05/06/2021
வர்த்தகத்துறை மாணவர்களுக்கான அரச உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள கற்கை நெறிகள்....
(பாகம் - 01)
க. பொ. த உயர் தரத்தில் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் பின்வரும் அரச உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
1).இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம். (SLIATE)
இது கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற மிகவும் பழமையான உயர் கல்வி நிறுவனமாகும்.
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வர்த்தகத்துறை மாணவர்கள் பின்வரும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
1. கணக்கியலில் உயர் தேசிய டிப்ளோமா ( HIGHER NATIONAL DIPLOMA IN ACCOUNTANCY - (HNDA)
இக்கற்கை நெறிக்கு முழு நேரம்(Full Time) மற்றும் பகுதி நேரங்களுக்காக(Part Time) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
முழு நேரம்(Full Time)
கற்கை நெறி காலம் 4 வருடங்களாகும்.
இதில் முதல் இரண்டு வருடங்களுக்கான விரிவுரைகள்(lecture) வார நாட்களிலும் இறுதி இரண்டு வருடங்களுக்கான விரிவுரைகள்(lecture) வார இறுதி நாட்களிலும் நடைபெறும்.
அனுமதிக்கான தகைமைகள்.
* ஒரே அமர்வில் க.பொ.த உயர் தரப்பரீட்சையின் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்திருப்பதோடு அதில் பொருளியல் (Economics) மற்றும் கணக்கீடு (Accountancy) ஆகிய பாடங்களில் திறமைச்சித்தி (credit pass- C) பெற்றிருத்தல் வேண்டும்.
* க.பொ.த உயர் தரப்பரீட்சையின் பொருளியல் (Economics) மற்றும் கணக்கீடு (Accountancy) ஆகிய பாடங்களில் ஏதாவதொரு பாடத்தின் திறமைச்சித்திக்காக (credit pass- C) க.பொ.த தர சாதாரண பரீட்சையின் கணிதப்பாடத்தில் (Mathematics) திறமைச்சித்தி பெற்றிருப்பதானது பதிலீடாக கருதப்படும்.
மற்றும்
*க.பொ.த தர சாதாரண பரீட்சையில் ஆங்கிலப்பாடத்தில்(English Language) சாதராண சித்தி (ordinary pass-S) இருத்தல் வேண்டும்.
பகுதி நேரம்(Part Time)
கற்கை நெறி காலம் 4 வருடங்களாகும். 4 வருடங்களுக்குமான விரிவுரைகள்(lecture) வார இறுதி நாட்களிலேயே நடைபெறும்.
2012ம் ஆண்டுக்கு பின்னர் க.பொ.த உயர் தரப்பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த பின்வரும் தகைமைகளை கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
*ஒரே அமர்வில் க.பொ.த உயர் தரப்பரீட்சையின் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்திருத்தல்.
அல்லது
*Any of the certificate courses given below conducted by the Department of Technical Education & Training (DTET).
*Completion of National Certificate in Accounting Technicians.
*Completion of National Certificate in Business Studies.
*Completion of National Certificate in Accounting.
மற்றும்
Applicant should be employed in the relevant field in a government institution/public enterprise/recognized firm or self-employment (Entrepreneur).
பின்வரும் தகுதி உடையவர்களுக்கு அனுமதிக்கான தேவைப்பாடுகளில் திருப்தி மற்றும் இட வசதி போதுமானதாக காணப்படுகின்ற பொழுது அவர்களுக்கு முதல் வருடம் விலக்களிக்கப்பட்டு (exempted) நேரடிய இரண்டாம் வருடத்திற்கு இணையலாம்.
*Completion of the Higher National Diploma in Management / Business Administration/ Business Finance conducted by the (SLIATE).
*Completion of second year of the Higher National Diploma in Commerce conducted by the (SLIATE) or (DTET).
*Completion of the National Diploma in Business Studies conducted by the (SLIATE) or (DTET).
*University Degree in relevant field (Accountancy/ B.Com./ Marketing Management /Business Administration/ Business Finance/ Business /Human Recourse Management) recognized by the University Grand Commission (UGC).
