AFA education Foundation

AFA education Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AFA education Foundation, Education, 103/1 Aalim Road, kinniya/03, Trincomalee.

The mission of the AFA FOUNDATION - EDUCATION is to contribute to society through the pursuit of education, learning and research at the highest international levels of excellence .

*பொது அறிவுத் தகவல்கள்*💥2019 ம் ஆண்டின் இணையம் மீதான சுதந்திரம் அறிக்கையில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இணைய சுதந்திரத...
14/06/2023

*பொது அறிவுத் தகவல்கள்*

💥2019 ம் ஆண்டின் இணையம் மீதான சுதந்திரம் அறிக்கையில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இணைய சுதந்திரத்தை உலகில் மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்த நாடாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
🔴சீனா

💥10வது ஆசிய அவசர மருத்துவ நாடு எங்கே நடைபெற்றது?
🔴புது டில்லி, இந்தியா

💥100 பன்னாட்டு 120 போட்டிகளில் விளையாடிய முதலாவது இந்திய ஆண் கிரிக்கெட் வீரர் யார்?
🔴ரோகித் சர்மா

💥பன்னாட்டு பயண சந்தை (WTM) எங்கே நடைபெற்றது?
🔴லண்டன்

💥காசநோயை முற்றாக ஒழிப்பதற்கான ஆண்டாக உலக நாடுகள் நிர்ணயித்த ஆண்டு எது?
🔴2030

💥தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தின் 15 ஆவது ஆளும் குழுக்கூட்டம்
எங்கே நடைபெற்றது?
🔴 பங்களாதேஷ்

💥தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் எவை?
🔴ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா, இலங்கை, மாலைதீவு, பூட்டான், நேபாளம், பாகிஸ்தான்

💥தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
🔴1982

💥அண்மையில் தனது பக்கத்தில் அனைத்துவிதமான அரசியல் விளம்பரங்களையும் தடைசெய்த சமூக வலைத்தளம் எது?
🔴டுவிட்டர்

💥நிதிப்பிரச்சினைகள் காரணமாக 2020 ற்குள் ஓபெக் அமைப்பிலிருந்து வெளியேறவுள்ள நாடு எது?
🔴ஈக்குவடோர்

💥2023ம் ஆண்டில் ஆண்கள் பன்னாட்டு ஹொக்கி கிண்ணப்போட்டியை நடத்தவுள்ள நாடு எது?
🔴இந்தியா

💥அண்மையில் விண்ணில் ஏவப்பட்ட சூடான் நாட்டின் முதலாவது செயற்கை கோளின் பெயர் என்ன?🔴SRSS-1

💥சீனா தனது 50க்கு மேற்பட்ட நகரங்களில் 5G இணையச்சேவையை எப்போது முதல் தொடங்கியது?
🔴11/ 01/ 2019

💥பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியை வெளியிடும் கம்பனி எது?
🔴TRCE Bribery Risk Matrix

💥 பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியில் இறுதியாக உள்ள நாடு எது?
🔴சோமாலியா

💥பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியில் முதலில் உள்ள நாடு எது?
🔴நியூசிலாந்து

💥பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியில் தெற்காசியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு எது?🔴 பங்களாதேஷ்

💥.2019ம் ஆண்டு பன்னாட்டு கபடி போட்டியை நடத்தவுள்ள இந்திய மாநிலம் எது?
🔴பஞ்சாப்

💥.2019ம் ஆண்டு பன்னாட்டு கபடி போட்டியில் எத்தனை நாடுகள் பங்கேற்க உள்ளன?
🔴9

💥யுனெஸ்கோவின் கல்வி ஆணைக்குழுவின் தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்டவர் யார்?
🔴சவ்ப்காத் மெஹ்மூத்

By: Casim Rihana,
University of Jaffna,
From: Anuradhapura, Horowpothana.

25/06/2022

*🤔 மாணவன் எப்படி இருக்கனும் 🤔*
*___________________________♥️
*மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?*
*தத்துவஞானி சாக்ரடீஸ் சொன்ன விளக்கம்.*
*______________________________*

ஒரு மாணவன் சாக்ரடீஸிடம் வந்தான்.

“ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?’’ என்று கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ், “மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்” என்றார்.

மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்றான்.

“கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.

“கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?’’ என்று கேட்டான் மாணவன்.

“கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.

“அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…’’

“ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும்.

அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.

“எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?’’ என்று கேட்டான்.

“மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத்தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் என சொன்னேன்’’ என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ். அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.

