17/05/2024
பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
**********************************
பசுமையும், எழில் நிறைந்த நிந்தவூர் மண்ணில் அப்துல் மஜீத் ரஸீனா உம்மா தம்பதியாருக்கு மகனாக பிறந்தார் அஷ்ஷெய்க் ஆசாத் (ஸலபி) அவர்கள்.
தனது ஆரம்பக் கல்வியை நிந்தவூர் கமு/ அல் - அறபா வித்யாலயத்தில் பயின்றார்.
தொடர்ந்து தூய மார்க்கக் கல்வியை கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு வயல்வெளிகள் நிறைந்த சம்மாந்துறை மண்ணில் அமையப்பெற்றிருக்கும் ஏகத்துவ பிரச்சாரத்தின் முன்னோடியாக திகழும் தாருத் தெளஹீத் அஸ்ஸலபியாவின் கிளையாக காணப்படும் மர்கஸ் தாருல் ஈமான் அரபுக் கல்லூரியில் (2008.05.04) தனது கல்விப் பயணத்தை தொடங்கலானார்.
உலக கல்வியையும், மார்க்க கல்வியையும் ஒரே கூரையின் கீழ் பயின்று
கா.பொ.த சாதாரண மற்றும் கா.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்றார்.
2016 ஆண்டு கல்லூரியிலிருந்து அல் - ஆலிம் பட்டம் பெற்று வெளியேறினார்.பின்னர்
தான் கற்ற கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார்.
கா.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுற்றின் அடிப்படையில் ( 2018 ) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். அதில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தில் கல்வியை தொடர்ந்தார்.
அங்கு கல்விப் பணியை தொடரும்போது இறையருளால் உயர் கல்வியை தொடர சவுதி அரேபியாவில் அப்ஹாவில் அமைந்துள்ள சர்வதேச மன்னர் காலித் பல்கலைக்கழகத்தில் (King Khalid University ) உயர்கல்வியை தொடர தேர்வு செய்யப்பட்டார்.
2018 ஆம் ஆண்டு கடல் கடந்து சென்று அப்பல்கலைகழகத்தில் தனது கல்வியை தொடர்ந்து (Higher Diploma in Arabic language)2020 இல் நிறைவுசெய்து அதன் தொடராய் (Faculty of shariah and fundamentals of Religion) துறையில் நேற்றைய தினம் 2024/05/16 வியாழக்கிழமை நடைபெற்ற 26 வது பட்டமளிப்பு விழாவில் தனது இளங்கலைமானிப் B.A (HONS) பட்டம் பெற்று வெளியேறியுள்ளார்.
இதனை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்.
எமது கல்லூரிக்கும் எமக்கும் பெருமையை சேர்த்து தந்துள்ளார். இவர் கல்லூரியின் முதல் பட்டதாரியாவார் என்பது பெரும் மகிழ்ச்சிக்குரியது.
இந்தப் பெருமையை சேர்த்து தந்த அஷ்ஷெய்க் மௌலவி ஆசாத் (ஸலபி ) அவர்களுக்கு கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவருடைய கல்வி பயணத்திற்காக பிரார்த்தனைகள் பல புரிந்த பெற்றோர் , குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அதிபர்,ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இறைவனின் அருள் உரித்தாவதாக!
இவருடைய கல்விப் பயணம் உயர்ந்து செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!