*Completion of Executive level or CAB I and CAB II or Licentiate I and II conducted by the Institute of Chartered Accountants of Sri Lanka (ICASL).
*Completion of Part I and Part II of the Chartered Institute of Management Accountants (CIMA – UK).
*Completion of the Association of Accounting Technicians (AAT).
*Completion of the Associated Certified Management Accountants (ACMA) conducted by the Institute of Certified Management Accountants (CMA-Sri Lanka).
குறிப்பு,
பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 46/90 பிரகாரம் கணக்கியலில் உயர் தேசிய டிப்ளோமா ( HIGHER NATIONAL DIPLOMA IN ACCOUNTANCY - (HNDA) ஆனது ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற சாதாரண சித்தியிலான வணிகவியலில் (பொது) பட்டத்திற்கான (General Degree in Commerce (Ordinary pass) பதிலீட்டுதகைமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
HNDA பாடநெறி தொடரக்கூடிய sliate கிளைகள் .
Ampara – Hardy Badulla Dehiwala Galle
Gampaha Jaffna Kegalle Kurunagala Trincomalee Anuradhapura Batticaloa Rathnapura Samanthurai Tangalle
2.வணிக நிர்வாகத்தில் உயர் தேசிய டிப்ளோமா (HIGHER NATIONAL DIPLOMA IN BUSINESS ADMINISTRATION - (HNDBA)
அனுமதிக்கான தகைமைகள்.
*க.பொ.த உயர் தரப்பரீட்சையில் பொருளியல், வணிகக்கல்வி மற்றும் கணக்கீடு ஆகிய பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் அல்லது மேற்குறித்த பாடங்களில் 2 பாடங்களும் மூன்றாவது புவியியல், மனைப்பொருளியல், அரசியல் விஞ்ஞானம், தர்க்கம் மற்றும் அறிவியல் முறைகள்(Logic & Scientific Methods), விவசாய விஞ்ஞானம், இணைந்த கணிதம் மற்றும் வணிக புள்ளிவிபரவியல் போன்ற ஏதாவதொரு பாடத்தில் ஒரே நேரத்தில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
அல்லது
*தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தால்(Department of Technical Education) நடாத்தப்படுகின்ற கணக்கீட்டு தொழில்நுட்பவியலாலரில் தேசிய சான்றிதழ்(National Certificate in Accounting Technicians) கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
மற்றும்
*க.பொ.த தர சாதாரண பரீட்சையில் ஆங்கிலம்(English Language) மற்றும் கணிதத்தில்(Mathematics) சாதாரண சித்தி (ordinary pass-S) பெற்றிருத்தல் வேண்டும்.
HNDBA பாடநெறி தொடரக்கூடிய sliate கிளைகள் .
Dehiwala Galle Jaffna Kandy
3.வணிக நிதியியலில் உயர் தேசிய டிப்ளோமா(HIGHER NATIONAL DIPLOMA IN BUSINESS FINANCE - (HNDBF)
கற்கை நெறி காலம் – 03 வருடங்கள்
அனுமதிக்கான தகைமைகள்.
*க.பொ.த உயர் தரப்பரீட்சையில் பொருளியல், வணிகக்கல்வி மற்றும் கணக்கீடு ஆகிய பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் அல்லது மேற்குறித்த பாடங்களில் 2 பாடங்களும் மூன்றாவது புவியியல், மனைப்பொருளியல், அரசியல் விஞ்ஞானம், தர்க்கம் மற்றும் அறிவியல் முறைகள்(Logic & Scientific Methods), விவசாய விஞ்ஞானம், இணைந்த கணிதம் மற்றும் வணிக புள்ளிவிபரவியல் போன்ற ஏதாவதொரு பாடத்தில் ஒரே நேரத்தில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
அல்லது
*தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தால்(Department of Technical Education) நடாத்தப்படுகின்ற கணக்கீட்டு தொளில்நுட்பவியலாலரில் தேசிய சான்றிதழ்(National Certificate in Accounting Technicians) கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
மற்றும்
*க.பொ.த தர சாதாரண பரீட்சையில் ஆங்கிலம்(English Language) மற்றும் கணிதத்தில்(Mathematics) சாதாரண சித்தி (ordinary pass-S) பெற்றிருத்தல் வேண்டும்.
