Past Pupil’s Association AAMV

Past Pupil’s Association AAMV

Share

Official Page Of Past Pupil’s Association of Al Ashraf MV (National School)

12/11/2023


#வருடாந்த_பொது_கூட்டம்_2023

அஸ்ஸலாமு அலைக்கும் , வணக்கம்.

அல் அஷ்ரப் மஹா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொது கூட்டம் கடந்த 2023/11/05 #ஞாயிற்றுக்கிழமையன்று* பாடசாலை கேட்போர் கூடத்தில் இனிதே நடைபெற்றது.

#அமைப்பின்_தலைவரும் பாடசாலையின் அதிபருமான திரு.இர்ஷாத் (நளீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் விஷேட மற்றும் மத்தியஸ்த அதிதியாக #கம்பஹா_களனி வலய தமிழ்மொழிப் பிரிவு பணிப்பாளர் #திரு. தவ்ஸீல் சேர் அவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

அமைப்பின் அங்கத்தவர்களான பழைய மாணவர்கள் பலரும், #முன்னால்_பழைய_மாணவர்_சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட அமைப்பின் ஆலோசகரான திரு.லத்தீப் அவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நிர்வாகத்தின்
#முயற்சிகளையும் அவர்களால் செயற்படுத்தப்பட்ட சேவைகளையும் கல்விப்பணிப்பாளர் #திரு.தவ்ஸீல் அவர்கள் வெகுவாக பாராட்டியதுடன் நல்ல பல ஆலோசணைகளையும் பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து #அதிபர் தனதுறையில் அனைவரையும் வரவேற்றதுடன் செயலாளர் உட்பட முன்னாள் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு நன்றிகளையும் பகிர்ந்துகொண்டார்.

பின்னர் யாப்பு சம்பந்தமாக கலந்துறையாடப்பட்டதுடன் முன்னைய நிர்வாகம் கலைக்கப்பட்டு #புதிய_நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

இதில்,
#உப தலைவராக திரு. நதீர் அவர்கள் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டதுடன்,
#செயலாளராக திரு. பாஹிம் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்,
இன்னும் பொருளாளராக திரு.ரிமாஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன்,
#ஆலோசகராக திரு.அப்துர் ரஹ்மான் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து,

#அங்கத்தவர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
திரு.ஜிப்ரீ
திரு.சிபான்
திரு.ரியாட்
திரு. இர்பான்
திரு.அஸ்வர்
திரு.உஸாமா
திரு. டேனியல்
திரு.முஹாத்

இறுதியாக, நன்றி நவிலலுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றதுடன் புதிய நிர்வாக அங்கத்தவர்களுக்கு #அவையோர்_வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

```(புதிதாக தெரிவு செய்யப்பட்ட நடப்பு வருட நிர்வாக அங்கத்தவர்களை படத்தில் காணலாம்)```

நன்றி.

S.D.M Fahim
பொதுச் செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்.
அ.அ.ம.வி.
12-11-2023

Photos from Past Pupil’s Association AAMV's post 12/11/2023

Annual General Meeting 2023
Past Pupil’s Association -AAMV

04/11/2023

Annual General Meeting 2023.

20/08/2023

KITE FESTIVAL 2023

19/07/2023

After O/Level Plan your future



G.C.E O/L எழுதிய மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் வழிகாட்டல் நிகழ்ச்சி

👉🏼 O/L யின் பின்னர் A/L அவசியம் செய்யவேண்டுமா.?
👉🏻பரீட்சையை சிறந்த முறையில் எழுதவில்லையா?
👉🏻 தொழிலுக்கு தயாராவது எப்படி?
👉🏼எந்தத் துறையை தெரிவுசெய்வதில் குழப்பமா?
👉🏽எதிர்காலம் பற்றிய பயமா?
👉🏾உள்நாட்டு , வெளிநாட்டு உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல்
👉🏻 மீடியா நுட்பங்களும் வாய்ப்புகளும்


(Reality Trainer)

Mr. Muhaz Faizer
Career Guidance Counselor
BA (SEUSL), PGD in Counseling & Psychosocial Support (UOC)

Abdur Rahman
UTV Producer & Presenter
TV Journalist.

: Sunday 23rd July
8.00 AM முதல் 12.00 Pm
Al - Ashraff Maha Vidyalaya . Mabola
: Free



📞தொடர்புகளுக்கு +94 777378202
+94 755077101

Photos from Past Pupil’s Association AAMV's post 22/05/2023

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தமிழ் பாடத்துக்கான கருத்தரங்கு,

பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் #பழைய_மாணவர்_சங்கம் (OBA,OGA) ஏற்பாட்டில் ,ஆசிரியர்
V. SANTHA KUMAR (B. A. Hons,PGDE) அவர்களால் புதன்கிழமை (17.05.2023)
மு.ப.11.00 மணி முதல் பி.ப.05.00 மணி வரை
பாடசாலை தொழில்நுட்ப கட்டிடத்தில் நடைபெற்றது.

22/05/2023

Front Page of Our Mother Al-Ashraff Maha Vidyalaya Published 37 Years. (1986)

Photos from Past Pupil’s Association AAMV's post 22/05/2023

Monthly Executive committee meeting
of Past Pupil’s Association AAMV Successfully Held at School Premises. (March)

Photos from Past Pupil’s Association AAMV's post 22/05/2023

இறுதியாக நடைபெற்ற அல் அஷ்ரப் பழைய மாணவர் சங்க மாபெரும் பொது கூட்ட நிகழ்வினையும் அதில் தெரிவு செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர் உட்பட ஆலோசனை சபையின் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.

Photos from Past Pupil’s Association AAMV's post 22/05/2023

இம்முறை க.பொ.தர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்குகள்
பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் #பழைய_மாணவர்_சங்கம் (OBA,OGA) ஏற்பாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வகையில் கணித பாடத்துக்கான கருத்தரங்கு ஆசிரியர் Iqbal Nazar (B.Ed) அவர்களால் செவ்வாய்க்கிழமை (16.05.2023)
மு. ப. 08.00 மணி முதல் பி. ப. 03.00 மணி வரை தொழில்நுட்ப கட்டிடத்தில் நடைபெற்றது.

22/05/2023

எம் தாய்ப்பீடம் அலங்கரிக்கப்பட்டபோது.

#2023 .

16/05/2023

Official Page of Past Pupil’s Association of Al Ashraff Maha Vidyala (National School)

Want your school to be the top-listed School/college in Wattala?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Mabola
Wattala
11300