SJKT LBP

SJKT LBP

Share

SJK(T) LADANG BATU PEKAKA

25/08/2026

MAKLUMAN CUTI UMUM SEMPENA MAULIDUR RASUL
நபிகள் நாயகம் பிறந்த தின பொது விடுமுறை

Photos from SJKT LBP's post 21/08/2026

*🏆 பத்து பெகாக்கா இளம் கணித முத்துகளின் தேசிய சாதனை 🏆*

தேசிய அளவிலான ஸ்ரீனிவாச ராமானுஜன் கணிதப் போட்டி 2026-இல், மலேசியா முழுவதும் 350 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், நமது பத்து பெகாக்கா தமிழ்ப்பள்ளியின் இரு இளம் கணித முத்துகள் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

*🌟 7 வயது மாணவி அனுகீர்த்தனா த/பெ சரவணக்குமார் — தேசிய அளவில் 18ஆம் இடம்!*

*🌟 8 வயது மாணவர் இம்மேனுவேல் ஸ்த்பானோ சசிகுமார் — தேசிய அளவில் 19ஆம் இடம்!*

இளம் வயதிலேயே கணிதத் திறமையை வெளிப்படுத்தி, 350 மாணவர்களைக் கொண்ட தேசியப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ள இவ்விரு இளம் சாதனையாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்! 👏🏽🏆

இவர்களின் சாதனை, மாணவர்களின் விடாமுயற்சி, பெற்றோரின் ஊக்கம் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அழகிய வெளிப்பாடாகும்.

மாணவர்களின் கணித ஆற்றலை வெளிக்கொணர்ந்த பள்ளியின் கணித ஆசிரியர்களுக்கும் கணித பாடக்குழுத் தலைவர் ஆசிரியை பூர்ணி அவர்களுக்கும் சக ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்

பத்து பெகாக்கா தமிழ்ப்பள்ளியின் இளம் கணித முத்துகளே, உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்!
இன்று தேசிய சாதனை… நாளை இன்னும் உயர்ந்த சிகரங்களைத் தொடட்டும்! 🌟

குறிப்பு: தேசிய நிலையிலான இராமனுஜன் கணித போட்டியில் கலந்து கொண்டு *பங்கேற்பு சான்றிதழ்* பெற்ற மாணவர்களுக்கும் தங்களின் முயற்சியையும் மனதாரப் பாராட்டுகிறோம்.

*தர்ணீஸ்வரன் அன்பரசன்*
*TARNESWARAN AHNBEHRASAN*
*யாழினி தர்மர் ராஜ்*
*YAALINI TARMAR RAJ*

Photos from SJKT LBP's post 11/08/2026

பாலிங் மாவட்ட அளவில் நடைபெற்ற பாலர்பள்ளி மாணவர்களுக்கான காற்பந்து போட்டியில் தேசிய வகை பத்து பெக்காக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை.

ஹித்திஸ் கிருஷ்ணக்குமார் ஒன்பதாம் நிலையும்

ஹபினேஷ் முனிபிரகாஷ் நான்காம் நிலையும்

பெற்றுத் தடம் பதித்துள்ளனர்.

இளம் விளையாட்டாளர்களை வாழ்த்துவோம்.

Students from SJKT Ladang Batu Pekaka have made their mark in the Baling District-Level Preschool Futsal Competition.

🏆 Hitesh A/L Krishna Kumar – 9th Place

🏆 Habineesh A/L Munipragash – 4th Place

Congratulations to both our young athletes for their wonderful achievement and sporting spirit!

Let us continue to support and celebrate our young sports talents. 👏⚽🏅

09/08/2026

Tahniah diucapkan kepada Yuvan A/L Gunalan dan Yaalini A/P Tarmar Raj atas kejayaan meraih tempat ketiga dalam Pertandingan Scrabble 2026 Peringkat Daerah Baling.

யுவன் A/L குணாளன் மற்றும் யாழினி A/P தர்ம ராஜ் ஆகியோர் 2026ஆம் ஆண்டு பாலிங் மாவட்ட அளவில் நடைபெற்ற ஸ்கிராபிள் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!

09/08/2026

மாவட்ட நிலையில் நடைபெற்ற மலாய்மொழி கதை கூறும் போட்டியில் பள்ளி மாணவி ரம்யா முருகேசன் இரண்டாம் நிலையில் வெற்றிப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

Dalam Pertandingan Bercerita Bahasa Melayu yang berlangsung di peringkat daerah, murid sekolah, Rammiya A/P Murugesen, telah berjaya meraih tempat kedua dan mencipta kejayaan membanggakan.

