16/02/2026
Education is the most powerful weapon which you can use to change the world." 📚✨
As the G.C.E. (O/L) examinations approach, the University Students’ Association – Pulmoddai wants to send a wave of encouragement to all the candidates. You have worked hard, stayed dedicated, and now it is time to let that brilliance shine on paper.
To every student sitting for the exam: Stay calm, trust your preparation, and give it your absolute best. Your community is rooting for you!
Best of luck for your O/L Examination! 🎓🙌
/L2026
26/01/2026
📢 Official Announcement – Mathematics Examination Results 📢
The Mathematics examination results of the 2025/2026 O/L batch, conducted jointly by three schools under the University Students’ Association Pulmoddai (USAP), have now been officially released. 🎓📊
🏅 Please note that only the marks of the Top 15 ranks have been included in this release.
However, many other students have also obtained excellent marks, and we extend our warm congratulations to all of them as well. 👏✨
We sincerely wish that every student achieves outstanding success in the Mathematics subject in this o/l attempt. 📐📘💯
📢 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – கணிதப்பாட பரீட்சை முடிவுகள் 📢
புல்மோட்டை பல்கலைக்கழக மாணவர் சங்கம் (USAP) கீழ், மூன்று பாடசாலைகளையும் இணைந்து நடத்தப்பட்ட 2025/2026 O/L batch இன் கணிதப்பாட பரீட்சை முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 🎓📊
🏅 இந்த அறிவிப்பில் முதல் 15 தரவரிசைகளின் (Top 15 ranks) புள்ளிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்குப் பிறகும் பல மாணவர்கள் சிறந்த புள்ளிகளை பெற்றுள்ளனர். அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 👏✨
இந்த முறை o/l பரீட்சை எழுதும் அனைத்து மாணவர்களும் கணிதப் பாடத்தில் சிறந்த பெறுபேற்றை பெற வேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம். 📐📘💯
With best wishes, 🌟
– USAP Educational Team –
24/01/2026
க.பொ.த சா/த விஞ்ஞானப் பாட செயலமர்வு...
கடந்த 2025.12.24 காலை மற்றும் மாலை நேரங்களில், ஊரில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இணைத்து நடாத்தப்பட்ட விஞ்ஞானப் பாடத்தின் அலகு ரீதியான மீட்டல் வகுப்பானது சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இவ்வகுப்புகளை சிறப்பாக நடாத்துவதற்காக தங்களது பெறுமதியான நேரங்களை ஒதுக்கி வருகை தந்த எமது வளவாளர்கள்:
• Asam – (SUSL)
• Nashath – (UOM)
• Sajeeth – (UOK)
• Shifana- (SEUSL)
• Mufassara- (UOC)
• Waseem – EUSL
• Manaseer- (UOJ)
• Rifka- (UOP)
இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து வளவாளர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
அல்லாஹ் அவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் பரக்கத்தையும் வெற்றியையும் வழங்குவானாக.
மேலும், இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பினை வழங்கிய மூன்று பாடசாலைகளின் அதிபர்கள், இவ்வகுப்புகளில் கலந்து கொண்ட 2025 / 2026 கல்வியாண்டு மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.எல்லோரும் சிறப்பான பெறுபேற்றினை பெற எமது பிரார்த்தனை என்றும் இருக்கும்.
மேலும் தொடர்ச்சியாக எமக்கு Editing உதவியினை செய்துவரும் எமது Editor (UOP)அவர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாக்கட்டும்.
இவ்வாறான நன்மையான காரியங்களில் அனுசரணையளிக்க உங்கள் அனைவருக்கும் சந்தர்ப்பமளிக்க USAP காத்திருக்கிறது.
-நன்றி-
University Students‘ Association – Pulmoddai.
21/01/2026
USAP இன் உத்தியோகபூர்வ T-shirt வெளியீட்டு விழாவும், இவ்வாண்டின் முதலாவது கலந்துரையாடலும்...
University Students’ Association Pulmoddai-USAP ஆகிய எங்களது உத்தியோகபூர்வ டீ-ஷேர்ட் வெளியீட்டு விழா 2026.01.15 ம் திகதி அதாவது வியாழக்கிழமை புல்மோட்டை வாணிபத் தொகுதி கட்டடத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்று முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!!