HNDBF பாடநெறியை Dehiwala SLIATE இல் மட்டுமே தொடர முடியும்.
4. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா(HIGHER NATIONAL DIPLOMA IN TOURISM AND HOSPITALITY MANAGEMENT (HNDTHM)
அனுமதிக்கான தகைமைகள்.
*க.பொ.த உயர் தரத்தில் பௌதீக விஞ்ஞானம் அல்லது உயிரியல் விஞ்ஞானம் அல்லது வர்த்தகம்(விரும்பத்தக்கது) அல்லது கலைத்துறைகளின் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மற்றும்
*க.பொ.த தர சாதாரண பரீட்சையில் ஆங்கிலம்(English Language) மற்றும் கணிதத்தில்(Mathematics) சாதாரண சித்தி (ordinary pass-S) பெற்றிருத்தல் வேண்டும்.
HNDTHM பாடநெறி தொடரக்கூடிய sliate கிளைகள்
Ampara- Hardy Badulla Dehiwala Galle Jaffna Kandy Nawalapitiya
5. முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா(HIGHER NATIONAL DIPLOMA IN MANAGEMENT - (HNDM)
அனுமதிக்கான தகைமைகள்
*க.பொ.த உயர் தரத்தில் ஒரே தடவையில் ஏதேனுமொரு பாடப்பிரிவில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருப்பதோடு க.பொ.த தர சாதாரண பரீட்சையில் ஆங்கிலம்(English Language) மற்றும் கணிதத்தில்(Mathematics) சாதாரண சித்தி (ordinary pass-S) பெற்றிருத்தல் வேண்டும்
அல்லது
*தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தால்(Department of Technical Education) நடாத்தப்படுகின்ற கணக்கீட்டு தொளில்நுட்பவியலாலரில் தேசிய சான்றிதழ்(National Certificate in Accounting Technicians) அல்லது வணிகக்கல்வி(பொது நிர்வாகம் / சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்) யில் தேசிய சான்றிதழ்(National Certificate in Business studies (Public Administration/Marketing) கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
HNDM பாடநெறி தொடரக்கூடிய sliate கிளைகள்
Ampara- Hardy Badulla Dehiwala Galle Jaffna Kandy kurunagala Nawalapitiya
6. ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா(HIGHER NATIONAL DIPLOMA IN ENGLISH)
அனுமதிக்கான தகைமைகள்
*க.பொ.த உயர் தரத்தில்(பழைய பாடத்திட்டம்) ஒரே தடவையில் ஏதேனுமொரு பாடப்பிரிவில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருப்பதோடு க.பொ.த தர சாதாரண பரீட்சையில் ஆங்கிலத்தில்(English Language) “C” சித்தி பெற்றிருத்தல் வேண்டும்
அல்லது
*க.பொ.த உயர் தரத்தில்(புதிய பாடத்திட்டம்) ஒரே தடவையில் ஏதேனுமொரு பாடப்பிரிவில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருப்பதோடு க.பொ.த தர சாதாரண பரீட்சையில் ஆங்கிலத்தில்(English Language) “C” சித்தி பெற்றிருத்தல் வேண்டும்
அல்லது
*கல்வியற்கல்லூரி( College of Education) யினால் நடத்தப்படுகின்ற ஆங்கில விசேடத்துவ ஆசிரியர் பயிற்ச்சி சான்றிதழ் அல்லது டிப்ளோமா (English specialist Teacher Training certificate; or the Diploma) பெற்றிருத்தல்.
