23/08/2026
🌷-🌷 🌷 39-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான முத்தமிழ் விழா 2026
🌷 நாள் : 22.08.2026 (சனிக்கிழமை)
🌷 இடம் : தேசிய வகை லாபிஸ் தமிழ்ப்பள்ளி
செகாமட் மாவட்ட அளவிலான முத்தமிழ் விழாவில் நம் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடனும் திறமையுடனும் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் மகத்தான வெற்றிகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
தலைமையாசிரியர்
திருமதி பிரேமா இராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில்,
புறப்பாடத் துணைத் தலைமையாசிரியர்
திருமதி வெண்ணிலா கண்ணன் அவர்களின் மேற்பார்வையில்,
தமிழ்மொழிப் பணித்திட்டத் தலைவர்
திருமதி சசிப்பிரியா ரேணு அவர்களின் வழிகாட்டுதலில்,
மாணவர்களின் வெற்றிக்காக அயராது உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும், உறுதுணையாக நின்ற பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கும், முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அன்புப் பெற்றோர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்கள் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் எங்கள் மாணவர்களின் வெற்றிக்கு வலுசேர்த்துள்ளது!
🌟 வெற்றிப் பயணம் தொடரட்டும்! 🏆
வாழ்த்துகளும் பாராட்டுகளும்! 👏🌷
Sekolah kita telah melakar kejayaan membanggakan dalam Muthamizh Vizha Peringkat Daerah Segamat 2026 melalui penyertaan dan pencapaian cemerlang para murid.
Di bawah kepimpinan Guru Besar, Puan Prema Ramakrishnan, dengan bimbingan PK Kokurikulum, Puan Vennila Kannan dan Ketua Panitia Bahasa Tamil, Puan Sasipriya Renoo.
Setinggi-tinggi penghargaan dan terima kasih kepada semua guru pembimbing, PIBG dan ibu bapa atas sokongan, komitmen dan kerjasama yang diberikan.
🏆 Tahniah atas kejayaan semua murid! 🌟