அமைப்பின் மூத்த உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அமைப்பின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் செய்யப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்நிகழ்வினை வெற்றிகரமாக நடாத்த வாணிபத் தொகுதி ( Shopping complex) கட்டடத்தொகுதியினை எவ்வித மறுப்புமின்றி பெற்றுத்தந்து, மண்டப ஏற்பாட்டினை செய்து தந்த குச்சவெளி பிரதேச சபை கௌரவ தவிசாளர் A.P. முபாரக் அவர்களுக்கும், ஒத்தாசைகள் வழங்கிய சபை ஊழியர்களுக்கும்,
நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய beauty- henna& Dream bridal நிறுவனத்தினரான எமது Alumni member- Haseena Shaffran மற்றும் அவர்களது குழுவினருக்கும் மற்றும் நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க கடுமையாக பாடுபட்ட எமது உறுப்பினர்களுக்கும் மற்றும் ஏனைய அனைத்து விதங்களிலும் உதவிய அனைவருக்கும்
எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ்வாறான எமது அமைப்பின் செயற்பாடுகளுக்கு அனுசரணையளிக்க உங்கள் அனைவருக்கும் சந்தர்ப்பமளிக்க USAP காத்திருக்கிறது.
-நன்றி-
‘ – .
-
15/01/2026
📢 OFFICIAL ANNOUNCEMENT – USAP
All members of the University Students’ Association Pulmoddai (USAP) are kindly informed that the USAP T-Shirt Launch Ceremony will be held as per the details below:
📅 Date: Thursday, 15.01.2026
🕓 Time: 4:00 PM onwards
📍 Venue: Shopping Complex Hall, Pulmoddai
This event is an important occasion for our association. Therefore, all USAP members are kindly requested to participate and make the event a success.
—University Students’ Association Pulmoddai (USAP)
23/12/2025
📢 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ!
#புல்மோட்டை_பல்கலைக்கழக_மாணவர்_ஒன்றியத்தின் ஏற்பாட்டில்
இன்ஷாஅல்லாஹ், #நாளை காலை 🕣 8.00 மணிக்கு G.C.E O/L மாணவர்களுக்கான 📘 #விஞ்ஞானப் பாடத்தின் #அலகு_ரீதியான மீட்டல் வகுப்புகள் நாளை முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கின்றன.
எமது ஊரில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகள்:
🏫 தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி
🏫 தி/தி/அரபாத் மகா வித்தியாலயம்
🏫 தி/தி/ஜின்னாபுரம் மகா வித்தியாலயம்
அனைத்தையும் இணைத்து, ஒரு பொதுவான இடமான
📍 #புல்மோட்டை_முஸ்லிம்_மத்திய_கல்லூரியில்
இவ்வகுப்புகளை நடாத்த திட்டமிட்டுள்ளோம்.
🌧️ முக்கிய அறிவிப்பு – மழை வந்தாலும் வகுப்பு நிறுத்தம் இல்லை.
ஏனெனில் எமது வளவாளர்கள் (Lectures) தற்போது எமது ஊரில் உள்ள நிலையில்,
📌 அவர்களின் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எனவே அனைத்து மாணவர்களும் இந்த பயனுள்ள வகுப்புகளில் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முக்கிய குறிப்பு :-
வரும்போது #விஞ்ஞானப்_பாடப் புத்தகம் (தரம் 10, 11)
மற்றும் G.C.E O/L கட்டாயமாக எடுத்துவரவும்.
- நன்றி -
-Department of Education 📚 - USAP
-UNIVERSITY STUDENTS' ASSOCIATION- PULMODDAI
15/12/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ!
கடந்த மூன்று நாட்களாக (2025.12.12 – 2025.12.14) காலை மற்றும் மாலை நேரங்களில், ஊரில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இணைத்து நடத்தப்பட்ட கணிதப் பாடத்தின் அலகு ரீதியான மீட்டல் Paper Class வகுப்பானது, நேற்று (2025.12.14) மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவடைந்தது.
இவ்வகுப்புகளை சிறப்பாக நடாத்துவதற்காக தங்களது பெறுமதியான நேரங்களை ஒதுக்கி வருகை தந்த எமது வளவாளர்கள்:
• Asam – SUSL
• Nashath – UOM
• Sajeeth – UOK
• Asam – EUSL (TC)
• Haseena – SEUSL
• Nusra – SEUSL
• Safna – EUSL
• Farwees – EUSL (TC)
• Abdullah – UOJ
• Imran – SEUSL
• Asky – SUSL
• Safeek – SEUSL
• Waseem – EUSL
• Rilakhan – EUSL (TC)
மேலும், நேற்றைய இறுதி நாளில், எமது Alumni உறுப்பினர்களான Isfar Sir மற்றும் Imthiyas அவர்களும் எம்முடன் இணைந்து இந்த மகத்தான கல்விச் சேவையை சிறப்பாக நிறைவேற்றினர்.
இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து வளவாலர்களுக்கும், Alumni உறுப்பினர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
அல்லாஹ் அவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் பரக்கத்தையும் வெற்றியையும் வழங்குவானாக.
