17/05/2026
15.05.2026 அன்று நமது பள்ளியின் துணைத்தலைமையாசிரியர் திருமதி சுபா காந்தி முத்து அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. ஆசிரியை திருமதி சுபா காந்தி அவர்கள் இப்பள்ளிக்கு ஆற்றிய பங்கு மிகவும் பெரிது. அவற்றைப் போற்றும் வகையில் அவருக்கு இப்பணி நிறைவு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கு ஆலோசகராகவும் மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் நமது பள்ளியின் மேம்பாட்டிற்குப் பல வழிகளில் துணைப்புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியை திருமதி சுபாகாந்தி அவர்களை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்விற்குச் சிறப்பு வருகையளித்த பிற பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும், தன் பணியைச் செவ்வனே செய்த ஆசிரியை திருமதி சுபாகாந்தி அவர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Pada 15.05.2026, majlis persaraan Penolong Kanan sekolah kami, Puan Subar Gandi Mutho telah berlangsung dengan meriah dan penuh penghormatan. Beliau telah banyak menyumbang jasa dan bakti kepada masyarakat serta sekolah sepanjang tempoh perkhidmatannya. Sebagai tanda penghargaan terhadap segala pengorbanan dan sumbangan beliau, majlis persaraan ini telah diadakan dengan penuh istimewa.
Beliau juga merupakan seorang penasihat yang dihormati dalam kalangan guru serta pembimbing terbaik kepada para murid. Selain itu, beliau turut memainkan peranan penting dalam pelbagai usaha pembangunan dan kemajuan sekolah.
Pihak sekolah ingin merakamkan setinggi-tinggi penghargaan dan ucapan terima kasih kepada para guru besar, guru-guru dari sekolah lain, rakan-rakan serta ahli keluarga yang sudi hadir bagi memeriahkan majlis ini. Sekalung penghargaan juga ditujukan khas kepada Puan Subar Gandi atas segala jasa, dedikasi dan komitmen beliau sepanjang menjalankan tugas dengan cemerlang.