Tableequl Islam Arabic college ️ str

Tableequl Islam Arabic college ️ str قال الله تعالى : ان الدين عند الله الاسلام

சதாக் குயில் என்ற, குயில் குடும்பத்தை சேர்ந்த வியப்பூட்டும் இந்தப் பறவையின் இடம்பெயர்வுப் பாதைவழியை செயற்கைக்கோளின் துணை...
12/07/2025

சதாக் குயில் என்ற, குயில் குடும்பத்தை சேர்ந்த வியப்பூட்டும் இந்தப் பறவையின் இடம்பெயர்வுப் பாதைவழியை செயற்கைக்கோளின் துணையுடன் ஆய்வாளர்களால் கண்காணிக்க முடிந்துள்ளது.

அத‌ன்படி இப்பறவையானது தென்னாப்பிரிக்காவிலிருந்து வட சீனாவில் அமைந்துள்ளது மங்கோலியா நாட்டிற்கு 16 நாடுகளை கடந்து ஏறத்தாழ 12,000 கிலோமீட்டர் தூரத்தை கடந்து சென்றுள்ளதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

விசித்திரமான இப்பயணத்தில்
இந்தப் பறவை இந்தியப் பெருங்கடலை
இடைவிடாது மணிக்கு 60 கிமீ வேகத்தில்
புயல்களையும் சவால்களையும்
சந்தித்த வண்ணம் பயணித்துள்ளது.

நமக்கு சிறிய தகைமைகளைக் கொண்ட ரிமோட் கண்ட்ரோல்டு விமானத்தை தயாரிக்க ஆயிரக்கணக்கான தொழிநுட்ப வல்லுநர்கள் தேவைப்பட அபார திறன்மிக்க உடலும் உயிரும் உள்ள இந்தப் பறவையின் உயிரியல் பலம் எப்படி இருக்கும் என்பது பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

இது இப்படியிருக்க டார்வினின் சீடர்கள் கிளம்பி வந்து, இப்பறவைகள் படைக்கப்பட்டவும் இல்லை, வடிவமைக்கப்படவும் இல்லை, மாறாக பூச்சிகளைப் பிடிக்க ஓடிச்சென்ற டைனோசர்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக ஓடியதன் விளைவாக படிப்படியாக பறந்து பரிணாமம் கண்டன, என்பதாக மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வந்துவிடுகின்றனர்.

((இறக்கைகளை விரித்துக்கொண்டும் மடக்கிக்கொண்டும் அவர்களுக்கு மேல் (ஆகாயத்தில் அணியணியாகப் பறக்கும்) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அந்த ரஹ்மானையன்றி வேறு யாரும் அவைகளை பிடித்தியக்கவில்லை.))

10/07/2025
ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.ஆவலுடன...
06/07/2025

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.

ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.

நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.

மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன்.
எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.

“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.
அவன் சென்ற பிறகு,
ராணி“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்

“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”
அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.

“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன்.

பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான்.

எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.
அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும். அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை

நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று.

நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!
மனித உணர்வுகளை
நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் .

நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும்.
இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும்.

அதுவே உண்மையான நன்றி.
அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள்.

அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள்.

யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு ‘ #நன்றி’ சொல்வோம். #மனிதம்_வாழட்டும்.♥️

1400 ஆண்டுகளுக்கு முன், ஒரு குழந்தை பிறந்ததும், ஒரு பேரீச்சம்பழத்தில் ஒரு சிறிய பகுதியை எடுத்து வாயில் வைப்பதை நபி (ஸல்)...
06/07/2025

1400 ஆண்டுகளுக்கு முன், ஒரு குழந்தை பிறந்ததும், ஒரு பேரீச்சம்பழத்தில் ஒரு சிறிய பகுதியை எடுத்து வாயில் வைப்பதை நபி (ஸல்) அவர்கள் தனது சுன்னாவாக ஆக்கினார்கள். அவர் அதை மென்மையாகும் வரை மென்று பின்னர் புதிதாகப் பிறந்த குழந்தையின் கண்ணத்தில் தேய்ப்பார். இதற்கு தஷ்னிக் என்று பெயர்.

'இன்று', பிபிசி நியூஸ், "நிபுணர்கள்" கூறியது - "கன்னத்தின் உட்புறத்தில் ஒரு ஜெல்லாக கொடுக்கப்பட்ட சர்க்கரை ஒரு மலிவான மற்றும் பயனுள்ள வழி, குறைமாத குழந்தைகளை மூளை பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்."

இதனால்தான் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவை கேள்வி கேட்காமல் பின்பற்றுகிறார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாரம்பரியத்தை இப்போதுதான் அறிவியல் கண்டுபிடித்து வருகிறது, ஏனென்றால் இஸ்லாம் இன்றும் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது.

