22/05/2026
இரண்டாம் இடம் - கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் - 2026
23 பாடசாலைகள் உள்ள எமது லங்கபுர கோட்டத்தில் நடந்து முடிந்த போட்டி முடிவுகளின்படி, மெய்வல்லுநர் நிகழ்ச்சிகளில் எமது பாடசாலை 134 புள்ளிகளைப் பெற்று 3ஆம் இடத்தையும், Games போட்டிகளில் 25 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தையும் பெற்றுள்ளது. இதன் மூலம் மொத்தமாக 159 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த கோட்ட மட்டப் போட்டிகளில் எமது பாடசாலை 2ஆம் இடத்தைத் தட்டிச் சென்றுள்ளது.
அதிபர் BS மஹுபீர் (SLPS -1) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், உடற்கல்வி ஆசிரியரான Y.M MUNAWEER, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரான S.M.NIFRAS, இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இம்மாணவர்கள் மேலும் பல போட்டிகளில் பங்குபெற்று, பல வெற்றிகளை ஈட்டி நமது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை தேடித்தர வேண்டும் என வாழ்த்துவதோடு, அதற்குரிய உடல், உள வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்க வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றோம். ஆமின்!🤲🏻🤲🏻🤲🏻
PL / SUNGAVILA MUSLIM MAHA VIDYALAYA