மேலும், இந்நிகழ்விற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிய மூன்று பாடசாலைகளின் அதிபர்கள், எம்மோடு இறுதி வரை தமது பெறுமதியான நேரங்களை ஒதுக்கி எம்மோடு அர்ப்பணித்த மதிப்பிற்குரிய பிரதி அதிபர் முபீதா ஆசிரியை, உதவி அதிபர் ஹபீபா ஆசிரியை அவர்களுக்கும் றிஸ்வான் ஆசிரியர் மற்றும் சபீர் ஆசிரியர் அவர்களுக்கும் எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்தோடு, எந்தவித சலிப்பும் இன்றி, மிகுந்த ஆர்வத்துடனும் ஒழுங்குடனும் இவ்வகுப்புகளில் கலந்து கொண்ட 2025 / 2026 கல்வியாண்டு மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.எல்லோரும் சிறப்பான பெறுபேற்றினை பெற எமது பிரார்த்தனை என்றும் இருக்கும்.
மேலும், நேற்றைய இறுதி நாளில் தாமாக முன்வந்து Refreshment (Milk Packet) வழங்கி, கல்விக்காக உதவிய:
1. Mr. Rizvi Bin Aswath
2. Mr. Rizan Abdul Manaf
3. Mr. Ramzan
4. Mr. Akram
ஆகியோருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இன் ஷா அல்லாஹ் எதிர்காலங்களிலும் இவ்வாறான நன்மையான காரியங்களில் பங்கெடுங்கள் இறைவன் பரகத் செய்வானாக!!
இவ்வாறான நன்மையான காரியங்களில் பங்கெடுக்க உங்கள் அனைவருக்கும் சந்தர்ப்பமளிக்க USAP காத்திருக்கிறது.
மேலும் தொடர்ச்சியாக எமக்கு Editing உதவியினை செய்துவரும் எமது Editor (UOP)அவர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாக்கட்டும்.
குறிப்பு (Note):
இவ்வகுப்புகள் மூன்று நாட்கள் நடைபெற்ற போதிலும், மாணவர்களின் #பெற்றோர்கள் எவரும் அவ்விடத்திற்குச் வருகை தராதது ஒரு கவலையளிக்கும் விடயமாகும்.
எமது ஊரில் இந்த நிலைமை மாற்றம் பெற வேண்டும்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி மீது அதிகமான #கரிசனையும் பங்குபற்றலும் காட்ட வேண்டியது இன்றியமையாததாகும்.
University Students‘ Association – Pulmoddai.
12/12/2025
இம்முறை பரீட்சை எழுதும் க.பொ.த சா/த மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் #விசேட_செயற்திட்டமான அலகு ரீதியான வினாத்தாள் மீட்டல் வகுப்புகளின் முதலாவது நாள் இன்று #வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது.
இவ் வகுப்புகளுக்கு தி/தி/ புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி, தி/தி/ அரபாத் மகாவித்தியாலயம்,
தி/தி/ ஜின்னாபுர வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளின் மாணவர்கள் பங்களித்து தமது #பெறுபேற்றினை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டினர்.
இவ் வகுப்புகளில் தம்மை #அர்ப்பணித்த எமது வளவாளர்கள் மற்றும் ஏற்பாட்டுக்குழு
Asam (SUSL)
Nashath (UOM)
Sajeeth (UOK)
Asam (EUSL-TC)
Haseena (SEUSL)
Nusra (SEUSL)
Safna (EUSL)
Farwees (EUSL- TC)
Abdullah (UOJ)
imran (SEUSL)
Asky (SUSL)
Safeek (SEUSL) மற்றும் 03 பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதி அதிபரான முபீதா ஆசிரியை, உதவி அதிபரான ஹபீபா ஆசிரியை மற்றும் றிஸ்வான் ஆசிரியர், சபீர் ஆசிரியர் ஆகிய அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
எமது வளவாளர்களின் அர்ப்பணிப்பு #தொடர்ச்சியாக இருக்கும் ஆகவே மாணவர்களே! இவர்களது பெறுமதியான #நேரங்களை பயன்படுத்த தவறிவிடாதீர்கள்.
Note:- #கவலையான விடயம் யாதெனில் #மாணவர்களின்_பெற்றோர்களுடைய பங்களிப்பு #பூச்சியமாகவே உள்ளது. #பிற_ஊர்களில் சென்று பாருங்கள் பெற்றோர்களது #பங்களிப்பு, #அர்ப்பணிப்பு எவ்வாறு அமைகின்றது என்பதை நமது ஊர் மாணவர்களின் பெற்றோர்களது கல்வி ரீதியான ஒத்துழைப்புகளை அவதானிக்கையில் மிகவும் கவலையாக உள்ளது.
