Happiness Japanese Language institute

Happiness Japanese Language institute JLPT / NAT Course in Tamil Medium

REST IN PEACE ABE SAN...Shinzo Abe, 67, Dies After Being Shot During Speech
08/07/2022

REST IN PEACE ABE SAN...
Shinzo Abe, 67, Dies After Being Shot During Speech

ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
07/06/2022

ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

25/05/2022

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெற்றிடங்களை இலக்காகக்கொண்டு மொழி மற்றும் தொழில் பயிற்சி திட்டங்களை ஆரம்பிக்கவும்...

ஜனாதிபதி பணிப்புரை....

• சிரேஷ்டத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் அரச ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்...

• பல்நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு ஜப்பான், போலாந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் உள்ளன. அந்த வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு மொழி மற்றும் தொழில் பயிற்சி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

திறமையான பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தைகளுக்கு உள்ளீர்க்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக இன்று (25) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

நிலவுகின்ற பொருளாதார பின்னடைவை எதிர்கொள்ளும் வகையில், அந்நியச் செலாவணி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினார். திறமையான பணியாளர்களை உருவாக்குவதன் மூலம், உயர் ஊதியம் பெறும் தொழில்களுக்கான வாய்ப்புகளை அதிகளவில் பெற்றுக்கொள்ள முடியும்.

ஐரோப்பா உட்பட பல நாடுகளில் தாதியர் சேவைகளுக்கு அதிக தேவை உள்ளது. ஜப்பானில் மட்டும் முதியோர் பராமரிப்பு மற்றும் உணவு விநியோகம் சார் துறையில் 350,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டுகிறது. அதற்கு ஜப்பானிய மொழி அறிவு கட்டாயம்.

தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, தொழிற்பயிற்சி அதிகாரசபை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் ஜப்பானிய மொழி அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தற்போது அரச சேவையில் உள்ள எந்தவொரு நபரும் அல்லது பல்நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஒரு ஊழியர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதற்கு உள்ள தடைகளை நீக்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதில் சிரேஷ்டத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பணப்பரிமாற்றலுக்காக (Foreign remittances) வாகன அனுமதிப்பத்திரம், வீட்டுக் கடன்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். தூதரகங்களின் பங்களிப்புடன் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அநுர திஸாநாயக்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறை சார் நிறுவனங்களின் தலைவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
25.05.2022

15/01/2022
25/12/2021

Caregiver Job Vacancy In Japan.

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் பராமரிப்பு பணி சேவையில் 100க்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம்.

* 22 க்கும் 28 வயதிற்கும் இடைப்பட்ட திருமணமாகாத இளைஞர் யுவதிகள் ஆண்-பெண் விண்ணப்பிக்க முடியும்.

* மாதாந்த சம்பளம்¥150000 (~350000/=)
பயணச்சீட்டு, தங்குமிடம், மருத்துவ காப்பீடு போன்றவை வழங்கப்படும்.

* புகைத்தல், போதைவஸ்து, மதுப்பழக்கம் அற்றவராக இருத்தல் வேண்டும்.

* உடலில் பச்சை ஏற்றப்படாதவராக இருத்தல் வேண்டும்.

* எமது கல்வி நிலையத்தில் ஜப்பான் மொழி தேர்ச்சியில் N5 தரத்துடன் கல்வியைத் தொடர்ந்த அல்லது கல்வி கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

* விண்ணப்ப படிவ கட்டணமாக ரூபா 200 செலுத்தி விண்ணப்பப் படிவத்தினை கீழே உள்ள தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.

* பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 15ஜனவரி2022 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைக்க வேண்டும்.

* இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தொழிலை பதிவு செய்து உறுதிப்படுத்திக் கொடுக்கப்படும்.

* விண்ணப்பத்தினை பரீட்சித்த பின்னர் தகுதியுடைய விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.

* நேர்முகப்பரீட்சை யானது ஜப்பானிய தொழிலதிபரால் நடாத்தப்படும்.

* சேவை முற்கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

* நேர்முகப் பரீட்சையில் தோற்றி வேலையை உறுதி செய்த பின்னர் எமது சேவை கட்டணத்தை செலுத்த முடியும்.

Happiness Japanese language institute
ハピネス日本語学院
11,Noor Mosque Road.
Sammanthurai 9
0672260002
0772094758

What app;

https://wa.me/qr/M6OH4464QXKBP1

Address

324 A/4, Sinna Aalim Lane
Sammanthurai
32200

Telephone

+94772094758

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happiness Japanese Language institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category