அல்லது
*க.பொ.த உயர் தரத்தில்(புதிய பாடத்திட்டம்) ஒரே தடவையில் ஏதேனுமொரு பாடப்பிரிவில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருப்பதோடு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தால்(Department of Technical Education) நடாத்தப்படுகின்ற வர்த்தகம் மற்றும் கைத்தொழிலுக்கான ஆங்கிலத்தில் தேசிய சான்றிதழ்(National Certificate in English for Commerce, industry and further Education) பெற்றிருத்தல் அல்லது அதற்கு சமனான தகைமையை பெற்றிருத்தல்.
HNDE பாடநெறி தொடரக்கூடிய sliate கிளைகள்
Ampara- Hardy Badulla Dehiwala Galle Jaffna Kandy Kegalle Kurunagala Trincomalee Batticaloa Nawalapitiya Rathnapura Sammanthurai Tangalle
7. தகவல் தொழில்நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா(HIGHER NATIONAL DIPLOMA IN INFORMATION TECHNOLOGY - (HNDIT)
அனுமதிக்கான தகைமைகள்
*க.பொ.த உயர் தரத்தில் பௌதீக விஞ்ஞானம் அல்லது உயிரியல் விஞ்ஞானம் அல்லது வர்த்தகம்(விரும்பத்தக்கது) அல்லது கலைத்துறைகளின் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மற்றும்
*க.பொ.த தர சாதாரண பரீட்சையில் ஆங்கிலம்(English Language) மற்றும் கணிதத்தில்(Mathematics) சாதாரண சித்தி (ordinary pass-S) பெற்றிருத்தல் வேண்டும்
HNDIT பாடநெறி தொடரக்கூடிய sliate கிளைகள்.
Ampara- Hardy Badulla Colombo Dehiwala Galle Gampaha Jaffna Kandy Kegalle Kurunagala Trincomalee Rathnapura Tangalle Vavuniya
2). இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழம் (Ocean University of Sri Lanka)
இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழம் ஆனது பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட பட்டம் வழங்கும் நிறுவனமாகும்.
இந்நிறுவனமானது கடல் அறிவியல் (Marine Science) மற்றும் கடல் பொறியியல் ( Nautical Engineering) துறைகளில் நான்கு பட்டங்கள்(Degrees) வழங்கவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகத்துறை மாணவர்கள் இப்பல்கலைக்கழத்தில் பின்வரும் பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
1. B.Sc in Maritime Transportation Management and Logistics
கற்கை நெறி காலம்- 04வருடங்கள்
அனுமதிக்கான தகைமைகள்
*க.பொ.த உயர் தரப்பரீட்சையில் ஒரே தடவையில் எப்பாடப்பிரிவிலேனும் தோற்றி மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்
*சமுத்திரவியல் பல்கலைக்கழத்தினால் நடாத்தப்படும் உளச்சார்புப்பரீட்சை (Aptitude test) மற்றும் நேர்முகப்பரீட்சை என்பவற்றில் சித்தியடைந்த மாணவர்கள் கற்கை நெறிக்காக அனுமதிக்கப்படுவர்.
2. B.Sc in Coastal and Marine Resources Management
கற்கை நெறி காலம் -04 வருடங்கள்
அனுமதிக்கான தகைமைகள்
*க.பொ.த உயர் தரப்பரீட்சையில் ஒரே தடவையில் எப்பாடப்பிரிவிலேனும் தோற்றி மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்.
*சமுத்திரவியல் பல்கலைக்கழத்தினால் நடாத்தப்படும் உளச்சார்புப்பரீட்சை (Aptitude test) மற்றும் நேர்முகப்பரீட்சை என்பவற்றில் சித்தியடைந்த மாணவர்கள் கற்கை நெறிக்காக அனுமதிக்கப்படுவர்.
*இப்பாட நெறியின் முதல் நான்கு காலாண்டுகளில் (Semester) திறமைகளை வெளிப்படுத்துகின்ற மாணவர்கள் B.Sc Honors Degree க்காக தெரிவுசெய்யப்படுவர்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் ஏனைய அரச உயர் கல்வி நிறுவனங்களில் வர்த்தகத்துறை மாணவர்களுக்குள்ள கற்கை நெறிகள் தொடர்பில் பதிவேற்றம் செய்கின்றேன்.