Al-ILMIYA MV Welpothuwewa

Al-ILMIYA MV Welpothuwewa Official page of AL-ILMIYA MV

27/03/2026

AAT January 2026 Results…!

Congratulations to All the students who have successfully completed the Level I of AAT. 💐

May this be your great start 💐

27/03/2026

AAT January 2026 Results…!

Congratulations to All the students who have successfully became Passed Finalists and completed the Level III of AAT. 💐

16/03/2026

புதிய கனவுகளுக்கு
புதிய ஆரம்பம்…
வெற்றியை நோக்கி
நம்பிக்கையுடன் ஒரு பயணம்…
அறிவை வளர்க்க
எதிர்காலத்தை உருவாக்க
2028 புதிய மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
இன்றே சேருங்கள்…
உங்கள் வெற்றியின் முதல் படி இங்கிருந்து ஆரம்பம்! ✨

𝐀𝐋 𝐈𝐋𝐌𝐈𝐘𝐀 𝐌𝐕💫

Placement Exam !
Ilmiya Commerce Project- ICP
Al Ilmiya MV Welpothuwewa.

2028 வணிக பிரிவு மாணவர் அனுமதி தொடர்பான மேலதிக தகவல்கைளை பெற கீழுள்ள whatsapp Group link ஐ கிளிக் செய்யது குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். மேலதிக தகவல்கள் whatsapp group இல் மட்டுமே பகிரப்படும் என்பதால் அனைவரும் கட்டாயம் அதில் இணைந்து கொள்ளவும்.

https://chat.whatsapp.com/BkeKv1NjOvE3aCkquIF5x6?mode=hq1tcli

online Application ஐ நிரப்புவதற்கு கீழுள்ள link ஐ கிளிக் செய்யவும்.
https://surveyheart.com/form/69b156382ac0ef04c53b566e

05/03/2026
27/02/2026

ILMIYAN ACADEMY OF SCIENCE - Welpothuwewa
புதிய மாணவர் அனுமதி -2028
உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகளுக்கான புதிய மாணவர் அனுமதிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.
உங்கள் பல்கலைக்கழக கனவை நனவாக்க முதல் நிலை தெரிவு.
பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள். கீழுள்ள லிங்கை நிரப்புவதன் மூலம் உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Google Form
https://forms.gle/HXYXb8Eu6xWqg8sg8

WhatsApp குழுமத்தில் இணைய
https://chat.whatsapp.com/L1zJKm6tnidCukObESAvSx?mode=gi_t

தொடர்புகளுக்கு
0703904385
0760067779
0776949129
0711818041

🌟 இன்று முதல் O/L பரீட்சைக்கு தோற்றும் எமது மாணவ மனிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟​நடைபெறவுள்ள சாதாரண தர (O/L) பரீட்...
17/02/2026

🌟 இன்று முதல் O/L பரீட்சைக்கு தோற்றும் எமது மாணவ மனிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟
​நடைபெறவுள்ள சாதாரண தர (O/L) பரீட்சைக்குத் தோற்றும் எமது பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுத்தர இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 📚✍
​🏛️ அல் இல்மிய ம.வி. (AL ILMIYA M.V.)
​✨ அதிபர் மற்றும் ஆசிரியர்கள்
✨ SDEC
✨ பழைய மாணவர் சங்கம் (OBA)
✨ IAS, ICP, API
✨ மற்றும் நலன் விரும்பிகள்
​வெற்றி நிச்சயம்! 🏆✨

24/01/2026

ILMIYA LUMINA 75, ILMIYA 75th anniversary Grand Educational Exhibition and Art Festival, Coming soon ...

