Mutur Central Ahadhiya

Mutur Central Ahadhiya Mutur Central Ahadhiya is an organization which is working to develop the moral education of students

இன்று (06.09.2026) எமது அஹதியாவில் நடைபெற்ற விசேட நிகழ்வில் மௌலவி: MM.MUAATH (NATHWY, MADANY , BA ) அவர்கள் சிறப்புரையாற...
06/09/2026

இன்று (06.09.2026) எமது அஹதியாவில் நடைபெற்ற விசேட நிகழ்வில் மௌலவி: MM.MUAATH (NATHWY, MADANY , BA ) அவர்கள் சிறப்புரையாற்றினார். அவருடைய உரையை மாணவர்கள் மிகுந்த கவனத்துடனும் ஆர்வத்துடனும் அவதானித்தனர்.

அதனைத் தொடர்ந்து மௌலவி அவர்களின் உரையிலிருந்து மாணவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. சரியான பதில்களை வழங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இது மாணவர்களின் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் மேலும் அதிகரித்து, நிகழ்ச்சியை மகிழ்ச்சிகரமானதும் ஊக்கமளிப்பதுமான ஒரு சிறப்பான நிகழ்வாக மாற்றியது.

தகவல்
அதிபர்
மூதூர் மத்திய அஹதிய்யா

@இஸ்லாமிய தீனியாத் (தர்மாச்சாரிய) சான்றிதழ் பரீட்சைக்கான விண்ணப்பங் கோரல் - 2026
23/08/2026

@இஸ்லாமிய தீனியாத் (தர்மாச்சாரிய) சான்றிதழ் பரீட்சைக்கான விண்ணப்பங் கோரல் - 2026

அஹதிய்யா (தஹம்) இறுதிச் சான்றிதழ் பரீட்சைக்கான விண்ணப்பங் கோரல்  - 2026
27/07/2026

அஹதிய்யா (தஹம்) இறுதிச் சான்றிதழ் பரீட்சைக்கான விண்ணப்பங் கோரல் - 2026

🦟  *டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வும் சிரமதானப் பணியும்* இன்று(12) மூதூர் மத்திய அஹதிய்யா பாடசாலையில், டெங்கு ஒழிப்பு தொடர்...
12/07/2026

🦟 *டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வும் சிரமதானப் பணியும்*

இன்று(12) மூதூர் மத்திய அஹதிய்யா பாடசாலையில், டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் சிரமதானப் பணிகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அஹதிய்யா மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து பாடசாலை வளாகத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தம் செய்து, டெங்கு பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

(சுத்தமான சூழல் – ஆரோக்கியமான சமூகம்.
டெங்குவை ஒழிப்போம்! 🚫
நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! 🌿🦟)

 #மூதூர்_மத்திய_அஹதியாவின்_வருடாந்த_BFS_நிகழ்வு  மாணவர்களின் கலை, கலாச்சார மற்றும் ஆளுமை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட நிக...
10/06/2026

#மூதூர்_மத்திய_அஹதியாவின்_வருடாந்த_BFS_நிகழ்வு

மாணவர்களின் கலை, கலாச்சார மற்றும் ஆளுமை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட நிகழ்விற்கு பல தரப்பினரும் பாராட்டு..📌

மூதூர், 07.ஜூன்.2026

வருடாந்த BFS நிகழ்வு மாணவர்களின் ஆளுமை, தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் மூதூர் மத்திய அஹதியாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “BFS (BRIGHT FUTURES SUMMIT -02 )” எனும் தொனிப்பொருளிலான கலை, கலாச்சார மற்றும் தர்பியா நிகழ்வு கடந்த மே மாதம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வு மூதூர் மத்திய அஹதியாவின் தலைவர் ஏ.எம். அர்ஷத் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், அஹதியாவின் நிர்வாக உறுப்பினர்கள், மாவட்ட சம்மேளன நிர்வாகிகள், மூதூர் கலாச்சார உத்தியோகத்தர், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் எமது அஹதியா நிர்வாகத்தின் கீழ் இயங்கும் துணை நிருவனங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது மாணவர்களின் கலைத்திறன், பேச்சுத்திறன், ஆக்கத்திறன், குழுச் செயற்பாடு மற்றும் இஸ்லாமிய விழுமியங்களை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் ஒழுக்கத்துடனும் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியமை பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

நிகழ்வில் உரையாற்றியவர்கள், மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சியில் கல்வியுடன் இணைந்த கலாச்சார மற்றும் தர்பியா செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இவ்வாறான நிகழ்வுகள் மாணவர்களை எதிர்கால சமூகத் தலைவர்களாக உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன எனக் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்காக தனது நேரம், உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை வழங்கிய தலைவர் ஏ.எம். அர்ஷத் அவர்களுக்கும், அஹதியாவின் நிர்வாக உறுப்பினர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விசேட நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வினை மூதூர் கலாச்சார உத்தியோகத்தர், ஆலோசனைக் குழுவினர், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் உயர்வாகப் பாராட்டினர்.

