Km/St/Al Muneer vidyalayam Sammanthurai

Km/St/Al Muneer vidyalayam Sammanthurai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Km/St/Al Muneer vidyalayam Sammanthurai, School, Sammanthurai.

இன்று (18.08.2022) மாலை கமு/சது/அல் முனீர் வித்தியாலயத்தில் மாணவர்களை மகிழ்சிக்கு உட்படுத்தும் வகையிலும் உள இயக்க ஆற்றல்...
18/08/2022

இன்று (18.08.2022) மாலை கமு/சது/அல் முனீர் வித்தியாலயத்தில் மாணவர்களை மகிழ்சிக்கு உட்படுத்தும் வகையிலும் உள இயக்க ஆற்றல்களை மேம்படுத்தும் வகையிலும் விளையாட்டு நிகழ்வுகள் அதிபர் A.A. ஜப்பார் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இதில் பிரதி அதிபர் A.முகம்மட் றிஸ்வான், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் போத்தலினுள் நீர் நிரப்புதல், நீர்பந்து மாற்றுதல், சங்கீதக் கதிரை நிகழ்வு, சமநிலை ஒட்டம் ஆகிய நிகழ்வுகள் மிக எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இப்போட்டி நிகழ்வுகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் பங்குபற்றி இருந்தனர்.

கமு/சது/அல் முனீர் வித்தியாலயத்தில் இடம் பெற்ற வகுப்பறை ஒழுங்குபடுத்தல் போட்டியானது பாடசாலையின் அதிபர்A. அப்துல் ஜப்பார்...
25/07/2022

கமு/சது/அல் முனீர் வித்தியாலயத்தில் இடம் பெற்ற வகுப்பறை ஒழுங்குபடுத்தல் போட்டியானது பாடசாலையின் அதிபர்
A. அப்துல் ஜப்பார் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இதில் பிரதி அதிபர் A.முகம்மட் றிஸ்வான் அவர்களும், இந்நிகழ்வின் நடுவர்களாக சம்மாந்துறை கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் A.L.A.மஜீர் அவர்களும், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் M.A.சபூர்தம்பி அவர்களும், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்களும் கடமை புரிந்தார்கள்.

மேலும் இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வானது தரம் 1-10 வரையான மாணவர்களின் ஆக்கங்களைக் கொண்டும், ஆசிரியர்களின் ஆக்கங்களைக் கொண்டும் வகுப்பறை
ஒழுங்கு செய்யப்பட்டதோடு மாணவர்களின் கற்றலுக்கு உதவும் வகையில் கவின் நிலையுடன் வகுப்பறைகள் காணப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் வெற்றி பெற்ற வகுப்புக்களும் ஆசிரியர்கள் விபரமும் ஆம்

தரம் 1,2 சார்பாக

1ம் இடம் 1A -----Mrs.A.K.Rihana Nazeer(Tr)
2ம் இடம் 2C------Mrs.S.Jannath Beevi (Tr)
3ம் இடம்1B------Mrs.S.J.M.Ismail(Tr)

தரம் 3,4 சார்பாக

1ம் இடம் 4C----Mrs.I.L.Rameesa(Tr)
2ம் இடம் 4A----Mrs.I.Siddiqa(Tr)
3ம் இடம் 3B-----Mrs.A.M.Zareena(Tr)

தரம் 5 சார்பாக
1ம் இடம் 5C----Mrs.K.N.Ameer Mohamed(Tr)
2ம் இடம் 5A----Mrs.K.L.Rismiya(Tr)

தரம் 6,7 சார்பாக

1ம் இடம் 6C -----Mrs.A.F.Fasmina (Tr)
2ம் இடம் 7D------Mrs.M.M.Fowsil Riyana(Tr)
3ம் இடம் 6A------Mrs.M.I.Kishor Jahan(Tr)

தரம் 8,9 சார்பாக

1ம் இடம் 8E----Mrs.A.F.Aseera(Tr)
2ம் இடம் 8D----Mrs.M.R.F.Nusha(Tr)
3ம் இடம் 9B-----Mrs.L.T.I.Farzana(Tr)

தரம் 10 சார்பாக
1ம் இடம் 10C----Mrs.A.M.Shihnas Farwin(Tr)
10A--- Mrs.A.Rifana(Tr)

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அதிபர், பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடசாலையின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

Note வெற்றி பெற்ற வகுப்புகளுக்கான பரிசு பின்னர் வழங்கப்படும்.

இன்று சம்மாந்துறை அல்முனீர் வித்தியாலயத்தில்  தரம் 1 மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா நிகழ்வு அதிபர் A. அப்துல் ஜப்பார் ...
05/05/2022

இன்று சம்மாந்துறை அல்முனீர் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா நிகழ்வு அதிபர் A. அப்துல் ஜப்பார் அவர்களின் தலைமையில் இன்று 05.05.2022 வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் H.M.M.றஸீட் அவர்களும், கெளரவ அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் S.M.ஹைதரலி அவர்களும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் Dr K.L.றமீஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பிரதி அதிபர் A.முகம்மட் றிஸ்வான், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வுக்கு ஒலி அமைப்பை வழங்கிய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சக்கி அவர்களுக்கும், மேலும் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட  இப்தார் நிகழ்வு இன்று (21.04.2022) வலயக் கல்விப் பணிப்பாளர் M....
21/04/2022

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு இன்று (21.04.2022) வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹுதுல் நஜீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

கமு/சது/அல் முனீர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 2020, 2021ம் ஆண்டில் தோற்றி வெட்டுப்புள்ளிகளுக்கு...
16/04/2022

கமு/சது/அல் முனீர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 2020, 2021ம் ஆண்டில் தோற்றி வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களிற்கான கெளரவிப்பு நிகழ்வு அதிபர் A. அப்துல் ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதி அதிபர் A.முகம்மட் றிஸ்வான் அவர்களும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு வழங்கும் அரிய வாய்ப்பு***************************************ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரிய ...
15/03/2022

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு வழங்கும் அரிய வாய்ப்பு
***************************************
ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரிய நியமனங்களை வழங்க கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுத் தீர்மானித்துள்ளது.

இவ் அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள மாணவர்களே இன்றே முந்திச் செயற்படுங்கள்.

கடந்த ஆண்டுகளான 2018,2019,2020,2021 ஆகிய வருடங்களில் உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பப் படிவம் அனுப்புவதற்கு தகைமை (Yes என) பெற்றுக் கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகவல்களைப் பெற ஆர்வம் உள்ள மாணவர்கள் எமது பாடசாலையின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரிவிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

கமு/சது/அல் முனீர் வித்தியாலயத்தில் 2021(2022) புலமைப் பரிசில் பரீட்சையில் இவ்வருடம் 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு...
15/03/2022

கமு/சது/அல் முனீர் வித்தியாலயத்தில் 2021(2022) புலமைப் பரிசில் பரீட்சையில் இவ்வருடம் 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.இதில் றமீஸ் செயினப் சுஹா 179 புள்ளிகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு அதிபர் A.A ஜப்பார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான M.I.நிலூபா, A.M.சரீனா, Mrs.A.U.றஸீட் ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டது.

Address

Sammanthurai
32000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Km/St/Al Muneer vidyalayam Sammanthurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category