11/07/2026

🌸💫தேசிய வகை பத்து பெக்காக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிர்வாகத் துணைத்தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் திருமதி தனலட்சுமி த/பெ கந்தசாமி அவர்களை, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக மனமார்ந்த மகிழ்ச்சியுடன் அன்போடு வரவேற்கிறோம்.💐🌟

🌟தங்களின் சிறந்த கல்விப் பணி அனுபவம், திறமையான நிர்வாகம் மற்றும் அர்ப்பணிப்பான சேவை எமது பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் புதிய உத்வேகத்தையும் உயர்வையும் அளிக்கும் என்ற முழு நம்பிக்கை கொள்கிறோம்.💫💫

வருக! வருக!
தங்களின் வருகை பள்ளிக்கு மேலும் சிறப்பையும் வெற்றியையும் சேர்க்கட்டும்!💐💐

🌸A Warm Welcome🌸

🌟💫On behalf of the school administration, teachers, staff, parents, and students, we extend our heartfelt and warmest welcome to Mrs. Danaletchimy D/O Kandasamy, who has assumed the position of Senior Assistant (Administration) at SJKT Ladang Batu Pekaka.

We are confident that your extensive experience in education, exemplary leadership, and dedicated service will inspire greater progress and contribute significantly to the continued growth and excellence of our school, as well as the holistic development of our students.💐✨

Welcome! Welcome!

💫💫May your presence bring greater success, prosperity, and distinction to our school. We wish you every success in your new role.💐🌟

11/07/2026

🌸🌟Syabas kepada Yuvan A/L Gunalan dan Yaalini A/P Tarmar Raj atas kejayaan meraih Naib Johan dalam Pertandingan Scrabble Karnival Semarak Perpaduan Bahasa Zon Kuala Ketil 2026.

💫Kejayaan ini membuktikan bahawa usaha, ketekunan dan semangat berpasukan sentiasa membuahkan hasil. Semoga pencapaian ini menjadi inspirasi kepada seluruh warga SJKT Ladang Batu Pekaka untuk terus berusaha mencapai kecemerlangan.✨✨

Tahniah sekali lagi! Teruskan melakar kejayaan! 🌟

🏆மனமார்ந்த வாழ்த்துகள்🎉

🌸🌟Yuvan A/L Gunalan மற்றும் Yaalini A/P Tarmar Raj ஆகியோர் கோலா கெட்டில் வட்டார அளவிலான "Pertandingan Scrabble Karnival Semarak Perpaduan Bahasa" போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

💫இவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையே இவ்வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. இச்சாதனை மேலும் பல வெற்றிகளுக்கான தொடக்கமாக அமைய வாழ்த்துகிறோம்.✨✨

03/07/2026

*மாணவி வேர்சனவின் பேச்சுப் போட்டி சாதனை*

தேசிய அளவில் நடைபெற்ற MICCA அமைப்பின் பொதுப் பேச்சுப் போட்டியில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அந்தப் போட்டியில் தனது சிறப்பான பேச்சுத் திறன், தெளிவான கருத்து வெளிப்பாடு மற்றும் மேடை ஆளுமையின் மூலம் மாணவி வேர்சன அரசகுமார் சிறந்து விளங்கி, முதல் 100 சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராகத் தேர்வாகி மாபெரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இம்மிகப் பெருமைக்குரிய சாதனை, அவருடைய விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும்.

வரவிருக்கும் 18.07.2026 அன்று University of Malaya வளாகத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மாபெரும் இறுதிச் சுற்றில், நாட்டின் தலைசிறந்த போட்டியாளர்களுடன் மாணவி வேர்சன அரசகுமார் திறமையை வெளிப்படுத்தவுள்ளார்.

பத்து பெக்காக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவியாக அவர் எட்டியுள்ள இச்சாதனை, பள்ளிக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.

இறுதிச் சுற்றிலும் சிறப்பாகப் பேசி வெற்றி வாகை சூடி, தேசிய அளவில் பள்ளியின் பெயரையும் மாநிலத்தின் பெருமையையும் உயர்த்துவார் என அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்த்துகின்றோம்.

