11/06/2025
இன்று (2025.06.11) நள்ளிரவு முதல் மின்கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from College college, Trincomalee.
11/06/2025
இன்று (2025.06.11) நள்ளிரவு முதல் மின்கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
31/05/2025
பயிர் நிலங்களுக்கு நடுவே மூதூர் பிரதேச சபையின் குப்பைத்திடல்!!
கட்டைபறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள கணேசபுரம் கிராமத்தில் கட்டைபறிச்சான்- பள்ளிகுடியிருப்பு பிரதான வீதியோரமாக மூதூர் பிரதேச சபையால் அமைக்கப்பட்ட குப்பை திடல் காணப்படுகின்றது.
இதனால் குறித்த பிரதேசம் கொலைக்களமாக மாறிவரும் பிரதேசமாக காணப்படுவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளில் திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகளை உட்கொண்ட 37 பசு மாடுகள் மரணித்துள்ளதாகவும், பகல் இரவு எந்த நேரமும் ஆபத்தான காட்டு விலங்குகளின் நடமாட்டம் காணப்படுவதால் அச்சம் நிறைந்த வாழ்வியலை அனைவரும் அனுபவித்து வருவதாகவும் கழிவுகளை உட்கொள்ள வருகின்ற காட்டு யானைகளால் கடந்த ஆண்டு ஒரு குடும்பஸ்தர் கொடூரமான விதத்தில் கொல்லப்பட்டார் எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த பிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொலைக்களமாக மாறிவரும் மூதூர் பிரதேச சபையின் குப்பை திடல் என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மூதூர் பிரதேச சபையினரே! அரச அதிகாரிகளே!
இத்துடன் குப்பை கொட்டும் விடயத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் இதுகுறித்து பல தடவைகள் நாங்கள் முறைப்பாடு செய்திருந்தோம். அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பாராமுகமாய் இருக்கின்றார்கள். இனியும் எங்களால் பொறுக்க முடியாது.
மேலும் 2025-05- 30 ஆம் திகதி காலை தனது வாழ்வாதார தொழிலுக்காக சென்று கொண்டிருந்தேன் கட்டைப்பறிச்சான் நான்காம் வட்டாரத்தை சேர்ந்த சிவக்கொழுந்து இராசரத்தினம் என்ற 75 வயதான முதியவர் பிரதேச சபையின் இந்த கொலைக்களமான இக்குப்பை திடலுக்கு வந்த காட்டு யானைகளால் கொல்லப்பட்டுள்ளார்.
ஆகவே அன்பான உறவுகளே!
நாம் அனைவரும் மௌனமாக இருக்கும் வரை கொடூரங்கள் தொடரும்!
தடுப்போம் தடுத்து நிறுத்துவோம் நமது வளமான வாழ்விடத்தை மீட்டெடுப்போம் நமது உறவினரின் இந்த மரணம் முதூர் பிரதேச சபையின் கொலைக்களமான குப்பை திடலின் முடிவாக அமையட்டும் எனவும் குறித்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.