இன்று பெரும்பாலான ஆண்கள் தங்கள் முழங்கால்களைக் காட்டுகிறார்கள், அதுவும் சமூக வலைத்தளங்களில் சாதாரணமாக  தொடை தெரியுமளவு ஆ...
06/07/2025

இன்று பெரும்பாலான ஆண்கள் தங்கள் முழங்கால்களைக் காட்டுகிறார்கள், அதுவும் சமூக வலைத்தளங்களில் சாதாரணமாக தொடை தெரியுமளவு ஆடையுடன் போட்டோக்களை போடுகிறார்கள் முழங்கால் காட்டக்கூடாத மற்றும் மறைக்கப்பட வேண்டிய மனிதனின் அவ்ராவுக்கு சொந்தமானது என்பது அவர்களின் அறிவில் எட்டவில்லை.

பெரும்பாலான உலமாக்களின் கூற்றுப்படி, ஒரு மனிதனின் முழங்கால் அவ்ராவில் உள்ளது.

இந்த ஹதீஸை படியுங்கள்.☑️

Narrated Abu Az-Zinad:
"Ibn Jarhad informed me from his father, that the Prophet (ﷺ) passed by him while his thigh was exposed, so the Prophet (ﷺ) said: 'Cover your thigh, for indeed it is 'Awrah.'"

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَبِي الزِّنَادِ، أَخْبَرَنِي ابْنُ جَرْهَدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ بِهِ وَهُوَ كَاشِفٌ عَنْ فَخِذِهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ غَطِّ فَخِذَكَ فَإِنَّهَا مِنَ الْعَوْرَةِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏

திர்மிதி 2798

அபு அஸ்-சினாத் . கூறினார்:

"இப்னு ஜர்ஹத் தனது தந்தையிடமிருந்து எனக்குத் தெரிவித்தார்,
நபி (ஸல்) அவர்களின் தொடை வெளிப்பட்ட நிலையில் அவரைக் கடந்து சென்றார்கள், எனவே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உன் தொடையை மூடிக்கொள், ஏனென்றால் அது 'அவ்ரா' ஆகும்."

சகோதரர்களே இதை நினைவில் கொள்ளுங்கள், உங்கள் முழங்கால் அவ்ராவாக உள்ளது, எனவே நீங்கள் அதை மூடுவது மட்டுமே சரியானது♥️

உடலை பட்டினி போடப்படும் போது என்ன நடக்கிறது...?படத்தில் இருப்பவர் ஜப்பானிய உடலியல் மூலக்கூறு உயிரியலாளர் யோஷினோரி ஓசுமி ...
06/07/2025

உடலை பட்டினி போடப்படும் போது என்ன நடக்கிறது...?

படத்தில் இருப்பவர் ஜப்பானிய உடலியல் மூலக்கூறு உயிரியலாளர் யோஷினோரி ஓசுமி என்பவர். 2016 ஆம் ஆண்டில், அவர் உடலியல் மூலக்கூறில் "الإلتهام الذاتي" Auto phagy" உடல் தன்னையே உண்ணுதல் பற்றிய மருத்துவ ஆய்வுக்காக நோபல் பரிசை வென்றார்.

அதாவது உடல் 8 மணி நேரத்திற்கு குறையாமலும் 16 மணி நேரத்திற்கு கூடாமலும் பசியுடன் இருக்கும்போது, அது தன்னைத்தானே உண்ணுகிறது, அல்லது உடல் செல்கள் தன்னைத்தானே உண்டு புதுப்பித்துக் கொள்கிறது என்ற மருத்து உண்மையை கண்டு பிடித்தார்.

மேலும் இந்த செயல்முறை பற்றி ஓசுமி கூறும் போது, உடல் பட்டினியாக இருக்கும் போது, உடலின் அனைத்து திசுக்களில் இருந்தும் விசேட புரதங்கள் சுரந்து, அவைகள் பெரும் துடைப்பங்கள் போன்று
சுற்றித் திரிந்து, உடலில் காணப்படும் இறந்த செல்கள், புற்றுநோய் செல்கள் மற்றும் சிதைவுற்ற செல்களை மறுசுழற்சி செய்து, புதுப்பித்துவிடுகின்றன.

இப்போதும் கூட மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளை
வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உண்ணாமல் குடிக்காமல் பட்டினிக்கு உட்படுத்தி "பட்டினி சிகிச்சை"
அளித்து வருகின்றனர்.

2016 ஆம் ஆண்டு மருத்துவத்துக்காக நோபல் பரிசின் கருப்பொருளும் இதுவாகவே இருந்தது.

நோன்பு பற்றி வான் மறை வசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது:

👉நீங்கள் நோன்பு நோற்பதானது உங்களுக்கே நன்மையானதாகும்...

