Government Muslim Mixed School

Government Muslim Mixed School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Government Muslim Mixed School, School, Saintamaruthu.

13/12/2018

சம்சுதீன் அதிபர் ; ஒழுக்கம் போதிக்க நினைக்கும் அதிபர்களுக்கு ஒரு உதாரண புருஷர்.

பொதுவாக நமது பாடசாலைகளில் அதிபர்கள் தமது நிர்வாக பணிகளில் மாத்திரம் முடங்கி கிடக்கும் ஒரு நிலையில் முன்னாள் முஸ்லிம் கலவன் பாடசாலையின்(GMMS) அதிபர் சம்சுதீன் சேர் அவர்கள் இதற்கு விதிவிலக்கானவர். நிர்வாகப் பணிகளுக்கு அப்பால் தனது பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தை விதைப்பதிலும், முறைப்படுத்துவதில் இவரை போல் ஒரு அதிபர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்.

இவர் அதிபராக இருந்த காலத்தில் முஸ்லிம் கலவன் பாடசாலையில் படித்த மாணவர்களுக்கு தெரியும் அவர்கள் தமது அதிபரை ஒரு நிர்வாகியாக காண்பதைவிட ஒரு ஒழுக்காற்று ஆசிரியராகவே நிறைய நேரம் காண்பார்கள். பழைய கல்லூரி வாழ்க்கை நினைவுகளை மீட்டும் போது சம்சுதீன் சேர் தொடர்பாக வரும் முதல் வின்பம் நாடா கழட்டப்பட்ட பிரம்புடன் அவன் ஒரு நாளைக்கு பல தடவைகள் வகுப்பறைகளுக்கு வலம் வரும் காட்சியே. அத்தனை அதிபருக்கு உரித்தான பணிகளை குறைவில்லாமல் செய்யும் அதேசமயம் தமது பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒவ்வொருவரினதும் ஒழுக்கம் தொடர்பான அதிபருக்கு கரிசனை இருந்தது.

சம்சுதீன் அதிபர் உண்மையில் தகரத்தை பென்னாக்கினார் என்றே சொல்ல வேண்டும். எவ்விதமான அடிப்படை வசதிகளையும் கொண்டிராத ஒரு பாடசாலையை பொறுப்பெடுத்து சாய்ந்தமருது கோட்டத்தில் அதிகமாக புலமைப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களை உற்பத்திசெய்யும் மையமாக மாற்றினார். அபூர்வமாக அதிபருக்கு ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவரினதும் அடைவு மட்டம் தெரிந்திருந்தது. தான் சந்திக்கும் பெற்றோரிடம் உங்களுடைய மகன் அல்லது மகள் புலமைப்பரிசில் பாஸ் பண்ணுவார் என்று கூறினார் அது அவ்வாறே நடந்தேறும்.

அதிபராக இருந்த காலத்தில் எத்தனை வகுப்பாசிரியர்கள் இருந்தும் சம்சுதீன் சேர் பெரும்பாலும் தனது கையாலேயே மாணவர்கள் இடாப்பினை எழுதுவார். அவரது பதவிக்காலத்தில் கல்லூரியில் அனைத்து விடயங்களும் அதிபர் வசமே இருந்தது.

இன்று பாடசாலைகளில் நிர்வாகத்தில் மட்டும் முடங்கிக் கிடக்கும் அதிபர்கள்களுக்கு சம்சுதீன் அதிபரிடமிருந்து நிறைய முன்மாதிரிகள் உள்ளன.

ஷஃபி எச். இஸ்மாயில்
பழைய மாணவன்,

19/03/2013

we finish our school Inter house sports meet for the year of 2013 :D

Address

Saintamaruthu
32280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Government Muslim Mixed School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category