-நன்றி-
11/12/2025
📢 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ!
இன்ஷாஅல்லாஹ், #நாளை காலை 🕣 8.00 மணிக்கு O/L #மாணவர்களுக்கான 📘 கணிதப் பாடத்தின் #அலகு ரீதியான கேள்வித்தாள் (Paper) மீட்டல் வகுப்புகள் தொடங்கவிருக்கின்றன.
எமது ஊரில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகள்:
🏫 தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி
🏫 தி/தி/அரபாத் மகா வித்தியாலயம்
🏫 தி/தி/ஜின்னாபுரம் மகா வித்தியாலயம்
அனைத்தையும் இணைத்து, ஒரு பொதுவான இடமான
📍 புல்மோட்டை முஸ்லிம் #மத்திய_கல்லூரியில்
இவ்வகுப்புகளை நடாத்த திட்டமிட்டுள்ளோம்.
🌧️ முக்கிய அறிவிப்பு – #மழை வந்தாலும் வகுப்பு #நிறுத்தம்_இல்லை
அனர்த்த நிலைமை கடந்து விட்டது. இனிமேல் பெய்யும் மழை மாரி கால மழை மட்டுமே.
எனவே 🌦️ மழை இருந்தாலும் வகுப்புகள் வழக்கமாகவே நடைபெறும்.
ஏனெனில் எமது வளவாளர்கள் (Lectures) தற்போது எமது #ஊரில் உள்ள நிலையில்,
📌 அவர்களின் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எனவே அனைத்து மாணவர்களும் இந்த பயனுள்ள வகுப்புகளில் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#முக்கிய_குறிப்பு :-
கட்டாயம் ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் #பெற்றார் இருவர் ஏனும் இதில் கலந்துகொள்ள வேண்டும். முக்கியமாக #பெண்_மாணவிகளின் பெற்றார்!
- நன்றி -
- USAP கல்விக்குழு 📚 -
11/12/2025
தி/தி/ புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் இம்முறை G.C.E O/L பரீட்சை எழுதும் மாணவர்களுடைய பெறுபேற்றினை அதிகரிக்கும் நோக்கில் #மேலதிக_விசேட_வகுப்புகள் தி/தி/ சதாம் வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!!
இவ்வகுப்புக்களுக்கு
பாடசாலையின் அதிபர் Mrs. S. Siyana (SLPS) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எமது பாடசாலை ஆசிரியர்களுக்கு மேலதிகமாகவும் எமது #பல்கலைக்கழக_மாணவர்_ஒன்றிய வளங்கள் மற்றும் எமது பிரதேசத்தின் வளங்கள் (வளவாளர்கள்)
இவர்களைக் கொண்டு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.
இவ்வகுப்புக்களுக்கு வருகை தந்த எமது வளவாளர்கள்:
MATHS-
U.M. Asam (EUSL- TC)
F.M. Asam (SUSL)
N.M. Nashath (UOM)
S.M. Manaseer (UOJ)
H.M. Farweez (EUSL-TC)
S. Safna (SEUSL)
F. Haseena (SEUSL)
SCIENCE :-
A.M. Sajith sir (Bsc)
F. Haseena (SEUSL)
F. Asam (SUSL)
M. Dilshath (SEUSL)
ISLAM:-
Naveeth Rayoos (Naleemi)
HISTORY:-
I.M. Asfak (Anwary) (SEUSL)
ENGLISH:-
M. Dilshath (SEUSL)
TAMIL LITERATURE:-
A.S.F. sasna (Uoj)
ICT:-
M.M. Asmy (Global Computer Education)
பல வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி வந்த வளவாளர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கும்
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகத்தினருக்கும்,
சதாம் பாடசாலை அதிபர் அவர்களுக்கும் எமது ஒன்றியம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது இத்திட்டத்தின் போது எமது வளவாளர்களுக்கு #புத்துணர்ச்சியளித்த (Refreshment) அன்றைய நாளுக்கு பொறுப்பாக இருந்த #பெற்றோர்களான
.L. MOHAMED LEVVAI,
NAFAR
ஆகிய பெற்றோர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
#பெற்றோர்களின் பங்களிப்பு #இன்றியமையாததாகும்.
ஆகவே பெற்றோர்களே! உமது பிள்ளைகளின் எதிர்காலத்தில் அக்கறை காட்டுங்கள்.
இவர்களின் மகத்தான சேவையை #இறைவன் பொருந்திக்கொள்வானாக !!
இன் ஷா அல்லாஹ் எதிர்வரும் நாட்களில் எமது சேவை பரந்துபட்டதாக #அனைத்து_பாடசாலைகளுக்கும் #கூடிய_சீக்கிரம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியினையும் அறியத்தருகிறோம்.
-நன்றி-