்பண்பாடு
#தமிழ்ப்பண்பாடு
#மலேசியஇந்துசங்கம்
#தைப்பிங்
#பள்ளிப்பெருமை
#வாழ்த்துகள்

📚🔬✨ பேரா மாநில அளவிலான அறிவியல் விழா 2026 ✨🔬📚பேரா மாநில அளவிலான அறிவியல் விழா 2026-ல் பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள் ஆர்வ...
14/08/2026

📚🔬✨ பேரா மாநில அளவிலான அறிவியல் விழா 2026 ✨🔬📚

பேரா மாநில அளவிலான அறிவியல் விழா 2026-ல் பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர்.

📅 திகதி: 8 ஆகஸ்ட் 2026 (சனிக்கிழமை)
📍 இடம்: Dewan Dato' Sagor, Pusat Latihan Teknologi Tinggi (ADTEC) Taiping

இந்நிகழ்வில் 61 பள்ளிகள் கலந்து கொண்டு தங்களது மாணவர்களின் அறிவியல் அறிவு, படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனைகளை வெளிப்படுத்தினர்.

பள்ளியைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட இளம் ஆய்வாளர்கள்:

👩‍🔬 கமலவாசினி கணேஷ்குமார்
👨‍🔬 கதிரவன் மூர்த்தி
👨‍🔬 தருண் முருகையன்
👨‍🔬 கிஷன்ராஜ் சுப்ரமணியம்
👩‍🔬 சங்கீதா நாயுடு முனியாண்டி

அறிவியல் நிகழ்வில் பங்கேற்று, தங்களது திறமைகளையும் அறிவியல் ஆர்வத்தையும் வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகள். 👏🌟

மாணவர்களைச் சிறப்பாக வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளித்த பெற்றோர்களுக்கும் நன்றிகள்.

“அறிவியல் சிந்தனை வளர்ப்போம்; புதுமையான எதிர்காலத்தை உருவாக்குவோம்!” 🚀🔬

#பேராமாநிலஅளவிலானஅறிவியல்விழா2026

#அறிவியல்விழா
#அறிவியல்சிந்தனை
#மாணவர்சாதனை


🏆✨ லாருட் மாத்தாங் செலாமா மாவட்ட அளவிலான கல்விப் புத்தாக்கம் & செயலாய்வுப் போட்டி🏆🌟 பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ம...
14/08/2026

🏆✨ லாருட் மாத்தாங் செலாமா மாவட்ட அளவிலான கல்விப் புத்தாக்கம் & செயலாய்வுப் போட்டி🏆

🌟 பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

“புதுமையைப் படைப்போம்; கல்வியில் மாற்றத்தை உருவாக்குவோம்!” 📚💡✨

#கல்விபுத்தாக்கம்
#செயலாய்வு

#ஆசிரியர்புத்தாக்கம்

06.08.2026 – HARI TEMU WARIS PBD FASA 1 / 2026 SJKT SELAMA 📚🎓🎉 Program Hari Temu Waris Pentaksiran Bilik Darjah (PBD) Fa...
06/08/2026

06.08.2026 – HARI TEMU WARIS PBD FASA 1 / 2026 SJKT SELAMA 📚🎓
🎉 Program Hari Temu Waris Pentaksiran Bilik Darjah (PBD) Fasa 1 Bagi Tahun 2026 Telah Berlangsung dengan Jayanya. 🎉
🎊 Setinggi-tinggi penghargaan dan ucapan terima kasih ditujukan kepada semua ibu bapa dan penjaga yang telah meluangkan masa untuk hadir bagi menerima laporan serta berbincang secara terus mengenai perkembangan akademik dan sahsiah anak-anak. Kerjasama yang erat antara pihak sekolah dengan ibu bapa amat signifikan demi memacu kecemerlangan masa depan murid-murid! 💡✨
🏫 Bahasa Tamil (தமிழ்)
06.08.2026 – பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு (Hari Temu Waris PBD Fasa 1 / 2026) செலாமா தமிழ்ப்பள்ளி 📚🎓
🎉 செலாமா தமிழ்ப்பள்ளியின் 2026-ஆம் ஆண்டிற்கான முதற்கட்டப் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு (Hari Temu Waris) மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 🎉
👏 பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் நற்பண்புகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையைப் பெற்றுக்கொண்டு, ஆக்கபூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்ட அனைத்துப் பெற்றோர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களின் எதிர்காலச் சிறப்புக்குக் குடும்பமும் பள்ளியும் இணைந்து செயல்படுவது மிக அவசியமான ஒன்றாகும்! 💡✨

