Sjk Taman Melawati Ex-Students Club

Sjk Taman Melawati Ex-Students Club

Share

To connect all the ex-students of SJKT Taman Melawati with a hope that, we can work together to contribute for the well being of the school.

03/05/2026

உங்கள் வருகையைக் கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்யவும்:*
🔗 பதிவு செய்ய: https://forms.gle/8FZ719ihzyoji4Zz9

03/05/2026

*16-வது ஆண்டுப் பொதுக்கூட்டம் (16th AGM)*
*தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் (MMS)*

அன்பார்ந்த முன்னாள் மாணவர்களே, வணக்கம்.
நமது சங்கத்தின் 16-வது ஆண்டுப் பொதுக்கூட்டம் இனிதே நடைபெறவுள்ளது. பள்ளி மேம்பாட்டிற்காகக் கை கொடுக்கவும், மீண்டும் பள்ளிக்காக ஒன்றிணையவும் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

*கூட்ட விபரங்கள்:*
திகதி: *30 மே 2026 (சனிக்கிழமை)*
நேரம்: *மாலை 4.00*
இடம்: *SJK(T) தாமான் மெலாவாத்தி (VIP Lounge)*

*உங்கள் வருகையைக் கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்யவும்:*
🔗 பதிவு செய்ய: https://forms.gle/8FZ719ihzyoji4Zz9

*"தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு - நம் பள்ளி நமது கடமை"*

முன்னாள் மாணவர் சங்கம் (MMS).

31/03/2026
31/03/2026

வாழ்த்துகள் மாணவர்களே! 🎊🏆

SPM தேர்வில் வெற்றி வாகை சூடிய தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் வாழ்த்துகளைக் குவிக்கிறோம்! 👏🥳
உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்! 🚀🌈

Photos from Sjk Taman Melawati Ex-Students Club's post 28/02/2026

🌾 ஒற்றுமை பொங்கல் விழா 2026: மாபெரும் வெற்றி! 🔥

நமது பள்ளியின் 'ஒற்றுமை பொங்கல்' கொண்டாட்டம் மிகுந்த எழுச்சியோடும் உற்சாகத்தோடும் மிகச் சிறப்பாக நிறைவடைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்! இந்த மகத்தான வெற்றி, பள்ளியின் நான்கு தூண்களும் சமூகமும் இணைந்து செயல்பட்டதால் மட்டுமே சாத்தியமானது.

எங்களது மனமார்ந்த நன்றிகள்:
✅ பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PIBG) & பள்ளி மேலாளர் வாரியம் (LPS) – உங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்திற்கு மிக்க நன்றி.
✅ ஆசிரியர்கள் & பணியாளர்கள் – களத்தில் நின்று நீங்கள் ஆற்றிய வழிகாட்டுதலுக்கும் கடின உழைப்பிற்கும் எங்களது பாராட்டுக்கள்.
✅ MMS தன்னார்வலர்கள் – நீங்கள்தான் எங்களது முதுகெலும்பு! உங்கள் உழைப்பு, நேரம் மற்றும் அர்ப்பணிப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
✅ பெற்றோர்கள் & மாணவர்கள் – இந்த விழாவிற்கு உயிர் கொடுத்தது உங்களது வருகையும் உற்சாகமும்தான்.

சிறப்பு நன்றிகள்:
எங்களது நிகழ்ச்சியைச் சிறப்பித்து காணொளி வெளியிட்ட மின்னல் எஃப்.எம் (Minnal FM) அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

👇 விழாவின் சிறப்பம்சங்களைக் காண கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்:
🔗 https://www.facebook.com/share/v/1GaftCWGXv/

"பாரம்பரியம் காப்போம் - ஒற்றுமை வளர்ப்போம்"
முன்னாள் மாணவர் சங்கம் (MMS)

🌾 PESTA PONGGAL PERPADUAN 2026: SATU KEJAYAAN CEMERLANG! 🔥

Kami dengan penuh sukacita ingin mengumumkan bahawa Sambutan Ponggal Perpaduan kita telah berlangsung dengan jayanya! Pencapaian ini tidak mungkin tercapai tanpa sinergi luar biasa antara "empat tunggak" sekolah dan sokongan padu komuniti kita.

Sekalung Penghargaan Buat:
✅ Pentadbiran Sekolah, PIBG & LPS – Atas kepercayaan dan kepimpinan yang tidak berbelah bahagi.
✅ Guru-guru & Staf – Atas bimbingan serta kerja keras anda semua di lapangan.
✅ Sukarelawan MMS – Anda adalah tulang belakang kami! Terima kasih atas peluh, masa, dan dedikasi yang dicurahkan.
✅ Ibu Bapa & Murid-murid – Kerana menyerikan dan menghidupkan suasana festival ini.