__நான் கண்ட தனிமை__ஒற்றை நட்பு கூட இல்லாத தனிமையும் கடந்தது பழகும் உறவும் பழக்கமாக்கிய உறவும் நட்புக்களென நம்பிய ஏமாற்றங...
07/03/2022

__நான் கண்ட தனிமை__

ஒற்றை நட்பு கூட இல்லாத
தனிமையும் கடந்தது
பழகும் உறவும்
பழக்கமாக்கிய உறவும்
நட்புக்களென நம்பிய
ஏமாற்றங்களுங்கூட நகர்ந்தது

வெறும் வாய் வார்த்தைகளாயேனும்
நம்பிக்கை கொடுக்கும்
நட்புக்களாய் கூட தொடர்புகளானது
உண்மையான அன்பும்
நீடிக்க முடியாமல்
பிரிவையும் தொட்டது

நான் வசிப்பதென்னவோ
தனிமையிலான மௌனங்களில் தான்
இருந்தாலுமென் புரிதலுடனான
சிந்தனைகளின் பரவல்களோ
அமைதியையும் தனிமையையும்
மறக்கடிக்கும் சலசலப்புக்களிலுள்ளது

தனிமை ஒன்றும் புதிதல்ல
ஏமாற்றங்கள் என்றும் எனக்கல்ல
ஏமாற்றங்கள் அழித்ததென்
எதிர்பார்ப்புக்களையாகலாம்
ஆனால், தனிமை கொடுத்தெனக்கு
உறுதியான வைராக்கியங்களை

__அப்துல் வஹாப் சப்றினா_
__அட்டாளைச்சேனை_

◇•••••••••••••••••••••••••••◇         💁‍♂️ *அறிந்து 🌹*     *கொள்வோம் 😍**அய்யா*-வுக்கும் *ஐயா*-வுக்கும் *வேறுபாடு* என்ன த...
03/03/2022

◇•••••••••••••••••••••••••••◇
💁‍♂️ *அறிந்து 🌹*
*கொள்வோம் 😍*


*அய்யா*-வுக்கும் *ஐயா*-வுக்கும்
*வேறுபாடு*
என்ன தெரியுமா*?

படித்ததில் பிடித்தது.

தமிழில் எழுதும் போது
'ஐயா', 'அய்யா' எது சரி?

சிலர், "ஐயா"என்று எழுதுகின்றனர்.

ஆனால், சிலர் "அய்யா"
என்று எழுதுகின்றனர்.

எப்படியும் எழுதலாம் என்பது ஒருமுறை.

இலக்கணம் இப்படித்தான் எழுத வேண்டும் என கூறுகிறது,

எனவே, இலக்கணப்படித்தான் எழுத வேண்டும் என்பது ஒருமுறை.

எது சரி?

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அமைந்த அய்யனரா? ஐயனரா? என்று படித்த கட்டுரையின் ஒரு பகுதியை பதிவு செய்கிறேன்,

*கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி"தமிழ்க்குடியாகும்* !!

*உயிர், உடல், ஆயுதம் இவற்றோடு தோன்றிய தமிழர்
தாம்பேசும் தமிழ் மொழியிலும்

*உயிர் எழுத்துக்களையும்*, *மெய்யெழுத்துக்களையும்*,
*ஆயுத எழுத்துக்களையும்*
*உருவாக்கிச் சங்கம் வைத்து ஆராய்ந்து தமிழ் மொழியை வளர்த்துள்ளனர்*,

*ஓர் இயந்திரத்தைத் தயாரித்தவர், அதற்கான Operation Manual கொடுப்பது போன்று, சங்கத்தமிழர் தமிழுக்கு இலக்கணம் ஏற்படுத்திக்
கொடுத்துள்ளனர்*,

*தமிழில் எழுத்துக்களைக்*

*குறில் எழுத்துக்கள் என்றும்*
*நெடில் எழுத்துக்கள்என்றும்
*மெய்யெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர்* !!

*குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு
நேரம் ஒலிக்கும்*.

*நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரைஅளவு நேரம் ஒலிக்கும்*.

*மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு
நேரம் ஒலிக்கும்*.

*எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன*.

உதாரணமாக *மகன்* என்று சொல்லுக்கும் *மகான்*
என்ற சொல்லுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

*பகவனுக்கும் பகவானுக்கும் வேறுபாடு உண்டு*.

இவ்வாறாகப் பல உதாரணங்களைக் கூறலாம்.

எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் *ஒலி அளவை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும்* !!

சிலர், *ஐயா* என்று எழுதுகின்றனர்.

ஆனால், சிலர் *அய்யா* என்று எழுதுகின்றனர்.

*ஐயா என்ற சொல்லில் "ஐ" என்பது நெடில் எழுத்தாகும். இரண்டு மாத்திரை அளவு உள்ளது*.

*ஆனால், அய்யா என்ற சொல்லில்"அ" என்பது குறில் எழுத்தாகும்*.

*ஒரு மாத்திரை அளவு உள்ளதாகும்* !!

"ய்" என்பது மெய் யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும்.

எனவே "அய்" என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.

