08/08/2026
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயமும் தாயகம் - கல்வி கலை பண்பாட்டுக் கூடமும் இணைந்து தெற்காசியாவில் நடைபெற்ற எறிபந்து விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணியில் பங்குபற்றி இலங்கை அணி இரண்டாம் இடத்தினை பெற உறுதுணையாக இருந்த எமது பாடசாலையின் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (06.08.2026) எமது பாடசாலையின் முதல்வர் திரு.செ.யேசுநேசன் ஐயா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாதனை மாணவர்களான எனிற்ரஸ் ஜெனிஸ்ரன் அவர்களும், நாகேந்திரம் நாவேந்தன் அவர்களும், அத்தோடு இச்சாதனையாளர்களை வழிப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் சிங்கராஜ் சத்தியராஜ் அவர்களும், பயிற்றுவிப்பாளர் ஐங்கரதாஸ் அவர்களும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.