28/09/2014
தி/கிண்/சிராஜ் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 5 பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள்.
2010.1.1ம் திகதி A.M.லாபிர் (அதிபர்) தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தி/கிண்/சிராஜ் கனிஷ்ட வித்தியாலயத்தில் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 30 மாணவர்கள் தோற்றி 8 மாணவர்கள் சித்தி எய்தியுள்ளனர். இப்பாடசாலை இம்முறையே முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை எதிர் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்களின் வெற்றிக்கும் கல்வி எழுச்சிக்கும் தொடர்ந்தும் உருதுணையாக நின்ற பாடசாலை அதிபர் A.M.லாபிர், வகுப்பாசிரியர் A.S.M.ஸாஹா, மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் தி/கிண்/சிாரஜ் முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்தோடு சித்தி எய்திய மாணவர்களையும் வாழ்த்துகிறோம்.
சித்தி எய்திய மாணவர்கள் வருமாறு.
1. S.Nadha 174
2. M.S.Sihna 173
3. A.Sahra 169
4. N.Amna Banu 168
5. N.Safrina 166
6. A.Sameera 163
7. A.K.Nadha Farvin 161
8. N.Nuha 159.