ஐ நெடில் = 2 அளவு

அ குறில் = 1 அளவு

ய் ஒற்று = ½ அளவு

அய் = 1+½ = 1 ½ அளவு

*ஐ* *என்றால் தமிழில் தலைவன் என்று பொருள்*. *ஐயா* *என்றால்* *தலைவா* *என்று*
*மரியாதை நிமித்தமாக அழைப்பது என்று பொருள்* !!

"அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை. "அய்யா" என்றாலும் பொருள் ஏதும் இல்லை!

*எனவே மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தும் ஒரு சொல்லைக் குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும்* !!

*நாம் செய்யும் மரியாதையில் பிழை ஏற்பட்டு விடும்*.

*எனவே "ஐயா" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும்*.

*"அய்யா" என்ற பொருளற்ற சொல்லைத் தவிர்க்கலாம்* !!
❤️ 🧡 💛 💚 💙 💜 🖤 🤍 🤎

01/03/2022

தப்ப தப்பே இல்லாம செய்தா தப்பில்லை
சிந்தனைக்காக சில நிமிடம்

24/02/2022

அடுத்த தலைமுறை வரை சொத்து வேண்டும்...😃
சிந்தனைக்காக சில நிமிடம்

🥰 ஹிஜாப்பெண்ணின் பாதுகாப்புக் கேடயம்..பெண்ணுக்கு அதுவே கேடயம்..பார்ப்பதற்கு ஒரு அழகு..படைத்தவனுக்கு அது அழகு..கண்டவனிடமி...
22/02/2022

🥰 ஹிஜாப்

பெண்ணின் பாதுகாப்புக் கேடயம்..
பெண்ணுக்கு அதுவே கேடயம்..

பார்ப்பதற்கு ஒரு அழகு..
படைத்தவனுக்கு அது அழகு..

கண்டவனிடமிருந்து கண்ணியம்..
கற்புக்கும் அதுவே கண்ணியம்..

மயக்கினால் சிலருக்கு தான் பிடிக்கும்..
மறைத்தால் யாவருக்கும் பிடிக்கும்..

பணிந்தாள் அவள் அன்பு தேவதை..
அணிந்தாள் அவள் அழகு தேவதை..

கனவுலகின் போராளிகளின் உரிமை..
கண்ணான சமூகத்தை காக்கும் உரிமை..

எழுத்துக்களுக்கு கற்பனை சிறப்பு..
பெண்களுக்கு ஹிஜாப் தான் சிறப்பு..♥️

என் ஆடை மீது உனக்கேன் இந்த கோபம்!என் ஆடையில் நீ கண்ட குறையை கூறு!என் ஆடை மீது நீ கொண்ட ஐயங்கள் நூறு!என் ஆடையில் பெண்ணுக்...
10/02/2022

என் ஆடை மீது உனக்கேன் இந்த கோபம்!
என் ஆடையில் நீ கண்ட குறையை கூறு!
என் ஆடை மீது நீ கொண்ட ஐயங்கள் நூறு!
என் ஆடையில் பெண்ணுக்கு எது கேடு!

நீ கூறுகிறாய் என் ஆடை அடிமைத்தனமென்று!
நீ அறியவில்லை என் ஆடையின் உண்மை என்வென்று !
நீ நினைக்கவில்லை ஹிஜாப் என் அடையாளமென்று!
நீ அறிந்துக்கொள் என் ஆடையின் மகத்துவம் என்னவென்று!

நான் தலைமூட பெருமைப்படுகிறேன்!
பெண்ணாக நான் பாதுகாக்கப்படுகிறேன்!
இவ்வாடை அணிகையிலே நான் மதி்க்கப்படுகிறேன்!
முகமூடி மறைவினிலே நான் கௌரவிக்க படுகிறேன்!

சமூகமே அறிந்துக்கொள்!
நான் அணிகிறேன் எனக்காக!
சமூகமே தெரிந்துக்கொள்!
முழுமையானேன் என் ஆடையில்!
சமூகமே உணர்ந்துக்கொள்!
நான் அடிமை இல்லை!
சமூகமே சொல்கிறேன்
ஹிஜாப் என் உரிமை!

என்னை அணியவண்டாம் என சொல்ல நீ யார்?
என்னை கட்டுப்படுத்தும் ரிமை உனக்களித்தது யார்?
ஹிஜாப் என் உரிமை!
ஹிஜாப் என் வாழ்க்கை!
நீ தடுத்த போதும் நான் அணிவேன் ஹிஜாப்!

ஹிஜாப் அணிய வேண்டாம் என நீ சொன்னால் கேட்பதற்கு நான் அடிமையல்ல , சுதந்திரப்பெண்!
நீ என்னை கல்லால் அடித்தாலும் என் கால்கள் மடியாது !
நீ என்னை தூக்கிலிட்டாலும் என் தலை உன்னை வணங்காது!

Address

103/1 Aalim Road, Kinniya/03
Trincomalee
31100

Telephone

+94756231212

Website

Alerts

Be the first to know and let us send you an email when AFA education Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to AFA education Foundation:

Shortcuts

Share

Category