28/12/2025

75th Anniversary of Al- ILMIYA, Grand Educational Exhibition and Art Festival Coming soon, Are You Ready? Drop your valuable comments and share with your friends

என் அல் இல்மியாவின் அன்புப் பிள்ளைகளே!  இரு வருடங்கள்…  இரு வருடங்கள் முழுமையாய்  உங்கள் கனவுகளை, காலங்களை, துள்ளித் திர...
10/11/2025

என் அல் இல்மியாவின் அன்புப் பிள்ளைகளே!
இரு வருடங்கள்…
இரு வருடங்கள் முழுமையாய்
உங்கள் கனவுகளை, காலங்களை, துள்ளித் திரியும் பள்ளிப் பருவத்தை புத்தகங்களில் புதைத்தீர்கள்.

காலை விடியலுக்கு முன்னே எழுந்து,
இரவு நட்சத்திரங்கள் மறையும் வரை
தனிமையில் பேனாவுடன் உரையாடினீர்கள்.

கூத்து, கும்மாளம், விளையாட்டுத் திடல்,
நண்பர்களின் சிரிப்பு , அரட்டை,
தூக்கத்தின் இனிய கனவுகள்,
குடும்பத்துடன் குதூகலித்த மாலை நேரங்கள்—
எல்லாவற்றையும் துறந்து,
அம்மாவின் கண்ணீரையும்,
அப்பாவின் மௌனப் புன்னகையையும்
நெஞ்சில் சுமந்து,
ஒரு எதிர்காலத்தை நெய்தீர்கள்.

இரு வருடங்களாய்
ஒவ்வொரு நாளும் பக்கங்களாய் உங்கள் வியர்வையால் நனைந்தது,
ஒவ்வொரு கோடும் உங்கள் கண்ணீரால் மங்கியது,
ஒவ்வொரு பயிற்சித் தாளும்
உங்கள் தனிமையின் கை ரேகையாய் மாறியது.

இன்று…
இன்று அந்த இரு வருடங்களின்
பொன் நூல் முடிச்சு போடும் நாள்!
இன்று உங்கள் பேனா
உங்கள் கனவுகளை
உலகுக்குக் காட்டும் நாள்!

என் பிள்ளைகளே,
அச்சம் வேண்டாம்.
உங்கள் நெஞ்சில்
இரு வருடங்களின் அறிவுத் தீப்பொறிகள்
இன்னும் சிவந்து எரிகின்றன.
அவை உங்களை வழிநடத்தும்.

கவனமாய் எழுதுங்கள்.
தைரியமாய் எழுதுங்கள்.
ஒவ்வொரு விடையையும்,
உங்கள் பெற்றோரின் பிரார்த்தனை,
ஆசிரியர்களின் நம்பிக்கை, அதுவே
எங்கள் பாடசாலையின் பெருமை.

துணிந்து நில்லுங்கள், என் செல்வங்களே!
இன்று உங்கள் நாள்!
இன்று உங்கள் வெற்றியின் முதல் பக்கம்!

அல் இல்மியா உங்களோடு இருக்கிறது—
ஒவ்வொரு ஆசிரியரின் மனம் நிறைந்த ஆசியும்,
ஒவ்வொரு நண்பரின் புன்னகையும்,
ஒவ்வொரு பெற்றோரின் ஆனந்த கண்ணீரும்
உங்கள் பின்னே நிற்கின்றன.

வெல்வீர்கள்!
நிச்சயம் வெல்வீர்கள்!
வெற்றி உங்கள் கைகளில்
பொன் மலராய்ப் பூக்க காத்திருக்கிறது!

எல்லா மாணவர்களுக்கும்
எங்கள் இதயம் நிறைந்த வாழ்த்துகள்!

எழுதுங்கள்…
உலகை ஆளப்போகும் வாரிசுகளே
இன்று எழுதுங்கள்! சரித்திரத்தின் வெற்றியை.....

வெல்க! வெல்க! வெல்க!
அல் இல்மியாவின் பிள்ளைகளே,
வெல்க
வாழ்த்துக்கள்.!!!

அல் இல்மியா .......
வெல்பொதுவெவ.

Address

Main Street
Welpothuwewa
60437

Telephone

+94711818041

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-ILMIYA MV Welpothuwewa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category