Terima Kasih Khas:
Terima kasih yang tidak terhingga kepada Minnal FM kerana telah menyiarkan video liputan khas mengenai program kami.

👇 Mari saksikan kemeriahan sambutan kami di pautan ini:
🔗 https://www.facebook.com/share/v/1GaftCWGXv/

"Tradisi Dijulang, Perpaduan Terbilang"
Persatuan Bekas Murid SJKT Taman Melawati (MMS)




11/02/2026

SJKT Taman Melawati
Sjkt Taman Melawati
SJK (T) TAMAN MELAWATI EX-STUDENTS CLUB

29/01/2026

*ஒற்றுமை பொங்கல் 2026.*

வணக்கம்.
தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கமும்
பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி வாரியமும் மற்றும் பள்ளி நிர்வாகமும்
இணைந்து 2026இன் ஒற்றுமை பொங்கல் விழாவினை கொண்டாட
முனைகிறோம்.

இந்த விழாவை மெருகேற்ற, முன்னாள் மாணவர் சங்கம் தங்களை பெருமனதுடன் வரவேற்கிறது.

*விழா விபரங்கள்:*
*நாள் : 28 பிப்ரவரி 2026 (சனிக்கிழமை)*
*நேரம் : 7.00 காலை – 1.00 மதியம்*
*இடம் : தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி.*

அனைவரும் நமது பாரம்பரிய உடையில் வருகை தந்து விழாவினைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் ஆதரவிற்கு நன்றி.

நம் பண்பாட்டை வளர்ப்போம்.

🙏வருக வருக🙏

மேலும் விபரங்களுக்கு
*திரு ஜெகன் மாணிக்கம் - (0123940183)*
*திரு பாரிராஐன்- (016 655 4681)*




Photos from Sjk Taman Melawati Ex-Students Club's post 03/12/2025
Photos from Sjk Taman Melawati Ex-Students Club's post 03/12/2025

🎉 10-வது படிவப் படிகள் நிகழ்ச்சி வெற்றி! 🎉

​தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த 10-வது படிவப் படிகள் (PROGRAM MELANGKAH KE SEKOLAH MENENGAH) நிகழ்ச்சி இன்று (3/12/2025) தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது!

​இடைநிலைப் பள்ளிக்குச் செல்லவிருக்கும் நமது ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் புதிய பயணத்திற்கு வழிகாட்டும் வகையிலும், ஊக்கமளிக்கும் வகையிலும் இந்நாள் அமைந்தது என்பதில் மிகையல்ல.

​🙏 நன்றி அறிவிப்பு:
​இந்த மாபெரும் நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் முன்னாள் மாணவர் சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

​பள்ளி நிர்வாகம்: இந்த நிகழ்வுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எங்களின் பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

​சிறப்பு வளவாளர்கள்: தங்கள் நேரத்தையும் அனுபவத்தையும் அளித்து மாணவர்களுக்குச் சிறப்பான வழிகாட்டுதலை வழங்கிய சிறப்பு வளவாளர்களான ஆசிரியர் திருமாவளவன் மற்றும் கண்காணிப்பாளர் புஷ்பாலதா சுகுமார் ஆகியோருக்கு எங்கள் சிறப்பு நன்றிகள்.

​அனுபவம் பகிர்ந்தோர்: இடைநிலைப் பள்ளி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்த குமாரி யுவிகா, குமாரி லக்ஷ்மிதா, குமாரி அனுஸ்ரீ, மற்றும் குமாரன் ஹர்வின் ஆகியோருக்கும் மனம் கனிந்த நன்றி.

​அனைத்துக் குழு உறுப்பினர்கள்: இந்த நிகழ்ச்சியைத் திறம்படத் திட்டமிட்டு ஒருங்கிணைத்த முன்னாள் மாணவர் சங்கத்தின் அனைத்துக் குழு உறுப்பினர்களுக்கும் எங்களது பாராட்டுகள்!

​மாணவர்களின் எதிர்காலத்திற்காகப் பங்களித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள்!

​ #முன்னாள்மாணவர்சங்கம் #படிவப்படிகள்10

Want your school to be the top-listed School/college in Kuala Lumpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Kuala Lumpur
53100

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Friday 07:00 - 17:00