31/05/2026
அனைவருக்கும் இனிய விசாக நாள் நல்வாழ்த்து!
Wishing you and your loved ones peace, joy, and enlightenment Happy Vesak Day!
Tamil Foundation helps communities through research and programming focused on Tamil education
தமிழ் அறவாரியம் அரசோ கட்சியோ சாரா ஒரு பொதுநல அமைப்பாகும். தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்துவது அறவாரியத்தின் நோக்கமாகும். இந்நோக்கத்தை அடைவதற்காக, ஆய்வுகளையும் செயற்திட்டங்களையும் மேற்கொண்டு, கிடைக்கப்பெற்ற அறிவைக் கல்வியமைச்சு, தமிழ்ப்பள்ளிகள், ஆசிரியர்கள், பள்ளி வாரியங்கள் என தமிழ்க்கல்வியுடன் தொடர்புள்ள அனைவருக்கும் அறவாரியம் பரப்புரை செய்துவருகிறது.
31/05/2026
அனைவருக்கும் இனிய விசாக நாள் நல்வாழ்த்து!
Wishing you and your loved ones peace, joy, and enlightenment Happy Vesak Day!
16/05/2026
அறியாமை என்ற இருளை நீக்கி, அறிவு என்ற தீபம் ஏற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும், இனிய ஆசிரியர் நாள் வாழ்த்து உரித்தாகட்டும்!
Wishing all the dedicated teachers who shape lives and light the path of knowledge a very Happy Teacher’s Day!
12/05/2026
இன்று மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் திரு பழனி சுப்பையா அவர்களுடனான சந்திப்புக் கூட்டம் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ் அறவாரியத்தின் துணைத் தலைவர் பொறிஞர் மதன்ராஜ், குமாரி ரினிஷா, பேராக் இம்பாக் திட்டத்தின் பயிற்றுநர்கள், திரு இரவிந்திரன் மற்றும் திரு குருநாதன் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். தமிழ் அறவாரியத்தின் செயல்த்திட்டங்கள் குறிப்பாக இம்பாக் திட்டத்தைப் பற்றிய தகவல்களைத் துணைத் தலைவர் பகிர்ந்து கொண்டார். மேலும், தமிழ் அறவாரியத்தின் செயல்த்திட்டங்களுக்கும் முன்னெடுப்புகளுக்கும் மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கும் என்று தலைவர் திரு பழனி கூறினார்.
Today, 12th May 2026 at SJK(T) Slim River, a powerful synergy was sparked as leaders gathered to chart a brighter course for the future of Tamil education in Malaysia.
The meeting between Mr. Palani Suppiah (President of the Malaysian Tamil School Headmasters’ Council) and the Tamil Foundation leadership—represented by Deputy President Ir. Mathanraj, Ms.Rinishhaa, Executive Secretary and dedicated IMPAK trainers Mr. Ravendran and Mr. Gurunathan—was more than just an administrative session; it was a milestone for community empowerment.
Paving the Way for a Brighter Future
The discussion centered on the transformative potential of the IMPAK programme, a flagship initiative designed to uplift students and empowering parents. The atmosphere was one of shared purpose and renewed energy.
Unified Vision: The Malaysian Tamil School Headmasters’ Council has pledged its cooperation and support for the Tamil Foundation’s initiatives.
Progressive Action: This partnership ensures that innovative tools and training modules will reach the heart of our schools, directly impacting the next generation of thinkers and leaders.
"When leadership meets grassroots passion, the path to excellence becomes a shared journey. Today, we didn't just discuss programmes; we committed to a legacy of success for our children."
This collaboration marks the beginning of a dynamic new chapter—one defined by innovation, unity, and an unwavering belief in the potential of our schools. The future of Tamil education isn't just coming; together, we are building it.
10/05/2026
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். — குறள் 69
அன்பும் தியாகமும் நிறைந்த தாய்மார்கள் இந்த உலகின் மிகப்பெரிய வரம்.
இனிய அன்னையர் நாள் வாழ்த்து! 🌸
A mother’s love is endless, selfless and unconditional.
Happy Mother’s Day! 🌸
30/04/2026
உழைப்பை நம்பி உலகம் இருக்கிறதே;
உழைப்போர் வாழ்வை உயர்வில் நிறுத்துவமே!