03/07/2025

Trust allah

நபி(ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்..ஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டுபிரிந்தால், அந்த மைய்யத்துக...
03/07/2025

நபி(ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா
(ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்..
ஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டு
பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான
கவலையான நேரம் எது?
ஆயிஷா(ரலி): யா ரஸூல்லாஹ் அந்த
மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும்
நேரம்
நபி(ஸல்): "இல்லை"
ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில்
அடக்கிவிட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு
வருகிறோமே அதுதான் துயரமானது.
நபி(ஸல்): "இல்லை
ஆயிஷா(ரலி): நீங்களே
சொல்லுங்கள் ரஸூலுல்லாஹ்
நபி(ஸல்): ஒரு மனிதன் மரணித்துவிட்டால் ,
அம்மனிதனின் உடம்பிலிருந்தும் நரம்புகளிலிருந்
தும் எலும்புகளிலிருந்தும் உயிர்
பிரித்தெடுக்கப்படுகிறது. அந்நேரத்தில் அந்த
உடம்பு புன்னாய் போய்விடுகிறது. எந்த
மைய்யத்தும் அதை தாங்காது.
அடுத்து அந்த மையத்தை குளிப்பாட்ட அதன்
சட்டையை கழட்டும்போது அந்த மையத்து கத்துகிறது
"எனை குளிப்பாட்டுபவனே இப்போதுதான் என்
உடம்பிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டு புன்னாய்
போயிருக்கிறது.என்னிடம் மெதுவாக
நடந்துகொள்.எனை இன்னும் நோகடித்து
விடாதே எனக் கெஞ்சுகிறது"
இந்நேரத்தில் மையத்து அதிகமாக
கவலைபடுகிறது.(மையத்து என்றால்
நாம்தான்)
அடுத்து குளிப்பாட்ட தண்ணீர் எடுத்து
வைக்கும்போது' என்மீது சூடான தண்ணீரை
ஊற்றிவிடாதே குளிர்ந்த நீரையும்
ஊற்றிவிடாதெ எனது உடம்பு
தாங்காது. சூடும் இல்லாமல் குளிரும்
இல்லாமல் நடுப்பட்ட தண்ணீரை என்மீது
ஊற்று. என்னை இறுக்கமாக தேய்காதீர்கள்.எ
ன்னிடம் மெதுவாக நடந்து
கொள்ளுங்கள் எனக்
கதறுகிறது.இச்சத்தத்தை மனிதர்களையும்
ஜின்களையும் தவிர எல்லா படைப்பினங்களும்
கேட்கிறது.
அடுத்து
கஃபனிடும்போது எனை கவனமாக தூக்குங்கள்,
ஏற்கனவே கவலையில் நொந்து
போயிருக்கிறேன் . தயவு செய்து எனை
கண்ணியமாக நடத்துங்கள்" எனக்
கெஞ்சுகிறது.கவலை படுகிறது.
(அதனால்தான் குளிப்பாட்டும்போது
குடும்பத்தில் உள்ளவர்கள் அருகிலேயே இருக்க
வேண்டும். குளிப்பாட்டுபவறோடு நாமும் சேர்ந்து
குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டுபவர்க்கு
வேலையை வேகமாக முடிக்க வேண்டுமென்ற
அவசரம் மய்யத்துக்கு கவலையாக
அமையலாம்)
அடுத்து கஃபனை செய்து முடிக்கும்போது
"எனை மூடும்போது முதலாவதாக எனது முகத்தை
கட்டிவிடாதீர்கள்.
முதலாவதாக எனது கால்களை கட்டுங்கள்
அடுத்து எனது இடுப்பை மூடுங்கள் . கடைசியாக
எனது முகத்தை மூடுங்கள்.எனது குடும்பத்தை
பார்கணும்.இதற்குபின் இங்கு திரும்பி
வரப்போவதில்லை. கபுருக்கு செல்கிறேன்"
எனப் பணிவாக சப்தமிட்டு கேட்கிறது.
-என்பதாக நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் கூறுகிறார்கள்.
சகோதரர்களே சகோதரிகளே...
நாம் மரணத்தை அடிகடி நினைப்பது அமல்
செய்வதை லேசாக்குகிறது.
தொழுகையை லேசாக்குகிறது. குர்ஆன்
ஓதுவதை லேசாக்குகிறது. நம் குடும்பத்தை நேரான
வழியில் நடத்துவதை லேசாக்குகிறது. ஹராமை
விட்டும் ஹராத்தை விட்டும் தவிர்பதை
லேசாக்குகிறது.
இன்ஷா அல்லா நம் மரணமும் லேசாகும்.
நாம் அனைவரும் அடையவிருக்கும் மரணத்தை நம்
அனைவருக்கும் அல்லாஹ் லேசாக்கி
வைப்பானாக..
நம் பாவங்களை மன்னிப்பானாக..
கப்ரின் வேதனையை விட்டு நீக்கியருள்வானாக..
ஆமீன்.♥️

Address

Amaparai Road
Sammanthurai

Telephone

+94752711690

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tableequl Islam Arabic college ️ str posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category