15/07/2026
🏫புதிய பாடசாலை வகுப்பறைக்கட்டடங்கள் மாணவர் பாவனைக்காக கையளித்தல் மற்றும் அடிக்கல் நாட்டுதல்🏫
👉எமது வலயத்திற்குரிய PSDG நிதியொதுக்கீட்டின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் திறந்து வைத்தல் மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள வகுப்பறைக்கட்டடத்திற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வு என்பன 10.07.2026 அன்றையதினம் நடைபெற்றது.
👉இந்நிகழ்வுகளில் கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க,கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன் மற்றும் திலகநாதன்,வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,வடமாகாண கல்விப்பணிப்பாளர்,வடமாகாண பாடசாலைகள் வேலைப்பகுதி பொறியியலாளர்,எமது வலயக்கல்விப் பணிப்பாளர்,பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மேம்பாட்டுப் பிரதிநிதி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
📌திறந்துவைக்கப்பட்ட பாடசாலை வகுப்பறைக்கட்டடங்கள்👇
1️⃣வ/நொச்சிக்குளம் இல.01 கனிஸ்ட உயர்தர வித்தியாலய பாடசாலையில் 60x25 அளவிலான வகுப்பறைக் கட்டடம்-01
2️⃣வ/ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் 60x25 அளவிலான வகுப்பறைக் கட்டடம்-01
📌அடிக்கல் நாட்டப்பட்ட வகுப்பறைக்கட்டடம்👇
1️⃣வ/ஓமந்தை மத்திய கல்லூரியில் 100x25 அளவிலான வகுப்பறைக்கூடம்-01
இந்நிகழ்வுகளின் பதிவுகள்📸