24/09/2021
*கல்லூரி வளர்ச்சியின் அடுத்த மைல் கல்*
-------------------------------------
1942ல் தரம்:1 தொடக்கம் தரம்:5 வரையிலான வகுப்புகளையும்,12 மாணவர்களையும் கொண்டு ஆரம்ப பிரிவு பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இ/எம்பி/எக்பர்த் தமிழ் வித்தியாலயம் அன்று தொடக்கம் படிப்படியான வளர்ச்சியின் 1994 காலப் பகுதியில் இடைநிலை பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. இடைநிலை பாடசாலையாக பல்வேறு துறைகளிலும் சாதனைகளை தன்னகத்தே கொண்டு இயங்கிய எமது கல்லூரி ஆண்டு 2017.05.12 அன்று எம்பிலிபிட்டிய கல்வி வலயத்தில் க.பொ.த (உ/த) பாடசாலையாக எழுச்சி பெற்றது.
எமது கல்லூரி இன்று வரை பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து சாதித்த இ/எம்பி/எக்பர்த் தமிழ் வித்தியாலயம் தனது பெயரினை "இ/எம்பி/எக்பர்த் தமிழ் மகா வித்தியாலயம்" மெருகூட்டிக்கொண்டது.
2021ம் ஆண்டு 79வது வருடத்தில் கல்லூரி வளர்ச்சின் அடுத்த மைல் கல்லாக கடந்த வருடம் 2020ம் வருடம் கொரோனா எனும் கொடிய வைரஸின் பிடியில் சிக்குண்ட எமது கல்லூரி க.பொ.த (ச/த) மாணவர்கள் சாதித்து காட்டியதுடன் எமது கல்லூரின் தொடர்ச்சியான வளர்ச்சியில் கைகோர்த்துள்ளனர்.
கல்லூரியின் அதிபரின் வழிகாட்டலின் கீழ் வகுப்பாசிரியர் மற்றும் கணித ஆசானாகிய H.சுபைர் அவர்களின் வழிநடத்தலுடன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக 8A 1B என்ற பெறுபேற்றினை செல்வி.S.கவிஷாயினி என்ற மாணவி பெற்று கல்லூரிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக(2018, 2019) க.பொ.த (ச/த) பரீட்சைக்கு தோற்றி க.பொ.த (உ/த) செல்லும் மாணவர்களின் வளர்ச்சி விகிதம் அதிகமாகும். அதே போல 2020ம் ஆண்டிலும் 28 மாணவர்கள் பரீட்சையை எதிர்கொண்டு 8A 1B என்ற பேறுபேற்றுடன் 18 மாணவர்கள் நேரடியாக க.பொ.த (உ/த) தெரிவாகியுள்ளனர். இது 64% பெறுபேற்று விகிதமாகும்.
இதற்காக மாணவர்களை வழிகாட்டிய எமது முன்னாள் அதிபர் திருவாளர் V.பாஸ்கரன் ஐயா அவர்களுக்கும் வகுப்பாசிரியர் H.சுபைர் அவர்களுக்கும் பாட ஆசிரியர்களுக்கும் அம்மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்கிய எமது கல்லூரியின் ஏனைய ஆசிரியர்களுக்கும், ஆசிரிய ஆலோசகர்களுக்கும், வெளியில் இருந்து வருகை தந்த வளவாலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது இ/எம்பி/எக்பர்த் தமிழ் மகா வித்தியாலயம்.
நன்றி.
S.குமுதினி,
அதிபர்.
_______________________________________
பாடங்களும் பெறுபேற்று விகிதமும்
சைவநெறி – 95%
கத்தோலிக்கம் – 100%
தமிழ் – 100%
ஆங்கிலம் – 96.43%
விஞ்ஞானம் – 21.43%
கணிதம் – 64.29%
வரலாறு – 50%
சிங்களம் – 100%
குடியியல் – 80%
வணிகம் – 83%
சித்திரம் – 100%
இலக்கிய நயம் – 100%
நடனம் – செயன்முறை பரீட்சையின் பின்னர் பெறுபேறு வெளியாகும்
ICT – 60%
சுகாதாரம் - 100%