16/07/2025
பசுமை நிறைந்த சூழலை அழகென கொண்டு அமையப்பெற்றவள் எங்கள் அன்னை.
பல ஆயிரம் கல்விமான்களை இவ்வுலகிற்காக வளர்த்திட்டவள். நாங்களும் தற்போது வளர்க்கப்படுகின்றோம். சேவைக்காக வந்து போன அதிபர்கள் ஏராளம்
அறிவுக்கண்ணை திறந்திட வந்து போன ஆசான்களோ சில ஆயிரம்
ஒன்பது தசாப்தங்கள் கடந்த எமது அன்னையின் வரலாறு.
91 வயதாகியும் அவளுக்கு இல்லை முதுமை என்றும் அவள் இளமை தான்
காரணம்
நேசித்தவர்கள் கடந்து போக
நேசமாய் இருப்பவர்கள் நான் நீங்கள் வாழ
நேசிக்கப் போகிறவர்கள் என் சந்ததிகள் சாதிக்க
எமது அன்னையின் மகிமையை கூறி வளர்த்திடுங்கள்.
இன்னும் ஒன்பது வருடங்களில் நூற்றாண்டை அடையப் போகும் எமது அன்னையவள்
காண வேண்டும் பல அற்புதங்களை
நல்லெண்ணங்களின் ஊடாக நற்செயல்களை செய்து பார்போற்றும் அளவில் உயர்ந்திட பாடசாலை சமூகம் ஆகிய நாங்கள் கைகோர்ப்போம்.
உயர்த்திடுவோம் உயர்ந்திடுவோம்.
இந்த 91 வது வயதில் உறுதியான பழைய மாணவர் சங்கம் அமைய பெற்றிருப்பது அன்னைக்கு கிடைத்த அன்பு பரிசு.
மனம் கொண்டு எண்ணத்தில் திண்ணத்துடன் 21ம் நூற்றாண்டில் ஏற்படும் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய நட்பிரஜைகளை உருவாக்கி அதனூடாக வரப்போகும் அன்னையின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடிட அனைவரும் வழி சமைப்போம்.
வாழ்க வளர்க வளர்த்திடுங்க எமது அன்னையை.
இ/எம்பி மாதம்பை இலக்கம் 2 தமிழ் வித்யாலயம் ஆகிய எமது அன்னைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.