16/04/2026
நம் பள்ளியின் 57-ஆம் ஆண்டு பள்ளி திடல் தட விளையாட்டுப் போட்டி 11.04.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திருமதி துளசி மனோகரன் அவர்கள் இவ்வாண்டு திடல் தட விளையாட்டுப் போட்டியிற்குச் சிறப்பு வருகையளித்து திறப்பு செய்தார். இப்போட்டியில் சிவப்பு இல்லம் முதல் நிலையில் வெற்றி வாகை சூடியது. வெற்றி பெற்ற குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டிற்கானப் போட்டி விளையாட்டு சிறப்பாக நடந்தேற உதவிக்கரம் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், சிறப்பு விருந்தினராக வருகையளித்த புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திருமதி துளசி மனோகரன் அவர்களுக்கும், புனித பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மற்றும் அவர் தம் குழுவினர்களுக்கும் SPC குடும்பத்தினரின் மனமார்ந்த நன்றியினைத் தெரித்துக் கொள்கிறோம்.
Kejohanan Balapan & Padang kali ke - 57 telah diadakan pada 11.04.2026 Sabtu yang lalu. ADUN Buntong YB Thulsi Manogaran telah berbesar hati merasmikan temasya sukan pada kali ini. Antara acara yang dijalankan ialah senamrobik, persembahan karate, sukaneka bagi tahap 1, lari terus, lari berganti dan acara untuk ibu bapa dan bekas murid. Johan keseluruhan pada tahun ini jatuh kepada rumah Merah. SPC merakamkan jutaan terima kasih kepada YDP Pibg En Premkumar serta AJK Pibg, semua penaja, ibu bapa dan guru- guru yang sama-sama menjayakan kejohanan pada tahun ini.
09/04/2026
📝Google form ini hanya boleh diakses dengan id Delima sahaja.
📝Kuiz ini akan tamat pada 11 April 2026
📝Kuiz ini juga telah dikongsi dalam classwork murid.
https://forms.gle/nc3hqdGoFWdUkMor8
📝இந்த Google Form-ஐ DELIMa ID பயன்படுத்தி மட்டுமே அணுக முடியும்.
📝இந்த வினாடி வினா 11 ஏப்ரல் 2026 அன்று முடிவடையும்.
📝 இந்த வினாடி வினா மாணவர்களின் வகுப்பு Google classroom-இலும் பகிரப்பட்டுள்ளது.
https://forms.gle/nc3hqdGoFWdUkMor8
20/03/2026
நமது பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் மெகவர்ஷினி த/பெ சுரேந்திரன், கீர்த்திஷா த/பெ அன்பழகன், ராஜலட்சுமி த/பெ நெரு டாஸ், சுருதி நிரஞ்சினி த/பெ ரவிந்திரபானி ஆகியோர் செட்டியார் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் ஆரம்பப் பள்ளிகளுக்கிடையிலான 4×100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதல் நிலையில் வெற்றி பெற்றுள்ளனர்.
சிறப்பாகக் கலந்து கொண்டு நமது பள்ளிக்குப் பெருமைச் சேர்த்த மாணவிகளுக்கு SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
KIRTHISHA A/P ANBALAGAN, MEGAVARSHINI A/P SURENTHIRAN, RAJALAKSHMI A/P NEHRU DASS dan SHRUTI NIRANJANI RAVINDRAPANY telah berjaya memenangi Johan dalam Acara 4×100 Meter larian antara sekolah rendah di Sukan Tahunan SJKT Chettiars. Warga SPC mengucapkan tahniah dan syabas!
20/03/2026
கடந்த 6 டிசம்பர் 2025 அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற Preliminary English Test (Cambridge English Entry level certificate in ESOL International Entry 3 ) எனும் தேர்வில் மாணவி லித்திக்கா ஸ்ரீ யமுனேஸ்வரன் Grade B பெற்றுள்ளார் என்பது பெருமைக்குரிய சாதனை. மாணவிக்கு SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Littikkasrie Yamuneswaran telah menerima Gred B dalam Preliminary English Test (Cambridge English Entry Level certificate in ES International Entry 3). Warga SPC mengucapkan tahniah dan syabas.