⁠ ⁠ ⁠ ⁠ ⁠ ⁠ ⁠ ⁠ ⁠ ⁠ ⁠ ⁠ ⁠

04/08/2026
🌸🏫 MAJLIS LAMBAIAN KASIH 🏫🌸Dengan penuh hormat, SJKT Selama telah mengadakan Majlis Lambaian Kasih bagi meraikan Encik S...
24/07/2026

🌸🏫 MAJLIS LAMBAIAN KASIH 🏫🌸

Dengan penuh hormat, SJKT Selama telah mengadakan Majlis Lambaian Kasih bagi meraikan Encik Shadan bin Sharom, Pembantu Khidmat Am SJKT Selama, sebagai tanda penghargaan atas segala jasa, komitmen dan khidmat bakti yang telah dicurahkan sepanjang berkhidmat di sekolah ini.

📅 Tarikh: 23 Julai 2026 (Khamis)
🕙 Masa: 10.00 pagi

Sepanjang tempoh perkhidmatan beliau, Encik Shadan bin Sharom telah menunjukkan sikap yang bertanggungjawab, berdedikasi dan sentiasa komited dalam melaksanakan tugas yang diamanahkan. Sumbangan dan pengorbanan beliau telah memberi impak yang besar kepada kelancaran pengurusan serta pembangunan sekolah.

Majlis yang berlangsung dalam suasana penuh mesra dan menyentuh hati ini menjadi simbol penghargaan warga sekolah terhadap segala jasa dan pengorbanan beliau. Walaupun perpisahan ini amat dirasai, kenangan indah serta sumbangan yang telah dicurahkan akan sentiasa terpahat dalam ingatan seluruh warga SJKT Selama.

Pihak sekolah merakamkan setinggi-tinggi penghargaan dan ucapan terima kasih kepada Encik Shadan bin Sharom atas segala jasa dan bakti.

Selamat maju jaya dalam setiap langkah yang bakal ditempuhi. Semoga terus dikurniakan kesihatan yang baik, kebahagiaan dan kejayaan dalam kehidupan.

"Jasamu dikenang, budimu disanjung." 💐






🌟 Tahniah atas Anugerah Perkhidmatan Cemerlang (APC) 2025 🌟Setinggi-tinggi tahniah diucapkan kepada Cikgu Moganavalli Na...
21/07/2026

🌟 Tahniah atas Anugerah Perkhidmatan Cemerlang (APC) 2025 🌟

Setinggi-tinggi tahniah diucapkan kepada Cikgu Moganavalli Narayanan atas penerimaan Anugerah Perkhidmatan Cemerlang (APC) 2025.

Anugerah ini merupakan pengiktirafan yang amat bermakna terhadap dedikasi, komitmen dan kecemerlangan beliau dalam melaksanakan amanah sebagai seorang pendidik. Semoga kejayaan ini menjadi inspirasi kepada seluruh warga pendidik untuk terus memberikan perkhidmatan yang berkualiti demi kecemerlangan pendidikan.

Semoga Cikgu Moganavalli Narayanan terus dikurniakan kesihatan yang baik, dipermudahkan segala urusan dan terus melakar lebih banyak kejayaan pada masa hadapan.

Syabas dan tahniah atas pencapaian yang membanggakan ini! 🌹💐

எங்கள் பள்ளியின் மதிப்பிற்குரிய ஆசிரியரான குமாரி மோகனவள்ளி நாராயணன் அவர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சேவை விருதை (Anugerah Perkhidmatan Cemerlang - APC 2025) பெற்றிருப்பதற்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், பள்ளி சமூகத்தின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்விருது, கல்விப் பணியில் அவர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, சிறந்த சேவை மற்றும் இடையறாத உழைப்பிற்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும்.

இத்தகைய சிறப்பான சாதனை, பிற ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அமையும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

மேலும் பல உயரிய சாதனைகளைப் படைத்து, கல்வித் துறையில் தொடர்ந்து சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்.

மனமார்ந்த பாராட்டுகளும் இனிய நல்வாழ்த்துகளும்!






19/07/2026

Address

SJKT SELAMA
Selama
34100

Opening Hours

Wednesday 08:00 - 04:30
Friday 08:00 - 04:30

Telephone

+6058394858

Website

Alerts

Be the first to know and let us send you an email when செலாமா தமிழ்ப்பள்ளி, பேராக், SJKT Selama, Perak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to செலாமா தமிழ்ப்பள்ளி, பேராக், SJKT Selama, Perak:

Shortcuts

Share