SJKT Ladang Glenmarie

SJKT Ladang Glenmarie

Share

SJKT Glenmarie always ready to service our childrens

Photos from SJKT Ladang Glenmarie's post 25/05/2026

*மாவட்ட அளவிலான மொழி விழா 2026*

கடந்த (20/05/2026) புதன்கிழமையன்று மாவட்ட அளவிலான மொழிவிழா கின்றாரா தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் 5 போட்டிகள் நடத்தப்பட்டன. அவை மலாய்மொழிப் பேச்சுப் போட்டி, மலாய்மொழி கதைக் கூறும் போட்டி, சொல் தேடல், கையெழுத்து போட்டி, தமிழ்மொழி கட்டுரை எழுதும் போட்டி ஆகும். இதில் நம் மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 12 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் முதல் ஐவர் வெற்றியாளர்களாகவும் மீதம் 7 பங்கேற்பாளர்கள் ஆறுதல் பரிசுகளையும் பெற்றனர்.

நம் பள்ளி மாணவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிகாட்டினர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

1. *சொல் தேடல்* -
கு.அக்ஷய கிருஷ்ணா (ஆண்டு 3) - முதல் நிலை வெற்றியாளர் / 1st place winner

2. *கட்டுரை போட்டி*
சு.ஹேமலதா (ஆண்டு 6) - இரண்டாம் நிலை வெற்றியாளர் / 2nd place winner

3.*கையெழுத்து போட்டி-படிநிலை 2*
தாரணி ஆனந்தன் (ஆண்டு 6) - மூன்றாம் நிலை வெற்றியாளர் / 3rd place winner

3. *கையெழுத்து போட்டி-படிநிலை1*
கு.அக்ஷய சுரபி (ஆண்டு 3) - ஆறுதல் பரிசு

4. *மலாய் பேச்சுப்போட்டி*
சையது ஃபக்ருதீன் (ஆண்டு 5)-ஆறுதல் பரிசு

5. *மலாய் கதைக் கூறும் போட்டி*
ம. அர்வின் (ஆண்டு 4)
-ஆறுதல் பரிசு

மாணவர்களுக்குப் பள்ளியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from SJKT Ladang Glenmarie's post 11/05/2026

🥳மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா 2026🥳

கடந்த (06/05/2026) புதன்கிழமையன்று மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் 3 போட்டிகள் நடத்தப்பட்டன. அவை பேச்சுப் போட்டி, திருக்குறள் போட்டி மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டி ஆகும். இதில் நம் மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 12 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மூன்று போட்டிகளிலும் முதல் ஐவர் வெற்றியாளர்களாகவும் மீதம் 7 பங்கேற்பாளர்கள் ஆறுதல் பரிசுகளையும் பெற்றனர்.

நம் பள்ளி மாணவர்கள் இம்மூன்று போட்டிகளிலும் சிறப்பாகத் தங்கள் படைப்பினை வெளிகாட்டினர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

1. *திருக்குறள் போட்டி* -
ரஸ்வின் குமரா (ஆண்டு 6) - மூன்றாம் நிலை வெற்றியாளர் / 3rd place winner

2. *பேச்சுப் போட்டி*
தாரணி ஆனந்தன் (ஆண்டு 6) - நான்காம் நிலை வெற்றியாளர் / 4th place winner

3. *கவிதை ஒப்புவித்தல் போட்டி*
சத்தீஸ்வர் த/பெ சிவா (ஆண்டு 4) - ஆறாம் நிலை வெற்றியாளர் / 6th place winner


மாணவர்களுக்குப் பள்ளியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

24/04/2026

🌹Public Speaking Class🌹

Kids performance last week being a junior chef speaking using public speaking skills

Photos from SJKT Ladang Glenmarie's post 06/04/2026

கடந்த 3/4/2026 வெள்ளிக்கிழமையன்று மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டில் பெட்டாலிங் பெர்டானா மாவட்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'போலிங்' விளையாட்டுப் போட்டி (PERTANDINGAN BOWLING) நடைபெற்றது. இப்போட்டியில் 25 குழுக்கள் பங்கு பெற்றன. அவற்றுள் நமது பள்ளி ஆசிரியர்கள் 5-ஆம் நிலையில் வெற்றி பெற்றனர். அவர்களுக்குப் பள்ளி நிர்வாகம் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கிறது.

