akt sopping complex

akt sopping complex

Share

உனக்கானது எதையும் நான் திருடவும் மாட்டேன்
எனக்கானது எதையும் நான் இழக்கவும் மாட்டேன்

13/04/2024

அன்பான வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் AKT ன் இனிய குரோத தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
எண்ணமும் செயலும் ஒருசேர என்றும் நிறைவு காணட்டும்.
AKT SHOPPING COMPLEX

17/02/2024

கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.

01/01/2024

ஒளி பிறக்கட்டும்...
இருள் விலகட்டும்.
அருள் கிடைக்கட்டும்.
பொருள் பெருகட்டும்.
புகழ் பரவட்டும்.
நலம் வளரட்டும்
அன்பு உறவுகளுக்கு இனிய 2024 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!
தமிழ் தாய் மொழியை மதியுங்கள்
அதை பயன்படுத்துங்கள்
அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கொண்டு செல்வோம்..
AKT.தனேஷ்குமார்.

31/12/2023

தன்னம்பிக்கை மற்றும் முயற்சி உள்ளவனை, புதைத்து மிதித்தாலும் விதையாக மாறி முளைத்து நிற்ப்பான் ‘மரமாக'
எல்லோரும் பயன் பெறும் வகையில்
காலை வணக்கம்

16/12/2023

அதிகாரம் உள்ளவன் செய்யும் தப்பு
தவிர்க்கப்படுவதும் அதிகாரம் அற்றவர்கள் செய்யும் தப்பு தண்டிக்கப்படுவதும்
மனித குலத்துக்கு சாபக்கேடு...
AKT தூறல்கள் ...

04/12/2023

விழுதுகள் பதிக்க பார் எங்கும் இடம் உண்டு நீங்கள் ஒரே இடத்தில் நின்று கொண்டு தோல்விகளையும் வலிகளையும் நேசிக்காதீர்கள்... AKT.தூறல்கள்...

06/10/2023

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 2023
HAPPY TEACHER DAY 2023

எழுத்தறிவை அறியத்தந்து ..

எம் பௌகுத்தறிவை திறணாய்ந்து...

எவ்வழி எம்நல் வழியென்று–தினம்
எமக்கு அறியவைத்து

உயர்ந்த வளம் நிறைந்த நல் வெற்றி வாழ்க்கைக்கு...

அறிவமுதூட்டி எமக்கு நல்லசாரதியாக இருக்கும்...

எம் ஆசிரிய தெய்வங்களுக்கு எமது ஆசியர்தின
நல்வாழ்த்துக்கள்...

AKT shopping complex

Photos from akt sopping complex's post 01/10/2023

அன்பின் அர்த்தத்தையும் வஞ்சமிலா புன்னகையும் கபடமில்லா நெஞ்சத்தையும் அவர்தம் மூலப்பொருளாகக் கொண்டு எம் உள்ளமெனும் கோயிலில் குடியிருக்கும் அன்பின் பொக்கிஷம் தான் எம்கண்முன்னே பவனிவரும் மழலை சொல் பேசுகின்ற சிறுவர்கள்...

அங்கீகாரம் வழங்கப்பட்ட அற்புதங்களே...

உங்களுக்கு ஓர் சர்வதேச தினம் அக்டோபர் ஒன்று

நித்திய பேரின்பமே உங்களுக்கு – தினம் கிடைக்கவேணும் துஸ்பிரயோகம் இல்லாத நல் வாழ்க்கை அன்பு சிறுவர்களே உங்களுக்கு கிடைக்கவேணும் நூறு வீத பாதுகாப்பு... ஆணந்தத்தின் மலர்வனமே...

உங்களுக்கு கிடைக்கவேணும் பஞ்சமிலா நிறை வாழ்க்கை... நாளைய இவ்வுலகின் வீருச்சங்களே... உங்கள் நிழல்தனில் நிலவவேனும்

சாகலரையும் அரவணைத்து முன்நகரும் சமத்துவநற்சிந்தனைகள்... இன்றைய சவால்களை தினம் எதிர்கொள்ளுங்கள்.. நாளை சர்வதேச அரங்கின் முன் தலை நிமிர்ந்து நில்லுங்கள்

சர்வதேசமும் இன்று உங்கள் பின்னால் - தினம் உங்களுக்கு கிடைக்கவேனும் சர்வதேச பாதுகாப்பும் தன்னிறைவு நல் வாழ்க்கையும்... அனைத்து சிறுவர்களுக்கும் இனிய சிறுவர்தின நல்வாழ்த்துக்கள்

Happy childres day AKT.தனேஷ்குமார்

01.10.2023

31/08/2023

"உலகிற்கே *நாங்கள் தான் *சத்தான *இயற்கை *உணவை *உண்ண *சொல்லிக்கொடுத்தவர்கள்... எப்படி...???இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான், அது சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்...
*இன்று அதையே*
==============
*BARBECUE (சுட்ட கோழி)என்றும் BC,*
*KFC ,*
*MACDONALDS இல் விக்கிறான்.*
===============

