21/08/2026
Pada hari ini 21.08.2026 (Jumaat), masalah longkang pecah dan tersumbat di luar kawasan sekolah dapat ditangani sepenuhnya. Puan Vijaya Thaathan, Guru Besar STDJ dan Encik Lawrence Ramamurithy, Guru Penolong Kanan Pentadbiran dan Kurikulum STDJ telah berjumpa Tuan David Jude Pereira, Pengurus Ladang Diamond Jubilee untuk membuat aduan berkenaan isu ini pada 25.06.2026 (Khamis) di Pejabat LDJ. Beliau telah berjanji untuk menyelesaikan isu ini dalam masa dua bulan. Pada kesempatan ini, pihak pengurusan STDJ merakamkan ucapan terima kasih dan setinggi-tinggi penghargaan kepada beliau atas tindakan yang diambil dan sentiasa prihatin dengan keselesaan dan keselamatan warga sekolah.
இன்று 21.08.2026 (வெள்ளிக்கிழமை), பள்ளி வளாகத்தின் வெளியே உடைந்த நிலையிலும் அடைப்பாகவும் இருக்கக்கூடிய கால்வாய் பிரச்சனைக்கு முழு தீர்வுக் காணப்பட்டது. கடந்த 25.06.2026 (வியாழக்கிழமை) பள்ளியின் தலைமையாசிரியை திருமதி விஜயா தாதன் மற்றும் நிர்வாகக் கலைத்திட்டத் துணைத் தலைமையாசிரியர் திரு. லோரன்ஸ் ராமமூர்த்தி இருவரும் டைமண்ட் ஜூபிளி தோட்டத்தின் நிர்வாகி உயர்திரு. டேவிட் ஜூட் பெரேரா அவர்களைச் சந்தித்து இது குறித்துப் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாத காலத்தில் இந்தப் பிரச்சனைக்கான தீர்வு எட்டப்படும் என்று உறுதி அளித்திருந்த தோட்ட நிர்வாகியின் கூற்றுக்கேற்ப இப்பிரச்சினைக்கு முழு தீர்வு கிடைத்துள்ளது. இவ்வேளையில், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தோட்ட நிர்வாகி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.