இவ்வேளையில் தொடர் ஆதரவு நல்கி வரும் பள்ளித் தலைமையாசிரியருக்கும் துணைத்தலைமையாசிரியருக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

🌹 மாணவி வேர்சன அரசகுமாருக்கு நமது மனமார்ந்த பாராட்டுகளும் இனிய வாழ்த்துகளும்! வெற்றி உங்கள் வசமாகட்டும்! 🌹

*Student Versana's Public Speaking Achievement*

In the national-level public speaking competition organized by MICCA, more than 400 students from various parts of the country participated enthusiastically. Through her outstanding speaking skills, clear expression of ideas, and impressive stage presence, student Versana Arasa Kumar excelled in the competition and was selected as one of the Top 100 speakers, thereby qualifying for the prestigious grand finals.

This remarkable achievement reflects her perseverance, self-confidence, and dedication.

The national grand final, scheduled to be held on 18 July 2026 at University of Malaya, will see Versana Arasa Kumar competing alongside some of the country's finest young speakers and showcasing her talent on the national stage.

As a student of SJKT Ladang Batu Pekaka, this achievement is a matter of great pride for her school and the wider community.

We are confident that she will continue to perform exceptionally in the final round, emerge victorious, and bring honour not only to her school but also to the state.

On this occasion, we would also like to express our heartfelt gratitude to the Headmaster, Senior Assistant Headmaster, the teachers who trained and guided her, all the school teachers, the Parent-Teacher Association (PTA), and her parents for their continuous encouragement, support, and dedication throughout her journey.

🌹 Our heartfelt congratulations and best wishes to student Versana Arasa Kumar. May success be yours and may you continue to shine on the national stage! 🌹

Photos from SJKT LBP's post 27/06/2026

கெடா மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் விழாவில் கெடா மாநிலம் முழுதிலும் இருந்து 32 தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொண்டனர். அவ்வகையில் தங்களின் படைப்பினைத் திறம்படப் படைத்து நமது பள்ளியின் இளம் ஆய்வாளர்கள் *9-வது இடத்தினில்*
வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த வெற்றிக்கு முழு உழைப்பினையும் வழங்கிய ஆசிரியர்கள் திருமதி சு.சுமதி, குமாரி ச.ஜோதி மற்றும் மாணவர்கள்

1.லிம் யென் சென்@ மகாலெச்சுமி
2.வெர்சனா
3.தரணிஸ்வரன்
4.துர்காஷினி
5.சரண்யா

ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.💐💐🌟🌟

Photos from SJKT LBP's post 21/06/2026

*சீனிவாச இராமானுஜன் கணிதப் போட்டியில் பத்து பெக்காக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை*

உலகப் புகழ்பெற்ற கணித மேதை சீனிவாச இராமானுஜனின் பெயரில் நடத்தப்பட்ட சீனிவாச இராமானுஜன் கணிதப் போட்டியில், பத்து பெக்காக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறப்பான சாதனையைப் படைத்துள்ளனர்.

பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் ஆர்வத்துடனும் திறமையுடனும் பங்கேற்ற மாணவர்களில் ஏழு பேர் மாவட்ட நிலைப் போட்டிக்குத் தேர்வாகினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியிலும் தங்களின் கணிதத் திறன், தர்க்கச் சிந்தனை மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றலை வெளிப்படுத்திய மாணவர்களில் நான்கு பேர் வெற்றி பெற்று தேசிய நிலைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இச்சாதனை பள்ளிக்கே பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கான சான்றாகவும் திகழ்கிறது. தேசிய நிலைக்குத் தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு பள்ளி சமூகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வேளையில், மாணவர்களைத் திறம்பட பயிற்றுவித்த கணித ஆசிரியர் திருமதி பூர்ணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வழிகாட்டும் பள்ளித் தலைமையாசிரியர், துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்பும் இவ்வெற்றியில் முக்கிய இடம் பெறுகிறது.

தேசிய நிலைப் போட்டியிலும் நமது மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு மேலும் பல வெற்றிகளைப் பெற்று பள்ளிக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

"முயற்சி, பயிற்சி, நம்பிக்கை – வெற்றியின் மூன்று தூண்கள்."

வாழ்த்துகள்! தேசிய நிலைப் போட்டியில் வெற்றிக் கொடி நாட்ட வாழ்த்துகள்! 🎉🏆

Want your school to be the top-listed School/college in Kuala Ketil?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Jalan Kuala Ketil
Kuala Ketil
08300

Opening Hours

Monday 07:00 - 16:00
Tuesday 07:00 - 16:00
Wednesday 07:00 - 16:00
Thursday 09:00 - 17:00
Saturday 07:00 - 16:00
Sunday 09:00 - 17:00