*2). உப்பு, ஆலமர, வேப்பங்குச்சி + கரியை கொண்டு பல் தேய்த்தான்.*
*இன்று உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்க கேக்கிறான், TOOTHPASTE இல்*
*SALT + CHARCOAL* *இருக்கா ?*
*என்றும் கேட்கிறான்.*
==============

*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம், *உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை பெரிய அதிசயம் போல கொள்ள லாபத்தில் STAR HOTELகளில் விக்கிறான் .*
=============

*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*
=============
*உடலுறவு கொள்ளாத விந்தனுவில் உருவாக்கிய "ஜெர்சி" மாட்டை அறிமுகப்படுத்தினான்.*
=============
*இன்று அவனே அந்த இன மாடுகள் அவன் நாட்டு மக்களுக்கு ஆபத்து என இந்தியாவிலிருந்து நாட்டு மாடுகளின் (விந்தனுவை) ஏற்றுமதி செய்கிறான்.*
===============

*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*
==============
*COKE, PEPSI, SPIRT, 7UP, ஐ கொண்டு வந்தான்.*
==============
*இன்று அவனே இளநீரைத் தகர டப்பாவில் அடைத்து நம்மிடமே விற்கிறான்.*
==============

*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த*
================
*" முட்டாள் நாம் "*
================

*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*
==============

*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*
===============
*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*
===============
*ஆடு போட்ட புலுக்கையை வரப்பில் அள்ளிப்போட்டு காடு வளர்த்தோம்,*
===============
*காட்டுக்குள்ளே புழு பூச்சியை உண்ண கோழியை விட்டோம்,*
==============

*வளர்த்ததெல்லாம் விற்க மனசு இல்லாமல் அய்யனார் / நாக்கூர் ஆண்டவர் / மேரி மாதாக்கு என சிலவற்றை நேர்ந்துவிட்டோம்,*
===============

*நேர்ந்துவிட்ட அதுகளை ஊர் உண்ண திருவிழா வச்சோம்,*
==============

*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*
==============

*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*
==============

*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*
=============

*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*
===============

*நம் பாரம்பரியத்தை தொலைத்து ஆஸ்பத்திரி மருந்துகடையை தேடிதான் அழைகிறோம் *
================

*" நாமெல்லாம் "நாகரிக கோமாளிகளாக" மாறிவிட்டோம்"*
================

04/05/2023

சிவமயம் சிவாய நம 🙏🌺🙏

#இல்லற_தர்மம்

கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை.

இருபத்தியோரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது
அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மாவே வழி நடத்தும் .

96 தத்துவங்கள் முடிவு பெறுவது இருபத்தியோரு வயதிலே,அதன் பிறகே அவனது சொந்த ஆன்ம கர்மா செயலில் இறங்கும்.

சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது சக்தியோடு துணை சேர வேண்டும்.
சிரசு ஏற பல வழி
1.தியானம் மூலம்
2.பக்தி மூலம்
3.ஞான மூலம்
4.யோக மூலம்
5.தீட்சை மூலம்
6.சிவசக்தி மூலம்
இன்னும் எத்தனையோ மூலம் உள்ளது சிரசு ஏற.
ஆனால்
சிறந்த மூலம் இல்லற தர்மம்.

சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே சக்தி பிறந்து விடுகிறது ,
சக்தி மாறி சிவம் சேர்ந்தாலே பிறவியே சிக்கலே
மனப்பொருத்தம் பூமியிலே ஜெயிப்பது இல்லை
ஆன்ம பொருத்தமே பிறவியை ஜெயிக்கும்.
அந்த சக்தியோடு சிவம் சேரும் போதே
சர்வமும் சாந்தி ஆகும்.
சிவ சக்தி இடையே ஊடலும் கூடலும்
உற்சாகம் தானே......!!!
ஆனால்
சக்தியின் கண்ணீருக்கு சிவம் காரணமானால் அதை விட கொடிய கர்மா உலகில் இல்லை
ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம் வழி
தர்மத்தில் உள்ளது உண்மையே
ஆனால்
உறவுகளை கொண்டே உலகை வெல்வதும் பிறவி பிணி அறுக்கவும் ஒரு வழி உள்ளது உலகம் அறியாதது.

