T/T/Sri Konalinga Maha Vidyalayam

T/T/Sri Konalinga Maha Vidyalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from T/T/Sri Konalinga Maha Vidyalayam, School, Trincomalee.

எமது பாடசாலை உயர்தர 2023 பிரிவு இந்துநாகரிக மாணவர்களின் இந்து நாகரிக பாடத்திற்கான கணிப்பீட்டுக் கண்காட்சி - இந்துக் கோயி...
11/11/2022

எமது பாடசாலை உயர்தர 2023 பிரிவு இந்துநாகரிக மாணவர்களின் இந்து நாகரிக பாடத்திற்கான கணிப்பீட்டுக் கண்காட்சி - இந்துக் கோயில்களின் கட்டுமானங்கள். பாட ஆசிரியர் சிவத்திரு.ச.ஹோபிநாத் Satgunalingam Hobinath அவர்களின் வழிகாட்டலில் இன்றைய தினம் நடைபெற்றது.

# கேரள கலை மரபில் அமைந்த சபரிமலை ஆலயம்
# சிதம்பரம் ஆலயம்
# தஞ்சை பெரிய கோயில்
# பல்லவர் குடைவரை ஆலயம்

என்பன மாணவர்களின் முயற்சியினால் செய்துவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு மாணவர்களினாலேயே விளக்கமளிக்கப்பட்டன.

வலய மட்டத்திலான வர்த்தக பாட வினாவிடைப் போட்டியில் மாகாணப் பாடசாலைகள் தரம் 10-11 பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவன் ...
03/11/2022

வலய மட்டத்திலான வர்த்தக பாட வினாவிடைப் போட்டியில் மாகாணப் பாடசாலைகள் தரம் 10-11 பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவன் V. தர்மிஷனுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வலய மட்ட சமூக விஞ்ஞான பொது அறிவுப் போட்டியில் 201 - 500 வரையான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளுள் உயர்தர பிரிவில் 2ம் இடத்தைப்...
03/11/2022

வலய மட்ட சமூக விஞ்ஞான பொது அறிவுப் போட்டியில் 201 - 500 வரையான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளுள் உயர்தர பிரிவில் 2ம் இடத்தைப் பெற்ற எமது மாணவன் சந்திரகுமார் டிலக்சனுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

வெள்ளத் தடுப்பு முயற்சியாக அனர்த்த முகாமைத்துவ செயற்பாடு
02/11/2022

வெள்ளத் தடுப்பு முயற்சியாக அனர்த்த முகாமைத்துவ செயற்பாடு

நேற்றைய அடை மழையால் பாடசாலை வளாகம் வெள்ளமாகி இருந்தது.
02/11/2022

நேற்றைய அடை மழையால் பாடசாலை வளாகம் வெள்ளமாகி இருந்தது.

நேற்றைய (2022.10.27) Tamil mirror பத்திரிகையில் ....பத்திரிகை ஆசிரியர் குழுமத்தினருக்கும், ஊடகவியலாளருக்கும் மனமார்ந்த ந...
28/10/2022

நேற்றைய (2022.10.27) Tamil mirror பத்திரிகையில் ....

பத்திரிகை ஆசிரியர் குழுமத்தினருக்கும், ஊடகவியலாளருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நேற்றைய தினம் (2022.10.26) திருக்கோணமலை ரோட்டறிக் கழகத்தினால் எமது பாடசாலையில் போலியோ நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வ...
27/10/2022

நேற்றைய தினம் (2022.10.26) திருக்கோணமலை ரோட்டறிக் கழகத்தினால் எமது பாடசாலையில் போலியோ நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வில் எமது பாடசாலையில் அண்மையில் தாபிக்கப்பட்ட இன்டரெக்ற் கழகத்தை ஊக்குவிக்கும் முகமாக கொரோணா எதிர்ப்பு செயற்பாட்டிற்காக கைகழுவும் தொகுதி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வை ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு போலியோ விழிப்புணர்வை வழங்கிய திருக்கோணமலை ரோட்டறிக் கழக உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

இன்றைய 2022.10.27 தினகரன் பத்திரிகையில்..தினகரன் பத்திரிகை ஆசிரியர் குழாத்தினருக்கும் ஊடகவியலாளருக்கும் மனங்கனிந்த நன்றி...
27/10/2022

இன்றைய 2022.10.27 தினகரன் பத்திரிகையில்..

தினகரன் பத்திரிகை ஆசிரியர் குழாத்தினருக்கும் ஊடகவியலாளருக்கும் மனங்கனிந்த நன்றிகள்.

திருக்கோணமலை அன்பின் பாதை சமூக அமைப்பின் ஸ்தாபகர் சமூகசேவகி திருமதி றொசில்டா அவர்களினால் எமது பாடசாலையின் வறுமைக்கோட்டுக...
27/10/2022

திருக்கோணமலை அன்பின் பாதை சமூக அமைப்பின் ஸ்தாபகர் சமூகசேவகி திருமதி றொசில்டா அவர்களினால் எமது பாடசாலையின் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவிகளின் உடல் சுகாதார நலன் கருதி ஒரு தொகுதி டயபர்ஸ் கள் அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

அதேவேளை மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஆங்கில பேரகராதி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

எமது மாணவர்களின் நலன்கருதிச் செயற்பட்ட அன்பின் பாதை அமைப்பினருக்கு பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்றைய (2022.10.27) காலைக்கதிர் பத்திரிகையில் பிரசுரமான செய்தி.எமது பாடசாலையின் செய்தியை பிரசுரித்த காலைக்கதிர் பத்திரிக...
27/10/2022

இன்றைய (2022.10.27) காலைக்கதிர் பத்திரிகையில் பிரசுரமான செய்தி.
எமது பாடசாலையின் செய்தியை பிரசுரித்த காலைக்கதிர் பத்திரிகை ஆசிரியர் குழுமத்திற்கு நன்றிகள்.

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when T/T/Sri Konalinga Maha Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category