Photos from SJKT Ladang Glenmarie's post 04/03/2026

28.02.2026/ Sabtu
Mesyuarat Agung Tahunan PIBG 2026

🌀YDP baharu PIBG 2026 ialah En.Kumara Gurubaran a/l Muthusamy

🌀Majlis Penghargaan kepada mantan YDP, En.Gurupatham a/l Panchamirutham.

Photos from SJKT Ladang Glenmarie's post 15/02/2026

13.02.2026-ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, நமது
கிளன்மேரி தமிழ்ப்பள்ளியில் பள்ளி மாணவர் தலைவர்கள், கருவள நடுவத் தலைமை மாணவர்கள் மற்றும் வகுப்புத் தலைவர்கள் பதவி நியமன நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறியது.

இந்நிகழ்வில் மலேசிய ஆகாயப்படையைச் சேர்ந்த மேஜர் சரவணகுகன் சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, மாணவர்களுக்கு நியமனச் சான்றிதழ் வழங்கினார். மேஜர் அவர்கள், “எந்தவொரு மாணவர் நல்ல கட்டொழுங்குடனும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறார்களோ அவர்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவர்”, என்றார். இந்நிகழ்வில் பதவி் பிரமானம் பெற்ற மாணவர்களது பெற்றோர்களும் கலந்துக்கொண்டு, மாணவர்களை வாழ்த்தினர். பதவி பிரமானம் பெற்ற அனைத்து மாணவர்களும் தலைமையாசிரியர் திருமதி.இரா.மணிமலர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வு மாணவர் நல துணைத்தலைமையாசிரியை திருமதி மலர் ஜோதி பொறுப்பிலும் பள்ளி ஆசிரியகளது ஏற்பாட்டிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.



Majlis Watikah Pelantikan Pengawas Sekolah , Pengawas Pusat Sumber Sekolah, Ketua dan Penolong Ketua Kelas SJKT Ladang Glenmarie telah dilaksanakan pada 13.02.02026.
Majlis dirasmikan oleh Mejar Sharavanakukhan Sanmugam [TUDM].
Pihak sekolah merakamkan penghargaan kepada semua pihak yang terlibat dalam menjayakan Majlis Pelantikan Watikah ini.

14/02/2026

Our school is organizing a Public Speaking Class to help students build confidence, improve communication skills, and develop effective speaking abilities 💪🙏

Photos from SJKT Ladang Glenmarie's post 05/02/2026

பள்ளி அளவிலான குறுக்கோட்டப் போட்டி 2026
KEJOHANANMERENTAS DESA PERINGKAT SEKOLAH 2026

🌀Tarikh / Hari : 30.01.2026 (Jumaat)
🌀Masa : 8.00 pagi

Photos from SJKT Ladang Glenmarie's post 21/01/2026

பள்ளிக்குச் செல்வோம் வாரீர் 2026

12/1/2025-ஆம் திங்கட்கிழமை நம் பள்ளியில் 2026 ஆண்டிற்கான “பள்ளிக்குச் செல்வோம் வாரீர்” எனும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது, 2026-ஆம் ஆண்டு புதிய பள்ளி தவணையில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் அனைவரையும் பள்ளியின் வாயிலில் புன்னகையுடன் நின்று, தலைமையாசிரியர் திருமதி இரா.மணிமலர் ராமதாஸ் அவர்களும். பள்ளித் துணைத்தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் மற்றும் பள்ளித் தொடர்ப்புத் துறை காவல் அதிகாரியும் வரவேற்றனர். அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்.

Program Penyayang & Jom Ke Sekolah Tahun 2026

Program Penyayang & Jom Ke Sekolah telah berlangsung di dengan jayanya Guru Besar Pn.R.Manimalar, penolong-penolong kanan, guru-guru, NYDP PIBG, dan Pegawai Perhubungan Sekolah (PPS) telah mengalu-alukan kehadiran murid di perkarangan sekolah. Guru Besar Pn.R.Manimalar mengucapkan syabas dan tahniah kepada semua murid yang hadir ke sekolah dengan penuh ceria dan gembira.

Want your school to be the top-listed School/college in Kuala Lumpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Kuala Lumpur
52100