25/05/2022
*நன்றி நவிலல்*
*யாழ்/ மகாஜனாக் கல்லூரியின் '87 O/L '90 A/L* அணியினரின் 'கல்விக்கு கரம் கொடுப்போம்' எனும் உன்னதமான செயற்பாட்டின் மூலம்
*இராஜகிரிய ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தின்*
மிக நீண்ட கால குறைபாடுகளுள் ஒன்றான போட்டோ பிரதி அச்சு இயந்திர கனவு இன்று நனவாகியுள்ளதை இட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
யாழ்/ மகாஜனாக் கல்லூரியின் '87 O/L '90 A/L அணி மைந்தர்களால் வழங்கி வைக்கப்பட்ட ரூபா 248,400/- பெறுமதியான நிதியுதவியின் மூலம்
JOHN KEELS நிறுவனத்தில் இருந்து
TOSHIBA DIGITAL PHOTO COPIER
E- STUDIO 2329 A வகை இயந்திரம் கொள்வனவு செய்யப் பட்டது.
அதன் மூலம்
எமது பாடசாலையின் கற்றல் - கற்பித்தல் மற்றும் நிர்வாக செயற்பாடுகளை செவ்வனே முன்னெடுக்கத் துணை புரிந்த யாழ்/ மகாஜனாக் கல்லூரியின்
'87 O/L '90 A/L அணி மைந்தர்கள் ஒவ்வொருவருக்கும்
அத்துடன் இப்பணியை சுயமாக முன்வந்து செவ்வனே நிறைவேற்றிய எமது பாடசாலையின் சிரேஸ்ட பிரிவுத்தலைவரும்,
கணித பாட ஆசிரியருமான திரு K.சீராளன் அவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இராஜகிரிய ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலய வரலாற்றில்
இவ் உன்னத பணி என்றும் அழியாச் சுடராக நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.🙏🏻🙏🏻🙏🏻