மாணவர்களை இந்நிகழ்வில் பங்கேற்க ஊக்குவித்த பெற்றோர்களுக்கும், நிகழ்வின் வெற்றிக்காக பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கிய நலன்விரும்பிகளுக்கும் மூதூர் மத்திய அஹதியா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் சேவை என்ற உயரிய பண்புகளை மாணவர்களிடையே வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, மூதூர் பிரதேசத்தில் கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சியை ஊக்குவிக்கும் முன்மாதிரியான நிகழ்வாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் மேலும் பல பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் எமது மூதூர் மத்திய அஹதியாவின் இரண்டாவது கிளையான ஹிழ்ர் ஜும்ஆ மஸ்ஜிதில் இயங்கி வரும் அஹதியாக மாணவர்களும் மூதூர் மத்திய அஹதியாக துணை நிறுவனங்களான லிட்டில் ஸ்டார் பாலர் பாடசாலை மற்றும் குர்ஆன் மதரஸா மாணவர்களும் கலந்து கொண்டனர். இது மூதூர் மத்திய அஹதியா முழு மூதூருக்குமான சொத்து என்பதை பறைசாற்றுகின்றது.

-செயலாளர்-
மூதூர் மத்திய அஹதியா

எமது அஹதிய்யாவில் இருந்து சென்ற வருடம் (2025) அஹதிய்யா இடை நிலைப்பரீட்சையிற்கு தோற்றிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்...
09/05/2026

எமது அஹதிய்யாவில் இருந்து சென்ற வருடம் (2025) அஹதிய்யா இடை நிலைப்பரீட்சையிற்கு தோற்றிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று அனைவரும் சித்தியடைந்திருக்கின்றார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

இந்த பாராட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய எமது ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜஷாகுமுல்லாஹு கைரன்

 #அஹதியா அல்குர்ஆன் மதரஸா அங்குரார்ப்பண நிகழ்வு🔖🔖🔖நேற்று (02.04.2025) எமது மூதூர் மத்திய அஹதியாவின் ஓர் அங்கமான அல்குர்ஆ...
03/04/2026

#அஹதியா அல்குர்ஆன் மதரஸா அங்குரார்ப்பண நிகழ்வு🔖🔖🔖

நேற்று (02.04.2025) எமது மூதூர் மத்திய அஹதியாவின் ஓர் அங்கமான அல்குர்ஆன் மதரஸா, அறபா நகர் மீரா பள்ளிவாயலில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வை அஹதியாவின் தலைவர் ஏ.எம். அர்ஷத் sir அவர்கள் தலைமை தாங்கினர்.

இம்மதரஸா எமது அஹதியாவின் மூன்றாவது கிளை மதரஸாவாக உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அறபா நகர் மீரா பள்ளிவாயலின் நிர்வாகத் தலைவர் Mr. நஸ்றுதீன் அவர்கள், நிர்வாகிகள், அஹதியாவின் ஞாயிறு பாடசாலை அதிபர் M. நுஸ்கி அவர்கள், மேலும் மதரஸாவின் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட மஹல்லா வாசிகளும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

எமது மதரஸா பிரிவுகளின் இணைப்பாளராகவும் நிர்வாக உறுப்பினராகவும் இருக்கும்
R. நிஸ்வாக் மௌலவி அவர்கள் இந்நிகழ்வை நெறிப்படுத்தியதோடு, இம்மதரஸாவின் ஆசிரியராகவும் விளங்குகிறார்.

அல்லாஹ் இந்நல்ல முயற்சியை சிறப்பாக முன்னேற்றி, பயனுள்ளதாக மாற்றிவைக்கப் பிரார்த்திக்கின்றோம். 🤲✨

செயலாளர்,
AM.NUSKY(mou)
மூதூர் மத்திய அஹதியா

  Central AhadhiyyahQuran Madrasa Branch - 03 Inauguration Ceremony
01/04/2026

Central Ahadhiyyah
Quran Madrasa Branch - 03
Inauguration Ceremony

Address

Knox Road, Mutur
Trincomalee
31200

Telephone

+94770752277

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mutur Central Ahadhiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category