Madrasa Hira Al Quraniyah

Madrasa Hira Al Quraniyah Let's build a pioneer group of Islamic Student to serve the society and spread the teachings of Islam

Eid Ul Azha Mubarak to everyone out there..!
21/08/2018

Eid Ul Azha Mubarak to everyone out there..!

Madrasa Hira Al Quraniyah வின் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான இப்தார் நிகழ்வொன்று இன்று எமது மத்ரஸாவில் இடம்பெற்றது....
09/06/2018

Madrasa Hira Al Quraniyah வின் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான இப்தார் நிகழ்வொன்று இன்று எமது மத்ரஸாவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 400 பேர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுக்கு EMBASSY OF UNITED ARAB AMIRATES - COLOMBO அணுசரணை வழங்கியமையை நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

ரமழானை வரவேற்கும் ஆயத்தங்களில் நமது மாணவர்கள்...
06/06/2018

ரமழானை வரவேற்கும் ஆயத்தங்களில் நமது மாணவர்கள்...

கடந்த 2016 /06/28 செவ்வாய்க்கிழமை மத்ரஸா ஹிரா அல் குர்ஆனிய்யாவில் இப்தார் நிகழ்வும் இராப் போசன நிகழ்வும் இடம் பெற்றது .இ...
11/09/2016

கடந்த 2016 /06/28 செவ்வாய்க்கிழமை மத்ரஸா ஹிரா அல் குர்ஆனிய்யாவில் இப்தார் நிகழ்வும் இராப் போசன நிகழ்வும் இடம் பெற்றது .
இந்நிகழ்வில் இம்மத்ரஸா முஅல்லிமாக்களின் குடும்பமும், மத்ரஸா நிர்வாகத்தினர்களின் குடும்பமும், சுஃபா அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மத்ரஸா ஹிரா அல் குர்ஆனியாவில் கடந்த2016/06/23 வியாழக்கிழமை 400 பேருக்கான இப்தார் நிகழ்வொன்று இடம்பெற்றது . இந்நிகழ்வில் ...
25/06/2016

மத்ரஸா ஹிரா அல் குர்ஆனியாவில் கடந்த2016/06/23 வியாழக்கிழமை 400 பேருக்கான இப்தார் நிகழ்வொன்று இடம்பெற்றது . இந்நிகழ்வில் இம்மத்ரஸா மாணவ மாணவிகமும் . அவர்களது பெற்றோரும் மத்ரஸா முஅல்லிமாக்கமும் கலந்து சிறப்பித்தனர்,

மத்ரஸா ஹிரா அல் குர்ஆனியாவில் கல்வி பயிலுகின்ற மாணவ மாணவிகளின் அரையாண்டுப்பரீட்சை பெருபேறுகள் வழங்கும் வைபவமும் .ரமழானை ...
24/06/2016

மத்ரஸா ஹிரா அல் குர்ஆனியாவில் கல்வி பயிலுகின்ற மாணவ மாணவிகளின் அரையாண்டுப்பரீட்சை பெருபேறுகள் வழங்கும் வைபவமும் .ரமழானை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட குர்ஆன் மன்னப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வும் . கடந்த 2016/06/21 அன்று எமது மத்ரஸாவில் இடம்பெற்றது . இந்நகழ்வில் சுமார் 200 மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கலந்து சிறப்பத்தனர் . இம்மாணவர்களது பெற்றோர்களுக்கான மாதாந்த 1வது கருத்தரங்கு "குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்களிப்பு" எனும் தலைப்பில் மத்ரஸா அதிபர் Mrs Faisala Hasan அவர்கள் உறை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்,

மத்ரஸா ஹிரா அல் குர்ஆனியாவில் கல்வி பயிலுகின்ற மாணவ மாணவியர்களுக்கு ரமழானை வரவேற்கும் முகமாக ஓர் விசேட நிகழ்வொன்று கடந்த...
04/06/2016

மத்ரஸா ஹிரா அல் குர்ஆனியாவில் கல்வி பயிலுகின்ற மாணவ மாணவியர்களுக்கு ரமழானை வரவேற்கும் முகமாக ஓர் விசேட நிகழ்வொன்று கடந்த 2016/06/02 வியாழக்கிழமை 2.30 - 5.30 வரை இடம் பெற்றது
இந்நிகழ்வில்100 க்கும் மேற் பட்ட மணவ மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.
இடம் பெற்ற இந்நிகழ்வில் "ரமழானை வரவேற்போம் "என்ற தலைப்பில் மத்ரஸா அதிபர் Mrs. Faisala Hasan அவர்களாலும். "அமல்களும் அதற்கான நன்மைகளும்" என்ற தலைப்பில் அசிரியை மௌலவியா Mrs.Nazmiya Zakariya அவர்களாலும் நடாத்தப்பட்டது . மத்ரஸா ஆசிரியை Mrs.Mafaza Haleem"மன அமைதி பெற ஓர் எளிய நடைமுறைப்பயிற்சியும் நடாத்தியமை குறிப்பிடத்தக்க விடயம் .

மத்ரஸா ஹிரா அல்குரானியாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுப்பரீட்சை 2016 மே 24 25 , 26 ,30 , 31 ஆகிய திணங்களில் ...
01/06/2016

மத்ரஸா ஹிரா அல்குரானியாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுப்பரீட்சை 2016 மே 24 25 , 26 ,30 , 31 ஆகிய திணங்களில் நடை பெற்றது
இம்மாணவர்களுக்கான எழுத்துப்பரீடசை , வாய் மொழிப்பரீட்சை , குர்ஆன் பாடம் , ஸூராக்கள் மன்னம் , போன்ர பாடங்கள் இடம் பெற்றன .

08/03/2016

💚💚Women's Day💚💚
💥💥💥March-8💥💥💥

நபி அவர்கள் கூறினார்கள்: "எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915

உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56

ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162

''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082

2016 ம் கல்வியாண்டுக்கான மத்ரஸா மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு ஜனவரி 15 ம் திகதி எமது மத்ரஸாவில் இடம்பெற்றது. இத்தி...
07/03/2016

2016 ம் கல்வியாண்டுக்கான மத்ரஸா மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு ஜனவரி 15 ம் திகதி எமது மத்ரஸாவில் இடம்பெற்றது. இத்தினம் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்ரஸாவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இதன் போது தரம் 2 மாணவர்களால் சில கலைநிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டதை அடுத்து புதிய மாணவர்களுக்கும் மேடையில் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வொன்று 2016.02.08 திங்கள் அன்று எமது மத்ரஸா வளாகத்தில் இ...
09/02/2016

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வொன்று 2016.02.08 திங்கள் அன்று எமது மத்ரஸா வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Address

Tihariya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasa Hira Al Quraniyah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category