Ramanathapuram West GTMS

Ramanathapuram West GTMS *One of the best School in Vaddakachchi.

28/11/2018
எமது பாடசாலையின் வைரவிழாவும் பரிசில் நாள் நிகழ்வும் எதிர்வரும் 30.11.2018 ஆந் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதால் அனைத்...
28/11/2018

எமது பாடசாலையின் வைரவிழாவும் பரிசில் நாள் நிகழ்வும் எதிர்வரும் 30.11.2018 ஆந் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதால் அனைத்து பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
-பாடசாலைச் சமூகம்.-

11/10/2018

2018 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மூன்று மாணவர்களையும் பாராட்டுவதோடு சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற ஏனைய மாணவர்களையும் வகுப்பாசிரியரையும் பாராட்டுவதில் பெருமகிழ்வடைகின்றோம்.

பாலசிவராம் யுகான் - 191 புள்ளிகள் (மாவட்டநிலை : 09)
சத்தியசீலன் கோபிகன் - 183 புள்ளிகள் (மாவட்டநிலை : 34)
சிவநேசன் கரிஸ்னா - 167 புள்ளிகள் (மாவட்டநிலை : 223)

11/10/2018

எமது பாடசாலையின் 'வைரவிழாவவும் பரிசளிப்பும்' நிகழ்வானது இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை முன்னிட்டு பாடசாலை முழுவதும் வர்ணம் (Paint) பூசவேண்டிய தேவையுள்ளது. இதற்கு உதவ விரும்பும் பாடசாலையின் பழையமாணவர்கள் அல்லது பாடசாலையின் நலன்விரும்பிகள் பாடசாலை சமூகத்தினருடன் தொடர்பு கொள்ளவவும்.
பாடசாலை தொலைபேசி இலக்கம்: 0212060496

14/06/2018

கிளி /இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையின் எங்கள் மதிப்பிற்கும், அன்பிற்குமுரிய,
ஓய்வுநிலை அதிபர்கள், ஆசிரியர்களே! முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்களே! பழைய மாணவர்களே! பெற்றோர்களே!
இந்தப் பாடசாலையின் வளர்ச்சிப் போக்கில் இற்றைவரை இருந்து ஒத்துழைப்பு நல்கும் நலன்விரும்பிகளே!
2005 இல் பொன்விழாவினைக் கொண்டாடி மல-ரை வெளியிட்டு மகிழ்ந்த எமது பள்ளி இன்று வைரவிழாவிற்குரிய நாளையும் கடந்து தனது பயணத்தை செவ்வனே ஆற்றுகின்றது.
2015 இன் வைரவிழாவினை தற்போது கொண்டாடி மகிழ இப்பாடசாலைச் சமூகம் அவா கொண்டுள்ளது.
எனவே 2018 இல் இவ்விழாவினைக் கொண்டாடி மலரினையும் வெளியிட இருப்பதனால் 2006 இல் இருந்து 2010 வரை இந்தப் பள்ளிக்காக தங்கள் சேவைகளை ஆற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் போன்றோரின் விபரங்களையும் புகைப்படங்களையும் மற்றும் மலருக்கான ஆக்கங்களையும் தந்துதவி விழா சிறக்க ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டிநிற்கின்றோம்.
-பாடசாலைச் சமூகம்

எமது பாடசாலையின் நூலகம்.
12/06/2018

எமது பாடசாலையின் நூலகம்.

கடதாசியைப் பயன்படுத்தி அலங்காரப் பொருட்களை உருவாக்கும் பயிற்சி இன்று எமது பாடசாலை மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் வழங்...
14/03/2016

கடதாசியைப் பயன்படுத்தி அலங்காரப் பொருட்களை உருவாக்கும் பயிற்சி இன்று எமது பாடசாலை மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் வழங்கப்பட்டது.

எமது பாடசாலையில் இடம்பெற்ற Mobile Library நிகழ்வு.
11/03/2016

எமது பாடசாலையில் இடம்பெற்ற Mobile Library நிகழ்வு.

கைலாயப்பிள்ளை கமலநாதன் ஞாபகார்த்தமாக எமது பாடசாலையின் மேற்கு பக்க மதில் மற்றும் சிறுவர் விளையாட்டு முற்றம் அமைத்தலுக்கான...
11/03/2016

கைலாயப்பிள்ளை கமலநாதன் ஞாபகார்த்தமாக எமது பாடசாலையின் மேற்கு பக்க மதில் மற்றும் சிறுவர் விளையாட்டு முற்றம் அமைத்தலுக்கான நிதி உதவி வழங்கிய அவரது தந்தையாரிற்கு பாடசாலை சமூகம் நன்றி தெரிவித்தது.

எமது பாடசாலையில் இடம்பெற்ற ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாதிரிச் சந்தை.
04/03/2016

எமது பாடசாலையில் இடம்பெற்ற ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாதிரிச் சந்தை.

கைலாயப்பிள்ளை கமலநாதன் ஞாபகார்த்தமாக எமது பாடசாலையின் மேற்கு பக்க மதில் மற்றும் சிறுவர் விளையாட்டு முற்றம் அமைத்தலுக்கான...
04/03/2016

கைலாயப்பிள்ளை கமலநாதன் ஞாபகார்த்தமாக எமது பாடசாலையின் மேற்கு பக்க மதில் மற்றும் சிறுவர் விளையாட்டு முற்றம் அமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா.

Address

Vaddakkachchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramanathapuram West GTMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category