தொழிலாளர் நாள் நல்வாழ்த்து!
Happy Labours Day !
28/04/2026
கடந்த ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல், மலேசியத் தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவரான மறைந்த குமாரி உஷாராணி அவர்களுக்கு நினைவேந்தல் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, பெத்தாலிங் ஜெயாவில் சிறப்பாக நடைபெற்றது. குமாரி உஷாராணியின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் இந்நினைவேந்தலில் கலந்து கொண்டனர். மேலும், சமூக அமைப்புகளாகிய லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையம், கோலாலம்பூர் & சிலாங்கூர் சீனப் பல்நோக்கு மண்டபம் (KLSCAH), மலேசியச் சீனப் பள்ளிகள் மேலாண்மை வாரியக் கூட்டமைப்பு (Jiao Zong), மலேசியச் சீனப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (D**g Zong), EWRF, Gabungan Bertindak Malaysia (GBM), CHILD, Hindu Youth Organisation Port Klang (HYOPK), PTDM, ACE ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குமாரி உஷாராணியின் நினைவேந்தலில் கலந்து கொண்டதோடு குமாரி உஷாராணியோடு தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்தும் கொண்டனர். குமாரி உஷாராணி தமிழ் அறவாரியத்தில் இணைந்து ஆற்றிய சேவை அளப்பெரியது. 'இளம் இயற்கை விரும்பிகள்', 'புதையல் வேட்டை', 'உலகத் தாய்மொழி நாள்', 'தமிழ் அறம்', 'மாணவர் தன்னாளுமை முகாம்' எனத் தமிழ் அறவாரியத்தின் செயல்த்திட்டங்களைச் சிறப்பாக நடத்தியுள்ளார். குமாரி உஷாராணி நிலவுலகை விட்டு நீங்கினாலும் அவரின் பணிகள் தமிழ் அறவாரியத்தின் வரலாற்றுப் பக்கங்களிலும் சமூக அமைப்புகளின் நினைவலைகளிலும் என்றும் நிலைத்திருக்கும் 🙏
Last Sunday, 26th April, a memorial event in honour of the late Ms Usharani, Vice President of the Tamil Foundation, was successfully held at Vivekananda Tamil School, Petaling Jaya. Family members, relatives, and friends of Ms Usharani were present at the event. Representatives from various social organisations also attended, including the LLG Cultural Development Centre, Kuala Lumpur & Selangor Chinese Assembly Hall (KLSCAH), United Chinese School Committees’ Association of Malaysia (Jiao Zong), United Chinese School Teachers’ Association of Malaysia (D**g Zong), EWRF, Gabungan Bertindak Malaysia (GBM), CHILD, Hindu Youth Organisation Port Klang (HYOPK), PTDM, and ACE. They also shared their experiences and memories of Ms Usharani during the memorial. Ms Usharani’s contributions to the Tamil Foundation were immeasurable. She played a key role in organising impactful programmes such as “Young Nature Campers”, “Treasure Hunt”, “International Mother Language Day”, “Tamil Aram”, and the “Student Leadership Camp”. Although Ms Usharani is no longer with us, her contributions will continue to live on in the history of the Tamil Foundation and in the memories of the communities she touched 🙏
13/04/2026
இந்நன்நாளில் மலேசியத் தமிழ் அறவாரியம் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.
With much gratitude and humbleness, Tamil Foundation wishes Happy Chittirai New Year to everyone.
20/03/2026
முஸ்லிம் நண்பர்களுக்கு இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்து 🙏
10/03/2026
இம்பாக் 5.0 திட்டத்தின் பயிற்றுநர் பயிற்சியின் இரண்டாம் நாள் (8/3/2026), ஒரு கண்ணோட்டம்.
08/03/2026
இம்பாக் 5.0 திட்டத்தின் பயிற்றுநர் பயிற்சியின் முதல் நாள், ஒரு கண்ணோட்டம்.
| Monday | 08:00 - 17:00 |
| Tuesday | 08:00 - 17:00 |
| Wednesday | 08:00 - 17:00 |
| Thursday | 08:00 - 17:00 |
| Friday | 08:00 - 17:00 |