"சொந்தம் என்பது
பழைய பாக்கி என
அறிந்தவனுக்கு
சொந்தம் சுமை இல்லை"

"நட்பு என்பது
பழைய பகை என்பதை
பண்போடு அறிந்தவனுக்கு
பதற்றம் இல்லை "

எதிரி என்பவன்
தனது கர்மாவின்
தார்மீக கணக்கே என
தன்மையோடு உணர்ந்தவனுக்கு
எதிரி
எதிரி இல்லையே

உனது எதிரியும் நீயே!
உனது செயலே கர்மா ஆகி
அந்த கர்மாவே நீ எதிரி என நினைக்கும்.
ஒரு உயிருள்ள சடலத்தை உனக்கு எதிராக பயன்படுத்துகிறது என நீ
உணரும் போது
உன் எதிரி முகத்தில உனது கர்மா
உனது கண்களுக்கு தெரிய வந்தால்
எதிரி உனக்கு எதிரே இருந்தாலும்
கலக்கம் தேவை படுவதில்லை.

உன்னை உடனிருந்தே கொல்லும் உறவும் உன்னோடு பிறக்கும் உனது பழைய கணக்காலே
பழைய கணக்கு புரிந்தால்
பந்த பாசம் சகோதரத்துவம் மீது பற்று அற்ற பற்று வைத்து பிறவி கடமையை வெல்லலாம்.

கர்மாவின் கணக்கு புரிந்தால் உனது பக்கத்தில் சரி பாதி அமரும் மனைவி
யார் என்றும் புரியும்!

தாய் தந்தையை அன்போடு பூஜிப்பவன் தந்தை வழி தாய் வழி ஏழு ஜென்ம கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்!

உறவுகளுக்கு அவர்கள் தரும் இன்னல்களை பொறுத்து உபகாரமாக உதவி வந்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உனது ஏழு ஜென்ம சமுதாய கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.

கோயில் போனாலோ,மகா குளத்தில்
குளித்தாலோ ஒன்னும் மாறாது!

சிறு இன்பம் மட்டும் ,சிறிது காலம் கிடைக்கும் அவ்வளவே
ஆனால்
ஒரே ஒரு உறவை நீ பூஜித்தால்பிறவி பிணி மொத்தமாக தீரும் அது "மனைவியே"

மனைவியை மகிழ்ச்சியாக வைப்பது உலகிலேயே சிரமம் மட்டும் அல்ல அது தான் உலகிலேயே சிறந்த தவம்!

தவம் என்பது சாமான்யன்களுக்கு சிரமமே
கட்டிய மனைவியையும் உன் மூலம் அவள் பெற்ற பிள்ளைகளையும் உளமாற நேசித்து உன்னதமாக உனது வாழ்வை ஆனந்தமாக நீ அர்ப்பணித்தால் அதுவே
உலகின் சிறந்த தர்மம் சிறந்த தவம்!

தாய் தந்தையை வணங்கினால்
ராமேஸ்வரம் போக தேவை இல்லை
பித்ரு தோஷம் நீங்கும்
உறவுகளை மதித்தால் கிரக தோஷம் நீங்கும் திருவண்ணாமலை இடைக்காடரை
தேட தேவை இல்லை,நவ கிரகமும்
சுற்ற தேவை இல்லை.

மனைவியை
பெற்ற பிள்ளையை நேசித்தால் அவர்களை ஆனந்தமாக வைத்தால்
கர்ம விமோசனம் தேட அகத்தீசனை தேடி பாபநாசம் போக தேவையில்லை

இதற்கு தான் இல்லற வாழ்க்கை அமைத்தான் நமது முப்பாட்டன் ஆதி யோக வம்சம்.

"மனைவி அழும் வீடே நரகம்"
மனைவி சிரிக்கும் வீடே பிரபஞ்ச சொர்க்கம்.சக்தி உணர்ந்தால் மட்டுமே சிவம் ஜோதி ஆக ஜொலிக்கும்......!!!

என்றும் இரை
தேடும் மனிதா,,,,,,,
கொஞ்சம் நீ
இறைவனையும் தேடு ........

திருச்சிற்றம்பலம் 🙏🙏🏼🙏

சிவ ஓம் நமசிவாய 🙏🌺🙏

அகிலம் போற்றும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏

02/01/2023

எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து , காலம் முழுவதையும் வீணடித்து விட்டு “ கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல “ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்.

~~~அனுபவம்.

31/12/2022

AKT யின்.இனிய.2023 புது வருடநல்வாழ்த்துக்கள்
கடந்த வருட அனுபவங்களை அத்திவாரமாக்கி.
நிகழ்கால நிகழ்வுகளை. தூண்கள். ஆக்கி.
எதிர்கால. வாழ்வுகாய் ,
அற(ர)ண் அமைப்போம்
முழுமையான முயற்சியுடன்.
தம் இன வரலாறுகளை மறந்த இனம்
நீண்ட காலம் நிலைத்ததாக. வரலாறு இல்லை.
அன்புடன் AKT தனேஷ்குமார்

Want your school to be the top-listed School/college in Vavuniya?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Ukkulankulam
Vavuniya