02/12/2018
ஆறு தசாப்தங்களாக எமது கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாதது நாம் யாவரும் அறிந்த விடயமே, இக் குறை பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக கல்லூரியின் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் இணைந்து இறுதியாக எமக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பமாக இதனை கருதி எம் கல்லூரியின் பின் புற காணித்துண்டினை மைதானமாக்கும் முயட்சியை ஆரம்பித்துள்ளோம். காணி உரிமையாளருடன் பல தடவைகள் மேட்கொண்ட பேச்சு வார்த்தைக்கமைய இறுதியாக ஒரு கோடியே இருபது இலட்ச்சம் ரூபாய்க்கு ( 12 , 000 , 000 ) கல்லூரிக்கு அக் காணியினை வழங்க சம்மதித்துள்ளார். எனவே ஆரம்ப தொகை ஒன்றினை அவருக்கு வருகின்ற தை மாதம் வழங்கி உடன்படிக்கை ஒன்றினூடாக கல்லூரிக்கான மைதானத்தை பெற்றுக்கொள்ள உள்ளோம்.
குறிப்பு - இக் காணியினை நாம் பெறாத பட்ச்சத்தில் கல்லூரிக்கு அருகில் இனி மைதானம் ஒன்று அமையக்கூடிய சந்தர்ப்பம் எக்காலத்திலும் அமையப்பெற வாய்ப்பில்லை என்பதனை கல்லூரி நலன் விரும்பிகள் அனைவரும் நன்று உணர வேண்டும் .
எனவே கல்லூரியின் நலன் விரும்பிகள் அனைவரும் இத்தருணத்தை உணர்ந்து எம்முடன் கைகோர்த்து நிதிப்பங்களிப்பை செய்து எமது கல்லூரிக்கு மைதானம் ஒன்று அமைத்து தரும் வரலாற்று நிகழ்வொன்றில் தாங்களும் பங்கெடுக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு எம்மை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் ,
ஸ்ரீ - 0777999791 ( சாதாரண தரம் 1996 ம் ஆண்டு ,1999 ம் ஆண்டு உயர்தரம் )
ஜரேஷ் - 0777747297 ( சாதாரண தரம் 2002 ம் ஆண்டு ,2005 ம் ஆண்டு உயர்தரம் )
அனைத்து நண்பர்களையும் கல்லூரியின் தேவை அறிந்து இவ் நிதிச்சேசரிப்பின் முக்கியத்துவம் அறிந்து எம்முடன் கைகோர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
உங்கள் நிதி பங்களிப்பை எம்முடன் தொடர்பு கொண்டு நேரடியாக கீழ்வரும் கணக்கிலக்கத்திட்கு வைப்பிலிடுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
விளையாட்டு மைதான நிதியம்
மக்கள் வங்கி
வவுனியாக் கிளை
கணக்கிலக்கம் - 040 - 2 - 001 - 4 - 0085251
நன்றி.