27/08/2024
வள்ளுவனும் கம்பனும் பாரதியும் இலக்கியப் போட்டியை முடித்துக் கொண்டு, திடல்தடப் போட்டியில் களம் கண்ட ஆச்சரியம்.... லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 27ஆவது விளையாட்டுப் போட்டியில் கடந்த 25.08.2024, ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
மேகநீலத்தைப் பூசிக்கொண்டு கம்பனும், மஞ்சளை உடுத்திக் கொண்டு பாரதியும், குருதிச் சிவப்பை பூசிக் கொண்டு வள்ளுவனும் அணிவகுத்து வந்து "தொலைத்தொடர்பு நிறுவனஙகள் (TELCO)" கருப்பொருளில் திடலை அலஙகரித்தனர்.
கயிற்றை இழுத்து, மின்னல் வேகத்தில் ஓடி, குழு விளையாட்டுகளில் ஒற்றுமைக் காட்டி....மழை, சகதி எனப் பாராமல் மாணவர்கள் விளையாடி தத்தம் இல்லத்திற்கு உயிர் ஊட்டினர்.
பாரதியின் மஞ்சள் இல்லம், 'ஏறுபோல நடந்து' ஒட்டு மொத்த வெற்றியாளராக 'வாகை' சூடியது.
ஆசிரியர்களின் அளப்பரிய உழைப்பாலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரிய நல்லிணக்கத்தாலும், பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பாலும் இவ்விளையாட்டுப் போட்டி வெற்றி கண்டது.
ஒவ்வொரு மாணவனின் கழுத்திலும் பதக்கம் என்ற இலக்கும் கைக்கூடியது.
போட்டிக்கு சிறப்பு வருகை புரிந்த, மஇகா சிரம்பான் தொகுதித் தலைவர் திரு. Ts. K.முரளிநாத் DNS, PKT, PP, ANS, PMC அவர்கள் கல்வியும் புறப்பாடமும் மாணவர்களுக்கு இரு கண்கள், பல்கலைக்கழகக் கல்விக்கு விளையாட்டும் அவசியம் என எடுத்துரைத்தார்.